• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மின்னும் கடல் ஆமை

2015_dec_pinju11
டிசம்பர்

அண்மையில் சாலமன் தீவில் (Solomon Islands) அறிவியலாளர்கள் முக்குளித்த போது (Diving) ஓர் அரிய வகை கடல் ஆமையைக் கண்டுபிடித்தனர். அது மிளிரும் (Biofluorescence) ஊர்வனவற்றில் முதல் பதிவாகும்.

இந்த கடல் ஆமை நியான் (Neon) பச்சை மற்றும் சிவப்பு வண்ணத்தில் மின்னக் கூடியது. இந்த ஆக்ஸ்பில் (Hawksbill) கடல் ஆமை மிக வேகமாக அழிந்துவரும் உயிரினங்களுள் ஒன்று. அதன் ஒளிரும் தன்மையின் காரணமாக மேற்பரப்பில் விழக்கூடிய நீலநிற ஒளியை பிரதிபலித்து மற்ற வண்ணங்களாக (Red, Green & Orange) வெளிப்படுத்துகின்றன.

உயிரியல் ஒளிரும் (Bioluminescence) தன்மையும், உயிரியல் மிளிரும் (Biofluore scence) தன்மையும் வேறுபாடுடையது. உயிரியல் ஒளிரும் தன்மையில் உயிரினங் கள் தன்னிச்சையாகவே ஒளியை உற்பத்தி செய்யக்கூடிய தன்மையுடையதாக இருக்கும். உயிரியல் மிளிரும் தன்மை பொதுவாக இரையை ஈர்க்கவும், தன்னை பாதுகாக்கவும் உயிரினங்கள் பயன்படுத்துகின்றன.

அண்மையில் செய்த ஆராய்ச்சியில் மிளிரும் தன்மைமிக்க பலவகையான கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தன்மை கடல்வாழ் ஊர்வனவற்றில் (Marine Reptile) உள்ளது என்பது வியப்பிற்குரிய ஓர் அரிய கண்டுபிடிப்பாகும்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் டேவிட் க்ருபர் (David Gruber,  University of New York) சாலமன் தீவில் 2015 ஜூலை மாத கடைசியில் மிளிரும் தன்மையுடைய பவழப் பாறைகளையும், சிறிய சுறா மீன்களையும் ஆவணப்படுத்துவதற்காக முக்குளித்தபோது இந்த அரிய வகையான ஆக்ஸ்பில் கடல் ஆமையைக் கண்டுபிடித்தார்.

அவர் இதைப் பற்றிக் கூறும்போது, “சிறிது தூரம் அந்த கடல் ஆமையைப் பின் தொடர்ந்து அதன் மிளிரும் தன்மையைப் பதிவு செய்தேன் அதன்பிறகு அத்தீவில் வாழும் மக்களிடம் இந்த கடல் ஆமையைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தபோது, சிலர் அக்கடல் ஆமைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

பதுக்கி வைத்த ஆமைகளை ஆராய்ந்தபோது அவைகள் அனைத்தும் மிளிரும் தன்மையினால் சிவப்பு வண்ணத்தை வெளிப்படுத்தின. ஆக்ஸ்பில் கடல் ஆமைகள் இந்த மிளிரும் தன்மையினால் கடற்படுக்கையில் அமையப் பெற்றுள்ள பவழப்பாறைகளைப் போலவே காணப்படுவதால் அவைகளைக் காண்பது அரிதுஞ என்றார்.

டேவிட் க்ருபர் (David Gruber) அவர்கள், ஆக்ஸ்பில் கடல் ஆமை வெளிப்படுத்தும் சிவப்பு நிறத்திற்கு அதன் ஓட்டில் இருக்கப் பெறும் பாசிகளே காரணம் எனவும் அதன் பச்சை நிற வெளிப்பாடு அவற்றின் மிளிரும் தன்மையினாலேயே வெளிப்படுகின்றன எனவும் கருதுகின்றார்.

இந்த ஆக்ஸ்பில் கடல் ஆமைகளின் எண்ணிக்கை உலகில் மிகவும் குறைவாக உள்ளதால் இந்த இனத்தைப் பற்றி ஆராயவும், படிக்கவும் இயலாத நிலை உள்ளது. ஆனால் இந்த ஆக்ஸ்பில் கடல் ஆமை இனத்திற்கு மிகவும் நெருக்கமான பசுங் கடல் ஆமைகளின் (Green Sea Turtle)  தன்மைகளை ஆராய்வதன் மூலமாக மிளிரும் தன்மையுடைய ஆக்ஸ்பில் கடல் ஆமைகளைப் பற்றி அறியலாம் என டேவிட் க்ருபர் (David Gruber) தெரிவிக்கிறார்.

இத்தகைய மிக அரிய வகையான கடல் ஆமைகளை நாம் சிறந்த கவனத்தோடு பாதுகாக்க வேண்டியது அவசியம்.

_ செல்வி கோப்பெருந்தேவி

30
ஹோமோ நலேடி: புதிய மூதாதை!ஹோமோ நலேடி: புதிய மூதாதை!11th December 2015
வீட்டுக்குள் மழை!17th December 2015வீட்டுக்குள் மழை!

மற்ற படைப்புகள்

2015_dec_pinju56
டிசம்பர்
10th December 2015 by ஆசிரியர்

வெடிகளை தவிர்த்து, புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்!

Read More
2015_dec_pinju22
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 27

Read More
2015_dec_pinju47
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

உலக நாடுகள் வரிசை

Read More
2015_dec_pinju1
டிசம்பர்
17th December 2015 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More
2015_dec_pinju34
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
டிசம்பர்
27th November 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p