• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஹோமோ நலேடி: புதிய மூதாதை!

2015_dec_pinju17
டிசம்பர்

 

மனிதன் எப்படித் தோன்றினான்? உயிர்கள் எப்படித் தோன்றின போன்ற கேள்விகளுக்கு “எல்லாம் அவன் செயல்” என்று யாரோ நேரடியாக ஜீன்ஸ், டி–சர்ட்டுடன் படைத்ததைப் போல பதில் சொல்வார்கள் மதவாதிகள். ஆனால் அறிவியல்தான் அதற்கான விடையைத் தேடித்தேடி சொல்லிக் கொண்டிருக்கிறது.

டார்வினின் ஆராய்ச்சிகள் இத்துறையில் பெரும் புரட்சியைச் செய்தன. ஆனால் அவர் கண்டுபிடித்ததையும் விட, புதிய புதிய செய்திகள் நாளும் வந்து கொண்டிருக்கின்றன. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று பொதுவாகச் சொல்லும் போது கிண்டலடித்தார்கள்.

அதை இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து, மனித இனவளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும்போது வியப்பு மேலிடும் அளவுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைக்கின்றன. இவ்வாறு வரும் புதிய ஆய்வுகள், பழைய கருதுகோள்களை மாறச் செய்கின்றன.

மனித இன வரலாற்றின் தொடக்கப் புள்ளியை இப்போது மாற்றி வைக்க வேண்டிய தேவையை உருவாக்கியிருக்கிறது ‘ஹோமோ நலேடி’ பற்றிய கண்டுபிடிப்பு.

மனிதஇனத்தின் பரிணாம வளர்ச்சி ஆப்பிரிக்காவில் சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாக ஆரம்பித்தது. பரிணாம வளர்ச்சி (Evolution) என்பது ஒரு நீண்ட தொடர் நிகழ்வு. (Process) இந்த நிகழ்வை அறிந்து கொள்ள படிமங்கள் (fossils) அதிக பங்களிக்கின்றன.

படிம ஆராய்ச்சியாளர்கள் (Paleontologist) மனித பரிணாம வளர்ச்சிக்கு சான்றாக அமையும் படிமங்களைக் கண்டறிந்தும் அதை ஆராய்ந்தும் மனித உடல் கூறுகளின் மாற்றங்களை விரிவாக எடுத்துரைக்கின்றனர். மனித பரிணாம வளர்ச்சியை (Human Evolution) அறிந்துகொள்ள படிம ஆராய்ச்சியாளர்களைத் (Palentologist) தவிர மற்ற பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள் (Physical Anthropology, Primatology, Archaeology, Genetics, Evolutionary Psychology) இதற்கு முக்கிய பங்களிக்கின்றனர்.

தற்போதிருக்கும் மனித இனத்தின் முன்னோர்களின் பரிணாம வளர்ச்சி சுமார் 3 முதல் -4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிருக்கலாம் என நம்புகின்றனர். இதற்கு பல படிமச்சான்றுகள் உள்ளன.

அக்காலத்தில் இரண்டு இனங்கள் பிரிந்து, பரிணாம வளர்ச்சியடைந்து ஒன்று Gorillas & chimps ஆக உருமாறின. மற்றொன்று மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைய துவங்கியது. இந்த வளர்ச்சியில் பல மில்லியன் ஆண்டுகளில் பல உடல் கூறுகளுடன் மனித இனங்கள் (Human Species) வாழ்ந்தன,

அவற்றில் Homo habilis,   Homo erectus, Homo ergaster,  Homo floresiensis, Homo neanderthal  குறிப்பிடத்தக்கன.

மனிதப் பரிணாம வளர்ச்சியில் முக்கிய உடல் கூறுகளின் மாற்றங்கள் :

1.    Bipedalism – இரு கால்களுடன் நடந்தது.
2.    Increase in Cranial Capacity – – மண்டையோடு அளவு பெருக ஆரம்பித்தது.
3.   Reduction of Canine teeth – கோரைப் பற்கள் தேய ஆரம்பித்தது.
4.    Development of Chin – தாடை வளர்ச்சியடைந்தது.
5. Development of Vocal box – குரல் தண்டு வளர்ச்சியடைந்தது.
6.    Evolution of Sweat Glands — வியர்வைச் சுரப்பிகள் பரிணாம வளர்ச்சியடைந்தது.
7.     Lose of Body hair – உடல் ரோமங்கள் உதிர ஆரம்பித்தது.
8.    Change of tental arcade from being “U” shoped to parabolic— – பற்களின் அமைப்பு U வடிவத்திலிருந்து பரவளைய வடிவத்திற்கு மாறுகிறது.
9.     Development of Styloid Process – முள்ளெழும்பு வளர்ச்சி
10.     Evolution of concealed Ovulation – மறையுண்ட அண்ட விடுப்பின் பரிணாம வளர்ச்சியைக் காண முடிவது.

மனித பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பல மனிதப் படிம சான்றுகள் பல கண்டங்களில் கண்டறியப்பட்டு வருகின்றன. அதிக அளவிலான பல மனித இனப் படிமங்கள் ஆப்பிரிக்காவிலேயே கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வகையில் தற்போது நடைபெற்று வரும் மனிதப் பரிணாம ஆராய்ச்சியில் ஒரு புது மனித இன படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றிய தகவல்களை விரிவாகக் காண்போம்.

