• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள் அய்வரி கோஸ்ட்

2016_may_pinju27
மே

அமைவிடமும் எல்லைகளும்:

¨    ‘கோட்-_டி_-அய்வரி’ அல்லது கோட்_டி_வார் என்று பிரெஞ்சு மொழியில் தற்போது அழைக்கப்படும் அய்வரி கோஸ்ட் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான கினியா வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.
¨    இதன் அண்டை நாடுகளாக லிபிரியா, கினியா, மாலி, புர்கினாபாசோ, கானா முதலிய நாடுகள் அமைந்துள்ளன.
¨    இது ஏறத்தாழ சதுர வடிவில் அமைந்துள்ளது.
¨    இதன் மொத்த பரப்பளவு 78,699 சதுர கிலோ மீட்டர்கள்.
¨    இதன் கடல் எல்லை 590 கிலோ மீட்டர்.

மக்களும் சமூகவியலும்:

¨    நாட்டின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 19,000 பேர்.
¨    இவர்களில் 40.2% இஸ்லாமியர்களாகவும், 19% பேர் கத்தோலிக்கர்களாகவும், 19.3% இவாங்சிலிக்கல், 12.8% பேர் மதம் சாராதவர்களாகவும் உள்ளனர். ஏனையோர் பிற மதங்களைப் பின்பற்றுகின்றனர்.
¨    நாட்டின் அலுவலக மொழியாக பிரெஞ்சு உள்ளது. 60க்கும் மேற்பட்ட வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.

இயற்கை அமைப்பும் காலநிலையும்:

¨    இந்நாட்டின் நிலப்பரப்பு பரந்து விரிந்துள்ள பீடபூமிபோல் அமைந்துள்ளது.
¨    கடல் மட்டத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து இதன் வடப்பகுதி 500 மீட்டர் உயரத்தில் சாய்வாக உள்ளது.
¨    இது வெப்பமண்டலக் காடு வகையினைச் சார்ந்தவையாகும்.
¨    உயர்ந்த சிகரம் மவுண்ட் நிம்பா.
¨    நீளமான ஆறு பண்டமா ஆறு. மேலும், காவல்லா, சசந்திரா போன்றவை நாட்டின் முக்கிய ஆறுகளாக இருந்து நாட்டை வளப்படுத்துகின்றன.
¨    அகலமான ஏரி கோசவ் ஏரி.
¨    இதன் காலநிலை முழுதும் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டதாகும்.
¨    வனவியல் அடிப்படையில் இது நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை குறுகிய கடலோரப் பகுதி, மேற்கே அமைந்துள்ள மழைக்காடுகள், கிழக்கே அமைந்துள்ள வனப்பகுதி, வடக்கே அமைந்துள்ள சவானா புல்வெளி பகுதிகள்.
¨    மிதமான வெப்பத்தையும், வறட்சியையும் கொண்டதாகும்.

பொருளாதாரமும் வளர்ச்சி நிலையும்:

¨    நாணயம் சி.எஃப்.ஏ பிராங்க்.
¨    இதன் பொருளாதாரம் பெரும்பகுதி விவசாயத்தைச் சார்ந்துள்ளது. 64.8%  நிலப்பகுதி வேளாண் நிலங்களில் 50% மேலானோர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
¨    கோகோ, காப்பி, வாழை, பருத்தி, இரப்பர், பைனாப்பிள் போன்றவை முக்கிய வேளாண் விளைபொருட்கள் ஆகும்.
¨    இங்குதான் உலகிலேயே ‘கோகோ’ அதிகம் விளைகிறது. காப்பி உற்பத்தியிலும் இது முக்கிய நாடாகும்.
¨    வைரம், பெட்ரோலியம், இயற்கை வாயுக்கள், மாங்கனீஸ், இரும்புத்தாது, தாமிரம், தங்கம், நிக்கல் இங்கு கிடைக்கும் முக்கிய இயற்கை தாதுக்கள் ஆகும்.
¨    பைனாப்பிள், காப்பி, வாழைப்பழம், பருத்தி, பெட்ரோல், ரப்பர், பாமாயில் ஆகியவை பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
¨    முக்கிய இறக்குமதி பொருட்கள்: உணவுப் பொருட்கள், எரிபொருள், மூலதன தளவாடப் பொருட்கள்.
¨    கால்நடை வளர்ப்பும், மீன் பிடித் தொழிலும் முக்கிய பொருளாதாரக் காரணிகளாக விளங்குகின்றன.

வரலாற்றுக் குறிப்புகள்:

¨    15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்ரோப்பியர் தந்தம் மற்றும் அடிமைகள் வாணிபத்திற்காக வந்தனர்.
¨    19ஆம் நூற்£ண்டில் பிரெஞ்சு ஆதிக்கம் அறிமுகமானது.
¨ 1893இல் தொடங்கி 1918இல் முழுமையாக பிரான்ஸ் கட்டுப்பாட்டில் வந்தது.
¨ 1946இல் இதன் வடக்குப் பகுதி தனியாக பிரிந்து அப்பர் வோல்டா என்ற தனி நாடானது.
¨ 1958இல் அமைதியான முறையில் தன்னாட்சியைப் பெற்றது.
¨ ஆகஸ்ட் 7, 1960இல் முழு சுதந்திரம் பெற்றது.
¨ 1985இல் நாட்டின் பெயர் கோட்_டி_வார் என்று மாற்றப்பட்டது.

அரசமைப்பு முறை:

¨    சட்டப்படி இதன் தலைநகர் யமோஸ்ஸோக்ரா. ஆனால், நடைமுறையில் அபிட்ஜான் நகரமே தொழில் மற்றும் நிர்வாக தலைநகராகும்.
¨    பல கட்சி குடியரசு நாடாகும்.
¨    நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார். அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
¨    அரசாங்கத்தின் தலைவர் பிரதம அமைச்சராக இருக்கிறார்.

காடுகள்:

¨    நாட்டின் நிலப்பரப்பில் 32% இடங்கள் காடுகளாக உள்ளன.
¨    இது அவர்களின் மரத்தொழில் சார்ந்த பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

நாட்டின் முக்கிய சின்னங்கள்:

¨    நாட்டின் தேசிய விலங்கு ஆப்பிரிக்க யானை.
¨    நாட்டின் தேசியப் பறவை வெள்ளை தாடைகளையுடைய டெராகோ பறவை-. <

22
சட்டமன்றம் எப்படி அமைக்கப்படுகிறது?சட்டமன்றம் எப்படி அமைக்கப்படுகிறது?4th May 2016
சும்மா மொக்க போடாதீங்க4th May 2016சும்மா மொக்க போடாதீங்க

மற்ற படைப்புகள்

2016_may_pinju57
மே
4th May 2016 by ஆசிரியர்

புத்தகச் சங்கமம்! புத்தாக்கச் சங்கமம்!

Read More
2016_may_pinju5
மே
3rd May 2016 by ஆசிரியர்

செயற்கைக் குளிர்பானங்களைத் தவிருங்கள்

Read More
2016_may_pinju41
மே
4th May 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_may_pinju16
மே
3rd May 2016 by ஆசிரியர்

பட்டாசுத் தொழிலுக்குப் பாதுகாப்பு!

Read More
2016_may_pinju55
மே
4th May 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது 4

Read More
2016_may_pinju7
மே
4th May 2016 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p