• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள்

2016_jan_pinju38
ஜனவரி

அமைவிடமும் இயற்கை அமைப்பும்:

¨    ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு முனையில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ள சிறிய நாடு. இதன் தலைநகர் ஜிபுட்டி நகரமாகும்.
¨    இந்நாட்டின் எல்லைகளாக எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளும் ஏடன் வளைகுடாவும் அமைந்துள்ளன.
¨    நாட்டின் மொத்த பரப்பளவு 23,200 சதுர கிலோ மீட்டர்கள்.

இயற்கை அமைப்பும் காலநிலையும்:

¨    இந்நாட்டின் பெரும்பகுதி நிலங்கள் உயர்ந்த பீடபூமிகளாக உள்ளன. இது இயற்கை அமைப்பு அடிப்படையில் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. வடக்கு மலைத்தொடர், தெற்கு மற்றும் மத்திய பகுதிகளான எரிமலை பீடபூமி பகுதிகள், கடற்கரை சமவெளிகள்.

¨    வடக்கு மலைப்பகுதி எட்டு மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த சிகரம் மவுசா அலி மலைத்தொடரில் எத்தியோப்பியா _ எரித்திரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
¨    நாட்டின் தென்பகுதி கிராண்ட் பாரா பாலைவனத்தால் அமைந்துள்ளது.

¨    இதன் காலநிலை உலக சராசரி வெப்பநிலையை விட குறைவாக உள்ளது.
¨    பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளன. கடற்கரைப் பகுதி மட்டும் இலேசான ஈரப் பதத்தைக் கொண்டுள்ளது.

¨    நாட்டின் மொத்தப்பரப்பில் 1 சதவீதத்திற்கு குறைவானதாகவே காடுகள் அமைந்துள்ளன.

வரலாற்றுத் தகவல்கள்:

¨    ஆஃபர்ஸ் இனத்தவரின் மூதாதையர்களான அராபியர்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டில் இங்கு குடியேறினர். பின்னர் சோமாலி இனத்தவர் வந்தனர்.
¨    கி.பி.825இல் மதப் பரப்பாளர்கள் மூலம் இஸ்லாம் வந்தது.
¨    16ஆம் நூற்றாண்டு வரை அராபியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
¨    1888இல் சோமாலிலாந்து என்ற பெயரில் பிரெஞ்சு காப்பாட்சி பகுதியானது.
¨    1946இல் பிரெஞ்சின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
¨    1977இல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது.

பொருளாதாரமும் மக்களும்:

¨    நாட்டின் மொத்த மக்கள் தொகை 8,10,178 பேர்
¨    பல இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
¨    இரண்டு பெரிய இனக் குழுக்கள் இவற்றில் முக்கியத்துவம் பெற்றவை. அவை சோமாலி மற்றும் ஆஃபார் ஆகும்.

¨    அராபிக் மொழியும், பிரஞ்ச் மொழியும் அலுவலக மொழிகள். இவைத்தவிர சோமாலிக் உள்ளிட்ட சில மொழிகளும் பேசப்படுகின்றன.

¨    நாட்டின் 94% மக்கள் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுகின்றனர். 6% மக்கள் கிருத்துவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.

¨    மொத்த மக்கள் தொகையில் 70% க்கு குறைவானவர்களே கல்வியறிவு பெற்றுள்ளனர்.
பொருளாதாரத் தகவல்கள்:

¨    ஜிபுட்டி நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சேவைத் துறையை சார்ந்துள்ளது. குறிப்பாக செங்கடலில் கடல்வழி போக்குவரத்து மூலம் நடைபெறும் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது.

¨    ஜிபுட்டி துறைமுகம் இதன் முக்கிய வணிக வருவாயை ஈட்டித் தருகிறது.

¨    இந் நாட்டில் மழையளவு மிகக் குறைவாக உள்ளதால் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் இறக்குமதி தவிர்க்க இயலாததாக உள்ளது.

¨    இதன் நாணயம் ஜிபுட்டியன் ஃபிராங் என்று அழைக்கப்படுகிறது.

¨    ஆப்பிரிக்காவின் அதிகம் உப்பு உற்பத்தி செய்யும் நாடு.

அரசு அமைப்பு முறை:

¨    நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் குடியரசுத் தலைவர் இருக்கிறார். அவர் தன்னால் நியமிக்கப்படும் பிரதம அமைச்சருடன் தமது அதிகாரங்களை பகிர்ந்து கொள்கிறார்.

¨    குடியரசுத் தலைவரின் தலைமையிலான கேபினட் அமைச்சர் குழு சட்டமன்றத்திற்கு கட்டுப்பட்டதாகும்.

¨    நாட்டின் நீதிமுறைகள் கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற படிநிலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

¨    பிரெஞ்சு சிவில் சட்டம், ஷாரியா எனப்படும் இஸ்லாமிய சட்டம் மற்றும் ஜுர் எனப்படும் சோமாலி ஆஃபார் மக்கள் சட்டம் ஆகியவை அமலில் உள்ளன.

¨    தற்போதைய குடியரசுத் தலைவர் இஸ்மாயில் உமர் கலில்லா. பிரதம அமைச்சர் அப்துல் காமில் முகமது.

19
பிஞ்சுகளின் சமூக அக்கறைபிஞ்சுகளின் சமூக அக்கறை8th January 2016
சனிக் கோள் நிலவின் புதிய படங்கள்8th January 2016சனிக் கோள் நிலவின் புதிய படங்கள்

மற்ற படைப்புகள்

2016_jan_pinju4
ஜனவரி
6th January 2016 by ஆசிரியர்

கடந்த இதழ் விடைகள்:

Read More
2016_jan_pinju23
ஜனவரி
8th January 2016 by ஆசிரியர்

பெரியார் 1000 சாதித்த செல்வங்கள்

Read More
2016_jan_pinju30
ஜனவரி
8th January 2016 by ஆசிரியர்

எங்க வீட்டுப் பிள்ளை

Read More
2016_jan_pinju8
ஜனவரி
9th January 2016 by ஆசிரியர்

வண்டலூர் பூங்காவில் 30 குட்டிகளை ஈன்றது கண்ணாடி விரியன்

Read More
2016_jan_pinju45
ஜனவரி
8th January 2016 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சமூக அக்கறை

Read More
2016_jan_pinju31
ஜனவரி
8th January 2016 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p