• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள்

2016_mar_pinju49
மார்ச்

அமைவிடமும் எல்லைகளும்:

¨    கம்போடியா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்தோ சீனா தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.

¨    இதன் வடமேற்குப் பகுதியில் தாய்லாந்தும், கிழக்குப் பகுதியில் வியட்நாமும், லாவோஸ் நாடும் தென்மேற்குப் பகுதியில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன.

¨    இதன் மொத்தப் பரப்பளவு 1,81,035 சதுர கிலோ  மீட்டர். (பரப்பளவு அடிப்படையில் உலகில் 88ஆம் இடத்தை வகிக்கிறது.

இயற்கை அமைப்பும் காலநிலையும்:

¨    இதன் பெரும்பகுதி மேகொஸ் ஆற்று வடிகால் பகுதிகள் மற்றும் பாசாக் ஆற்றுச் சமவெளிப் பகுதிகளாக அமைந்துள்ளன. (குறிப்பாக மத்தியப் பகுதி)

¨    இதன் வடக்கு எல்லையில் டான்கிரெக் மலை அமைந்துள்ளது.

¨    சமவெளிப் பகுதியில் பெரும்பகுதி விவசாயம் மெகாங்க் ஆற்றின் டெல்டா பகுதியில் நடைபெறுகிறது.

¨    இந்நாட்டின் முக்கிய ஏரி டன்லே சபீ; இது டெகாங்க் டெல்டா பகுதியில் அமைந்துள்ளது.

¨    காடுகள் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளாகும்.

¨    கணிசமான அளவு மாங்குரோவ் காடுகளும் உள்ளன.

¨    கம்போடியா பல்வேறு வித்தியாசமான தாவரங்களையும் விலங்குகளையும் கொண்ட சிறந்த சூழலியலைக் கொண்ட நாடு.

¨    இங்கு 212 வகை பாலூட்டிகளும், 536 பறவை வகைகளும் 240 ஊர்வன உயிரினங்களும், 850 நன்னீர் மீன் வகைகளும் (டோன்லே சாப் ஏரிப்பகுதிகளில்). 435 கடல்வாழ் உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

¨    நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு முக்கியத்துவம் பெற்றதாகும்

¨    இது தவிர ஏராளமான விலங்குகள் புகலிடங்கள் அமைந்துள்ளன.

மக்களும் மொழியும்:

¨    நாட்டின் மொத்த மக்கள் தொகை 1,54,58,332 பேர்.

¨    மக்கள் நெருக்கம் சதுர கிலோ மீட்டருக்கு 82.8 பேர் வகிக்கின்றனர்.

¨    நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.7%

¨    நாட்டின் மக்கள் தொகையில் 50% பேர் 22 வயதுக்குக் குறைவானவர்கள்.

¨    நாட்டின் அலுவலக மொழி கெமர் மொழி. இம்மொழியே 95 விழுக்காடு மக்களால் பேசப்படுகிறது. வியட்நாம், சீனமொழி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளும் பேசப்படுகின்றன.

¨    நாட்டின் 95% பேர் கொவாடா புத்த மதத்தைச் சார்ந்தவர்கள்.

¨    2008 கணக்கெடுப்புப்படி 77.6% பேர் கல்வியறிவுப் பெற்றுள்ளனர்.

பொருளாதாரம்:

¨    நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மையைச் சார்ந்துள்ளது.

¨    முக்கிய விளைபொருட்கள் நெல், மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு, வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, வேர்கடலை, சோயாபீன்ஸ், எள் மற்றும் இரப்பர் போன்றவைகளாகும்.

¨    அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அரிசி, மீன், மரம், துணிகள் மற்றும் இரப்பர் போன்றவையாகும்.

¨    அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்கள் பெட்ரோலியப் பொருட்கள், தங்கம், கட்டுமானப் பொருட்கள், எந்திர தளவாடங்கள், கனரக வாகனங்கள் போன்றவையாகும்.

¨    இங்கு கிடைக்கும் இயற்கை கனிமங்கள் இரும்புத்தாது, மாங்கனிஸ், பாஸ்பேட், ஜெம்ஸ்டோன் போன்றவையாகும்.

¨    நாணயம் ரியல்.

அரசு முறைகள்:

¨    இதன் தலைநகர் புனோம்பென் நகரமாகும்.

¨    மன்னராட்சியின் கீழ் பல கட்சி ஜனநாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசமைப்பை உடையது.

¨    நாட்டின் தலைவராக மன்னர் விளங்குகிறார்.

¨    தற்போதைய மன்னர் நரோடாம் சிகாமணி

¨    அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் விளங்குகிறார். தற்போதைய பிரதமர் குன்சென்

வரலாற்றுச் சுவடுகள்:

¨    கி.பி.7ஆம் நூற்றாண்டு வரை இந்து மதமும் புத்த மதமும் இருந்தன.

¨    கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் கெமர் இனத்தவரின் ஆதிக்கம் பரவத் தொடங்கியது. இரண்டாம் ஜெயவர்மன் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் காலத்தில் நாடு மிகவும் செழிப்படைந்தது.

¨    13ஆம் நூற்றாண்டில் புத்த மதம் வலுவானது. இதனால் இதன் எழுத்து முறை சமஸ்கிருதத்திலிருந்து பாலிக்கு மாற்றப்பட்டது.

¨    1863இல் ஃபிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாக மாறியது.

¨    1953 நவம்பர் 9ஆம் தேதி பிரான்சிடமிருந்து விடுதலைப் பெற்றது.

¨    1970இல் கெமர் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

19
எனக்குப் பிடித்த பெண்எனக்குப் பிடித்த பெண்2nd March 2016
எண்ணிப் பார் ஏழு வேறுபாடு2nd March 2016எண்ணிப் பார் ஏழு வேறுபாடு

மற்ற படைப்புகள்

2016_mar_pinju19
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

என்னம்மா…பாட்டிம்மா.. இப்படி பண்றீங்களேம்மா…

Read More
2016_mar_pinju14
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_mar_pinju29
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

குழந்தைகள் நாடகம்

Read More
2016_mar_pinju31
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2016_mar_pinju25
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

ஒன்று போல் இருக்கும் இரண்டு?

Read More
2016_mar_pinju35
மார்ச்
2nd March 2016 by ஆசிரியர்

2015-ல் நடந்தது என்ன?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p