• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள் வரிசை

2015_dec_pinju47
டிசம்பர்

அமைவிடமும் இயற்கை அமைப்பும்:

¨    டொமினீக காமன்வெல்த் நாடு என்று அழைக்கப்படும் இந்நாடு கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடாகும்.

¨    பிரெஞ்சு தீவுகளான குவார்டனோப் தீவுகள் மற்றும் மார்டின்க்யூ தீவுகளுக்கு இடையில் தனித் தீவாக அமைந்துள்ளது.

¨    இதன் மொத்தப் பரப்பளவு 750 சதுர கிலோ மீட்டர்.
¨    நாட்டின் மிக உயரமான இடம் மொரின்.
¨    தலைநகரம் ரூசோவ்.
¨    டொமினீக தீவு பெருமளவு மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது.

¨    உலகின் இரண்டாவது பெரிய வெந்நீர் ஏரியைக் கொண்ட நாடு இது.
¨    இங்கு ஏராளமான அருவிகளும் நீரூற்றுகளும் ஆறுகளும் அமைந்து நாட்டின் இயற்கை அழகைக் கூட்டுகின்றன.

¨    மலைப்பாங்கான இத்தீவினை, லேயூ ஆற்றுச் சமவெளி இரண்டாகப் பிரிக்கிறது.
¨    இதன் காலநிலை கனமழைப் பொழிவுடன் கூடிய கதகதப்பான வெப்பமண்டல சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அருகில் உள்ள தீவுகளில் இல்லாத பல்வேறு விலங்குகள் இக்காடுகளில் உள்ளன.

¨    இந்நாட்டின் தேசியப் பறவையான சிஸ்ஸரவ் (ஷிவீssமீக்ஷீஷீu) கிளி இந்தத் தீவில் மட்டுமே காணப்படும் பறவையாகும். இந்நாட்டின் தேசியக் கொடியில் இந்தப் பறவை இடம் பெற்றுள்ளது.

மக்களும் மொழியும்:

¨    இந்நாட்டின் மக்கள் தொகை 2009 பொதுக் கணக்கெடுப்பின்படி 72,660 பேர். மக்கள் நெருக்கம் சதுர கிலோ மீட்டருக்கு 105 பேர்.

¨    இதன் பெரும்பான்மை மக்கள் ஆப்பிரிக்கர்களாகவோ அல்லது ஆப்பிரிக்க _அய்ரோப்பிய கலப்பினத்தினராகவோ உள்ளனர்.

¨    இதன் ஆட்சிமொழி ஆங்கிலம். மேலும் பிரெஞ்சு, படாய்ஸ் மொழிகளும் பேசப்படுகின்றன.
¨    இந்நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். அண்மையில் சில ஆண்டுகளாக புரோட்டஸ்டண்ட் மதப்பிரிவினர் அவர்களது தேவாலயங்களை அமைத்து வருகின்றனர்.

¨    மிகச் சிறிய அளவில் இஸ்லாமியர்களும் வசித்து வருகின்றனர். அண்மையில் ரோஸ் பல்கலைக்கழகம் அருகில் முதல் மசூதி கட்டப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியும் பொருளாதாரமும்

¨    இதன் நாணயம் கிழக்கு கரீபியன் டாலர்.
¨    நாட்டின் முக்கிய பொருளாதாரக் காரணி விவசாயம் சார்ந்தது.
¨    முக்கிய விளைபொருள் வாழைப்பழம். ஏனைய விளைபொருட்கள் காப்பி, மாங்காய் மற்றும் பப்பாளி போன்றவையாகும்.

¨ அண்மைக்காலமாக இந்நாடு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கான மய்யமாகி வருகிறது. குறிப்பாக வெளியில் இருந்து செயல்படும் வங்கிகள் இந்நாட்டில் ஏராளம் அமைந்துள்ளன.

¨    இதன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பணியில் சுற்றுலாத் துறை கைகொடுக்கிறது.

வரலாற்றுப் பார்வை

¨    அய்ரோப்பியர்களின் வருகைக்கு முன் கரீபியர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
¨    1493 நவம்பரில் முதல் அய்ரோப்பியராக கிரிஸ்டோபர் கொலம்பஸ் போய்ச் சேர்ந்தார்.
¨    அதன்பின் சில ஆண்டுகள் கரீபியர்களிடமே இருந்த இந்நாடு 1632இல் பிரெஞ்சு காலனியாதிக்க நாடானது.
¨    1783இல் பிரிட்டிஷ் இந்நாட்டிற்கு வந்து கடும் போராட்டத்திற்கிடையே 1805இல் தமது காலனி நாடாக்கியது.

¨    1833இல் லீவர்ட் தீவுகளுடன் இணைந்து பின்னர் 194—-0இல் வின்வர்ட் தீவுகளுடன் இணைப்பாக்கம் செய்து கொண்டது.

¨    1958 முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு அங்கமாக இருந்த இந்நாடு 1978 நவம்பர் 3இல் தனிநாடானது.
¨    1979 மத்தியில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 1980இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் டொமினிக்கா சுதந்திர கட்சி வெற்றிபெற்று ஈஜினியா சார்லஸ் முதல் பெண் கரீபிய பிரதமராக பதவியேற்றார்.

அரசு முறை

¨    இந்நாடு 10 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அவை றிணீக்ஷீவீsலீமீs என அழைக்கப்படுகின்றன.

¨    இது ஒற்றையாட்சியைக் கொண்ட பாராளுமன்ற குடியரசு நாடாகும்.
¨    நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார். அரசாங்கத்தின் முழு அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சர் குழுவிடம் உள்ளது.

¨    தற்போதைய குடியரசுத் தலைவர் சார்லஸ் சாவரின்.
¨    தற்போதைய பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரீட்.

சுற்றுலா

¨    மோர்னி ட்ராயிஸ் பிட்டன்ஸ் தேசிய பூங்கா அய்.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் தொல்லியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

¨    இந்நாடு காலிபிஷி போன்று அழகிய கடற்கரைப் பகுதிகளை சிறந்த இயற்கை சுற்றுலாத் தளங்களாகக் கொண்டுள்ளது.

¨    இதன் கடலடி எரிமலைச் சுவடுகள் ஆழ்கடல் நீச்சல்காரர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.
¨    கேபிரிட் தேசியப் பூங்கா சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மய்யமாகும்.
முக்கிய ஊடகங்கள்

¨    இந்த நாட்டின் இரண்டு முக்கியச் செய்தித்தாள்கள் ‘The Sun’, ‘The Chronical’.
¨    இரண்டு தேசிய தொலைக்காட்சி நிலையங்களும், சில வானொலி நிலையங்களும் உள்ளன.

20
மாஞ்சாமாஞ்சா10th December 2015
பிஞ்சு கவிதைகள்11th December 2015பிஞ்சு கவிதைகள்

மற்ற படைப்புகள்

டிசம்பர்
27th November 2015 by ஆசிரியர்

Weapons of mass instruction

Read More
2015_dec_pinju34
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2015_dec_pinju19
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2015_dec_pinju36
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

மொத்தம் எவ்வளவு?

Read More
2015_dec_pinju22
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 27

Read More
டிசம்பர்
2nd December 2015 by ஆசிரியர்

பிழைகளைத் திருத்துங்கள்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p