• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கேள்விகளை விதைத்த பழகுமுகாம்

ஜூன்பழகுமுகாம்

வழக்கம் போலவே இந்த ஆண்டும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் பிஞ்சு வழங்கும் குழந்தைகள் பழகுமுகாம் 2016, மே மாதம் 8 _ 12 ஆம் தேதி வரையிலான அய்ந்து நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

நல்ல பழக்கவழக்கங்கள், எளிய அறிவியல், சாலைப் பாதுகாப்பு, முதலுதவி, மூடநம்பிக்கை முறியடிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை எதிர் கொள்ளல் போன்றவவை குறித்த ஏராளமான அமர்வுகள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விடுகதைகள்! அதன் மூலம் விடைகளையும், அதனூடே பகுத்தறிவு சிந்தனைகளையும் கற்றுக்கொடுத்த கவிஞர் தாத்தா!

தஞ்சை சிவகங்கைப் பூங்காவில் உற்சாகத்தில் திளைக்க வைத்த நீச்சல்! கண்களையும், கருத்தையும் கவர்ந்த பொம்மலாட்டம்! இதெல்லாம் இந்த அய்ந்து நாட்களிலும் பெரியார் பிஞ்சுகள் பார்த்த, பழகிய, கற்றுக்கொண்ட அடுக்கடுக்கான, ஆனந்தமான நிகழ்வுகள்!

பள்ளிக்கூடத்தையே நினைவுப்படுத்தாத சூழல்! புதிய புதிய நட்பு! புதிய புதிய அறிவு! புதிய புதிய கலைகள்! அதுமட்டுமா? குழந்தைகளுக்கு மதிப்பும் அங்கீகாரமும் கொடுக்கின்ற கற்றறிந்த ஆசிரியர்கள்! பிஞ்சுகள் விரும்புகின்ற வகையில் நடைபெறும் வகுப்புகள்! வேறென்ன வேண்டும்? நான்காம் நாள் முடிவில் ஏறக்குறைய எல்லோருக்குமே தயக்கமென்ற தடை தானாகவே இளகி, உருகி வழிந்தோடிவிடுகிறது! பிறகென்ன? ஆர்ப்பரிக்கும் நீரோடை போல கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகின்றனர்.

ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப் பாளர்களுக்கும் அதற்கு பதில் சொல்லித்தான் மாளவில்லை. இந்தத் தடைகளை உடைத்த துணிச்சல் எவ்வளவு தூரத்திற்குச் சென்றதென்றால், ‘கேளுங்கள் சொல்கிறோம்’ என்பதையே வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஆசிரியர் தாத்தா அமர்ந்திருக்கும் மேடையிலேயே மற்றவர்களைப் பார்த்து கேள்விகள் கேட்கும் அளவுக்குச் சென்றது.

இப்படி ஏறக்குறைய எல்லோரும்தான் கேள்விகள் கேட்டனர். மனித வளர்ச்சியை நினைத்துப் பார்த்தால்  எல்லோரும் கேள்விகள் கேட்பது என்பது எவ்வளவு புரட்சிகரமான ஒன்றென்று இன்னமும் ஆழமாகப் புரியும்! பழகுமுகாமின் அருமையும், தேவையும்கூட நன்றாகப் புரியும்.

26
விடைகள்விடைகள்4th May 2016
நிலத்தடி நீர்3rd June 2016நிலத்தடி நீர்

மற்ற படைப்புகள்

2016_jun_pinju6
கதை கேளு கதை கேளுஜூன்
3rd June 2016 by விழியன்

டம்டம் மற்றும் டமாடமா

Read More
2017_apr_s42
ஏப்ரல்பழகுமுகாம்
29th March 2017 by ஆசிரியர்

பழகுமுகாம் – 2017

Read More
2016_jun_pinju3
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

வாழ்த்துகள்!

Read More
2016_jun_pinju1
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More
பழகுமுகாம்
14th April 2016 by ஆசிரியர்

பழகு முகாம் 2016

Read More
2016_jun_pinju5
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 5

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p