• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள்

2016_jul_pinju20
ஜூலை

அமைவிடமும் பரப்பளவும்:

¨    இது முழுவதும் வட அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரு மத்திய மேற்கு அய்ரோப்பிய நாடாகும்.
¨    இதன் வடக்கு எல்லைகளாக பால்டிக் கடலும், டென்மார்க் நாடும் அமைந்துள்ளன.
¨    தெற்கே ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளும், கிழக்கே போலந்து மற்றும் செக் குடியரசும் அமைந்துள்ளன.
¨    மேற்கே பிரான்ஸ், லெக்சம்பர்க், பெல்ஜிய நாடுகள் அமைந்துள்ளன.
¨    நாட்டின் மொத்த பரப்பளவு 3,57,168 சதுர கிலோ மீட்டர். பரப்பளவு அடிப்படையில் உலகின் 63வது நாடு.
¨    இதன் தலைநகர் பெர்லின்.

இயற்கை அமைப்பும் காலநிலையும்:

¨    ஆப்ஸ் மலையிலிருந்து வடகடல் வரையில் உயர்ந்த மேட்டு நிலங்களாகவும், நடுப்பகுதி தாழ் நிலமாகவும் உள்ளது.
¨    ரைன், தான்யூப், எல்பே போன்றவை முக்கிய ஆறுகளாகும்.
¨    அல்ஸன் பகுதியில் பனியாறுகள் காணப்படுகின்றன.
¨    இதன் காலநிலை மிதவெப்ப பருவத்தை அதிகம் கொண்டதாகும்.
¨    இதன் உயிரியல் சூழலியல் மண்டலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
¨    அய்ரோப்பிய -_ மத்திய தரைக்கடல் கலப்புக்காடுகள் மற்றும் வடகிழக்கு _ அட்லாண்டிக் தாழ்நிலைக் காடுகள்.
¨    மொத்த நிலத்தில் 34% விளைநிலங்-களாகவும், 30.1% காடுகளாகவும், 13.4% புல்வெளிப் பகுதிகளாகவும், 11.8% குடியிருப்புப் பகுதிகளாகவும் உள்ளன.
¨    காடுகள் மத்திய அய்ரோப்பாவின் பொதுவான இலையுதிர் காடுகளாக உள்ளன. அழிக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் தற்போது ஊசியிலைக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
¨    முக்கிய மரங்கள் பீச், ஓக், இஸ்புரூஸ், ஃபர், பைன், லார்ச் போன்ற மர வகைகள் உள்ளன.
¨    பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசனங்கள், பாசிகள் போன்றவை முக்கிய தாவரங்களாகும்.
¨    முக்கிய காட்டு விலங்குகள் மான், காட்டுப்பன்றி, நரி, அய்ரோப்பிய முயல், நீரெலி போன்றவை.

மக்களும் மொழியும்:

¨    2015ஆம் ஆண்டு தோராயக் கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 8,17,70,900 பேர். (உலக அளவில் 16ஆம் இடம்)
¨    நாட்டின் அலுவலக மொழி ஜெர்மன். மேலும் டச்சு, இங்லீஷ், டானிஷ், லோஜெர்மன், செர்பியன், ரோமானியம், பாரசீகம் போன்றவை சிறுபான்மையாக அங்கு பேசப்படும் மொழிகளாகும்.
¨    நாட்டின் குழந்தைகளுக்கு 3 ஆண்டுகள் பாலர்பள்ளி (Kindergarden) கல்வியும், அதன்பிறகு ஒன்பது ஆண்டுகள் பள்ளிக் கல்வியும் கட்டாயக் கல்வியாகும்.
¨    நாட்டின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள் ஹைடல்பர்க் பல்கலைக்கழகம், லெய்ப்சிங் பல்கலைக்கழகம், ரோஸ்டக் பல்கலைக்கழகம், க்ரைஸ்வாடு பல்கலைக்கழகம், பெர்லின் பல்கலைக்கழகம், கொலோன் பல்கலைக்கழகம்  போன்றவையாகும்.

இயற்கை வளமும் பொருளாதாரமும்:

¨    கிடைக்கும் முக்கிய இயற்கை தாதுக்கள் இரும்பு, நிலக்கரி, பொட்டாஷ்,  லிக்னைட், யுரேனியம், தாமிரம், இயற்கை எரிவாயு, உப்பு, நிக்கல், மரச்சாமன்கள் ஆகியவையாகும்.
¨    இந்நாட்டு பொருளாதாரம் பெரும்பகுதி சேவைத் துறையையே சார்ந்துள்ளது.
¨    தொழில் துறையில் பங்களிப்பு 28% ஆகும்.
¨    முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்: வாகனங்கள், எந்திர தளவாடங்கள், வேதிப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், மின் சாதனங்கள், மருந்துகள், உலோகத் தகடுகள், உணவுப் பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவையாகும்.
நாணயம்: யூரோ.

வரலாற்றுச் சுவடுகள்:

¨    ஜெர்மனியில் 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே முதல் மனிதத் தொல்லுயிரான நியாண்டர்தால் மனிதனின் தாடை எலும்பு கிடைத்துள்ளது.
¨    ஜெர்மானிய குழுக்கள் வெண்கலக் காலம் முதலே இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
¨    10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ரோம் பேரரசின் மய்யப் பகுதியாக இருந்தது.
¨    1814இல் 39 சுதந்திர அரசுகளைக் கொண்ட ஜெர்மனி கூட்டரசு உருவாக்கப்பட்டது.

¨    1871இல் ஜெர்மன் ஒரே பேரரசாக அறிவிக்கப்பட்டது.
¨    1914-_1919 முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனி சிதைக்கப்பட்டது.
¨    1933இல் அடாஃப் ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்து சர்வாதிகாரியானார். அவரது பழிவாங்கும் நோக்கத்தாலும், இன அழிப்பு கொள்கையாலும். ஜெர்மன் அழிவுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்கின.

¨    1939இல் இரண்டாம் உலகப் போர் ஜெர்மனியால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
¨    இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனி இரண்டாக பிரிக்கப்பட்டது.
¨    1990ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

அரசு முறை:

¨    ஜெர்மன் ஒரு பாராளுமன்ற கூட்டாட்சி குடியரசு நாடாகும்.
¨    நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார்.
¨    அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் சான்செல்லர் (Chancellor) என்று அழைக்கப்படுகிறார்.

18
தாய் மொழியைத் தவிர்க்கலாமா? சமஸ்கிருதத்தைத் தூக்கலாமா?தாய் மொழியைத் தவிர்க்கலாமா? சமஸ்கிருதத்தைத் தூக்கலாமா?2nd July 2016
’தங்கமான நேரம்!’2nd July 2016’தங்கமான நேரம்!’

மற்ற படைப்புகள்

2016_jul_pinju35
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

பொருத்துக

Read More
2016_jul_pinju32
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2016_jul_pinju2
ஜூலை
1st July 2016 by ஆசிரியர்

இந்தியாவின் காலை உணவு?

Read More
2016_jul_pinju56
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_jul_pinju53
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2016_jul_pinju49
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p