• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இனி எல்லாம் வண்ணமயம்…

2016_jan_pinju48
ஜனவரி

அன்பார்ந்த பெரியார் பிஞ்சு வாசகர்களே, பெற்றோர்களே, ஆதரவு தரும் அன்பர்களே,

கடந்த 17 ஆண்டுகளாக உங்கள் விருப்பத்திற்குரிய ‘பெரியார் பிஞ்சு’ படிப்படியாகப் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. 1998ஆம் ஆண்டு இரு மாத இதழாக சிறிய அளவில் தொடங்கி, 2003 முதல் அளவில் பெரியதாகவும், மாத இதழாகவும் வரத் தொடங்கி, பின்னர் படிப்படியாக வண்ணப் பக்கங்களுடன் கூடிய இதழாக மலர்ந்தது.

உள்ளடக்கத்திலும், வடிவமைப்பிலும் என்றும் பிஞ்சுகளுக்குத் தேவையானவற்றையும், பிடித்தவற்றையும் வழங்குவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே, நீங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடியும், உங்கள் விருப்பப்படியும் 18 வயதையெட்டும் ‘பெரியார் பிஞ்சு’, இவ்விதழ் முதல் ‘முழு வண்ண இதழாக’ உருமாறுகிறது. கண்ணையும், கருத்தையும் ஈர்க்கும் செய்திகள், படங்கள், கதைகள், அறிவியல் விளக்கங்கள் அனைத்தும் இனி வண்ணப் பக்கங்களிலேயே கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சிதானே!

இம்முயற்சியினால் ‘பெரியார் பிஞ்சு’ இதழின் விலை உயரும் என்று நாங்கள் தயங்கியபோதும், தயக்கம் நீக்கி ‘பெரியார் பிஞ்சு’க்கு இன்னும் எவ்வளவு வேண்டுமாலும் தரலாம்; தாராளமாகச் செய்யுங்கள்’ என்று எங்களுக்கு உற்சாகம் தந்ததும் நீங்கள்தான். எனவே, தவிர்க்கமுடியாமல் இவ்விதழிலிருந்து ஓர் இதழுக்கான நன்கொடை ரூ.20 ஆகவும், ஆண்டுச் சந்தா ரூ. 240 ஆகவும் இருக்கும்.

தொடர்ந்து இதழுக்கு நல்லாதரவை நல்கிட வேண்டுவதோடு, பெரியார் பிஞ்சு இதழை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி அவர்களையும் சந்தாதாரர்களாக்கி இதழின் வளர்ச்சிக்கும் விற்பனைக்கும் துணை நிற்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்கும் வண்ணமயமான இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

– ஆசிரியர், பெரியார் பிஞ்சு

15
கடந்த இதழ் விடைகள்:கடந்த இதழ் விடைகள்:6th January 2016
பிஞ்சுகளின் சமூக அக்கறை8th January 2016பிஞ்சுகளின் சமூக அக்கறை

மற்ற படைப்புகள்

2016_jan_pinju30
ஜனவரி
8th January 2016 by ஆசிரியர்

எங்க வீட்டுப் பிள்ளை

Read More
2016_jan_pinju46
ஜனவரி
9th January 2016 by ஆசிரியர்

எளிமையாய்க் கற்போம் எல்லா குறள்களையும்!

Read More
2016_jan_pinju33
ஜனவரி
8th January 2016 by ஆசிரியர்

சனிக் கோள் நிலவின் புதிய படங்கள்

Read More
2016_jan_pinju7
ஜனவரி
9th January 2016 by ஆசிரியர்

பாசப்பொங்கல்!

Read More
2016_jan_pinju2
ஜனவரி
9th January 2016 by ஆசிரியர்

தினகரத் திருநாள்

Read More
2016_jan_pinju6
ஜனவரி
9th January 2016 by ஆசிரியர்

வாசிப்பை நேசிப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p