Homo naledi என்கின்ற இந்த புது மனித இனப் படிமங்கள், தென் ஆப்பிரிக்காவில் உள்ள Johannesburg இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள “Rising Star” குகை அறையில் 40 மீட்டர் மேற்பரப்பின் கீழ் உள்ளதை 2013 ஆம் ஆண்டு ரிக் அண்டர் மற்றும் ஸ்டீவன்டக்கர் (Reck Hunder and Steuen Tucker) ஆகியோர் கண்டுபிடித்தனர்.

ஆனால், 2015 செப்டம்பரில் தான் ஹோமோ நலேடி (Homo naledi) படிமங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான விவரங்களை பல்வேறு நாடுகளைச் சார்ந்த 47 ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு அறிவித்தது.

இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான லீ பெர்கர் (Lee Berger, University of Witwatersrand) அவர்களே இந்த புது மனித இன படிமங்களை “Homo”  இனத்தைச் சார்ந்தவை என்று உறுதிபடுத்தினர்.

சிசோதோ மொழியில் (தென் ஆப்பிரிக்க மொழிகளில் ஒன்று) “Naledi” என்றால் “நட்சத்திரம்” என்பது பொருள். ஆராய்ச்சியாளர்கள் தற்போது 1500 Homo  naledi படிமத் துண்டுகளைச் சேகரித்துள்ளனர். இத்துண்டுகளை ஆராய்ந்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டன. 15 தனிநபர்களின் உடல் எலும்புகளாக இருப்பது.

இந்த 15 தனிநபர்களின் படிம எலும்புகளிலிருந்து அவர்கள் பல வயதிற்கு  (குழந்தைகள், இளம்பருவத்தினர், முதியவர்கள்) உட்பட்டவர்கள் என தெரிகிறது. இன்னும் பல ஆயிரக்கணக்கான படிம எலும்புகள் குகை அறையில் மறைந்துள்ளன. இந்த புது மனித இன படிமங்களிலிருந்து அறியப்படும் வியக்கத்தக்க உடல் கூறுகள்:

1. Homo naledi  எலும்புகளின் அளவிலிருந்து அவை மனித குரங்கு (Apes) மற்றும் நவீன மனித (Modern human – Homo Sapiens) உடல் கூறுகளின் கலவையாக அமைந்துள்ளது.

2. அதன் பற்கள் மிக சிறியதாகவும், எளிமையாகவும் இருக்கின்றது.

3. மூளையின் அளவு மிக சிறியதாகவும், மனிதக் குரங்கின் மூளைக்கு இணையான அளவிலும் இருந்துள்ளது.

4. அதன் மார்புப் பகுதி (Thorax) மனிதக் குரங்கினைப் போலவும் அதன் கைகள் நவீன மனிதக் கைகளைப் போலவும் அமைந்துள்ளது. இதனால் அவை கற்கருவிகளை உருவாக்க உகந்ததாக இருந்திருக்கும்.

5. அதன் பாதம் மற்றும் கணுக்கால் எலும்புகளிலிருந்து அவை நிமிர்ந்து நடந்துள்ளன என்பது புலனாகிறது. ஆனால் அதன் விரல்கள் வளைந்திருப்பதன் மூலம் அவை மரத்தில் மனித குரங்கினைப் போல் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

Homo naledi  படிமத் துண்டுகள் பாறைகளுடன் உறையாமல் இருப்பதால் அவற்றைக் கால அளவீடு (dating) செய்ய கடினமாக உள்ளது. Homo naledi படிமத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ள ‘Rising Star’ குகையில் உள்ள Dinaledi
அறையை அடைவது மிகவும் கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வகையில் Homo naledi இன மக்கள் எவ்வாறு இக்குகையை அடைந்தனர் என்பதைப்பற்றிய ஆராய்ச்சியில் பல கருத்துக்களை அறிஞர்கள் எடுத்துரைக்-கின்றனர். அவற்றில் Homo naledi இன மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இக்குகைக்குள் கடினமாக நுழைந்து அங்கிருந்து வெளியே வர இயலாமல் சிக்கிக்கொண்டு இறந்திருக்கலாம் என்பது மிகவும் ஏற்கத்தக்க கருத்தாகும். வேறு சில அறிஞர்கள் Homo naledi மக்கள் இக்குகை அறையை இறந்தவர்களின் உடலை அகற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

இன்னும் Homo naledi  பற்றிய பல கேள்விகளுக்கான பதில்களை ஆராய்ச்சி-யாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் ஆராய்ச்சிகளிலிருந்தே அறிந்து கொள்ள இயலும். –

– தமிழ் தீபிகா

20
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு11th December 2015
மின்னும் கடல் ஆமை17th December 2015மின்னும் கடல் ஆமை

மற்ற படைப்புகள்

2015_dec_pinju26
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிஞ்சினும் பிஞ்சுகளுக்கு…

Read More
2015_dec_pinju18
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பேரறிவுக்கான ஆயுதம்

Read More
2015_dec_pinju1
டிசம்பர்
17th December 2015 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More
2015_dec_pinju6
டிசம்பர்
17th December 2015 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை

Read More
டிசம்பர்
28th November 2015 by ஆசிரியர்

Tongue Painter

Read More
2015_dec_pinju19
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p