• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எளிமை கற்போம்!

2016_sep_pinju17
செப்டம்பர்

பள்ளிக் கூடத்திலும், திருமண வீடுகளிலும் கோட்டு போட்டுக் கொண்டு சிலரைப் பார்த்திருப்போம். வாழ்நாளில் ஒரு முறை, இரு முறையைத் தவிர கோட்டு பலருக்கும் தேவையே படாது. அதற்கு பல்லாயிரம் செலவில் கோட்டு சூட்டு தைத்துப் போடுவார்கள். ஆனால், அமெரிக்காவுக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அண்ணா, அங்கு பயன்படுத்துவதற்காக கோட்டு வேண்டுமே என்று யோசித்தார்.

அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர். அவர் நினைத்தால் எத்தனை புது கோட்டுகள் வாங்கலாம். பலர் இலவசமாகவே அவருக்குத் தைத்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவையெல்லாம் எதற்கு வீண் என்று கருதிய அண்ணா, தன் கட்சித் தோழரும், பாசத்திற்குரிய உடன்பிறவா  தம்பிகளுள் ஒருவருமான  நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம்,”சினிமாவில் நடிப்பதற்காக நிறைய கோட்டுகள் வாங்கி வைத்திருப்பாயே… அதில் எனக்கேற்ற ஒன்றை எடுத்துவா… அளவைக் குறைத்துக் கூட சரி பண்ணிக் கொள்ளலாம்” என்று கேட்டாராம்.

புதிது வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்ன போது, “அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு எனக்குக் கோட் அவசியப்படாது. பிறகு வீண் தானே!” என்று பழைய கோட்டினையே கேட்டாராம். ஆனால், கடைசியில் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் அண்ணாவைக் கேட்காமலேயே புத்தாடை எடுத்துக் கொடுத்துவிட்டார் என்பது தனிக்கதை.

அறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் என்று புகழப்படுபவர். எளிமைக்கும், சிக்கனத்துக்கும் பெயர் பெற்ற தலைவர் பெரியாரிடமிருந்து அண்ணாவுக்குக் கிடைத்த பண்பு இது.

எளிமையும், சிக்கனமும் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் இருப்பது உயர்ந்தோரின் பண்பு அல்லவா?

– பிஞ்சண்ணா

15
சும்மா மொக்க போடாதீங்கசும்மா மொக்க போடாதீங்க5th September 2016
கணிதப் புதிர் சுடோகு5th September 2016கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2016_sep_pinju22
செப்டம்பர்
5th September 2016 by ஆசிரியர்

இது உங்கள் பக்கம்

Read More
2016_sep_pinju40
செப்டம்பர்
6th September 2016 by ஆசிரியர்

மூன்றாவது கழிவு

Read More
2016_sep_pinju30
செப்டம்பர்
4th September 2016 by ஆசிரியர்

பிழைகளைத் திருத்துங்கள்

Read More
2016_sep_pinju35
செப்டம்பர்
6th September 2016 by ஆசிரியர்

ஒலிம்பிக் நேற்று…இன்று…நாளை

Read More
2016_sep_pinju1
செப்டம்பர்
5th September 2016 by ஆசிரியர்

தந்தை பெரியார் பிறந்தநாள் – செப்டம்பர் 17

Read More
2016_sep_pinju54
செப்டம்பர்
4th September 2016 by ஆசிரியர்

கலக்குறாய்ங்கப்பா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p