• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அய்யோ நேரம் பத்தலையே!

2016_feb_pinju29
பிப்ரவரி

ஒரு நிறுவனம்.

வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது,
அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.

அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்…

அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.

இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், “இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு அய்ந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு வேலை வழங்கப்படும்” என்றார்,
அய்ந்து நிமிட நேரம் ஆரம்பமானது..

‘நேரம் குறைவாக உள்ளது’ என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர்.

நேரம் முடிந்த பின்…

அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் ‘நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் அய்ந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை’ என்றனர்.

அதில் இருவர் மட்டும் ‘எந்த பதிலும் எழுதவில்லை’ என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின், அந்த நிறுவன மேலாளர், “விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்” என்றார்.

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவன-மேலாளரிடம் கேட்டனர்.

“வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள்” என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?)

அதற்கு அந்த மேலாளர் சொன்னார், “எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியைப் படித்துப் பாருங்கள்”.
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்குச் சென்றனர்,
அந்த பத்தாவது கேள்வி இது தான்..

“10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்.’’
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?

இது சிரிப்பதற்காக அல்ல… சிந்திப்பதற்காக! அதுவும், தேர்வு நேரமல்லவா… மாங்கு மாங்கு என்று (Hardwork) ‘மார்க்’குக்காக உழைப்பதைவிட திறம்பட உழைப்பதே (Smart work) அறிவுப்பூர்வமானது. என்ன கேட்டிருக்கிறார்கள் என்று புரிந்து பதில் எழுதுங்கள்… கேட்ட கேள்விக்குப் போதுமான பதிலை மட்டும் எழுதுங்கள். நேரம் போதுமானதாக இருக்கும். வாழ்த்துகள்.

19
பிரபஞ்ச ரகசியம் 31பிரபஞ்ச ரகசியம் 316th February 2016
கணிதப் புதிர் சுடோகு6th February 2016கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2016_feb_pinju31
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2016_feb_pinju28
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

எண்ணிப் பார் ஏழு வேறுபாடு

Read More
2016_feb_pinju54
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_feb_pinju37
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2016_feb_pinju22
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

புதிர்க் கட்டம் போடுவதெப்படி?

Read More
2016_feb_pinju34
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 31

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p