• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

யாரென்று தெரிகிறதா?

2016_oct_pinju15
அக்டோபர்

பொதுவாக ஒரு குழந்தையின் தாய் ஊரார் அனைவரும் தனது குழந்தையை சிறந்தவன் என்று பாராட்டுவதையே விரும்புவார். ஆனால், உங்கள் பையன் ரொம்ப சுட்டித் தனமாக இருக்கிறான் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தால்  எப்படி இருக்கும் அந்த தாய்க்கு? மைக்கேல் பெலப்ஸ் என்ற 15 வயது சிறுவனின் தாய்க்கும் அப்படியொரு நிலைமை தான்.

அவன் மிகவும் சுட்டித்தனமாக இருந்ததால் தினசரி ஏதாவது ஒரு புகாரை அவரது அருகில் உள்ள வீட்டார்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

ஒருமுறை மைகேல் பெலப்ஸின் தாயாரிடம் அந்தப் பகுதி காவலர் ஒருவர், “இவனை சிறார் சிறையில் சேர்த்துவிடுங்கள் அங்கு இவன் அடங்கிவிடுவான்” என்று அறிவுரை கூறும் அளவிற்கு மைக்கேல் பெலப்ஸின் குறும்புகள் இருந்தன.

கல்வியில் அதிக ஆர்வமின்மை, அனை-வரிடமும் கடுமையாக நடந்து கொள்ளுதல் போன்ற மைக்கேல் பெலப்ஸின் பழக்கங்களால், அவரது தாய் மிகவும் துயரத்திற்கு ஆளானார். இந்த நிலையில் அவரது சகோகதரி விட்னிக்கு நீச்சல் பயிற்சி அளித்த பாப் பவ்மென் மைக்கேலுக்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க முன்வந்தார்.

இதனால் மைகேல் பெலப்ஸின் கவனம் நீச்சல் போட்டிகளில் திசை திரும்பியது. நீச்சல் பயிற்சியின் போதே அவர் எதிர்காலத்தில் உலகப் புகழ்பெற்ற நீச்சல் வீராராக வருவார் என்று தெரிந்துவிட்டது, மெல்ல மெல்ல நீச்சல் போட்டிகளின் ஆர்வம் அதிகரித்து வந்தது. 20-ஆம் வயதில் மைக்கேல் பெலப்சுக்கு, உயிராகிப் போனது  நீச்சல்!

2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல்முதலாக கலந்துகொண்டு முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன் பிறகு அவரது தங்க வேட்கை தீரவே இல்லை.

2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் 6 தங்கம், இரண்டு வெங்கலப் பதக்கங்களை வென்றார். 2008-ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார். 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று மொத்தம் 23 தங்கப் பதக்கங்களுடன் உலக ஒலிம்பிக் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.

இவரது தொடர் வெற்றிக்குக் காரணமாக இவருடைய மாறுபட்ட அணுகுமுறை சொல்லப்-படுகிறது. நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து, உந்தி, மீண்டும் நீந்திச் செல்வர்.

ஆனால், மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும்போது பெலப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்லமாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து, கடக்கும் தூரத்தை விட பெலப்ஸ் சற்றே அதிக தூரம் செல்ல முடிகிறது.

இதுபோன்ற நுணுக்கமாகக் கவனம் செலுத்தி தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தாலேயே மைக்கேல் பெலப்ஸ் அதிகளவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கும், பல உலக சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.

25
ரகசியம்.. உஷ்ஷ்ரகசியம்.. உஷ்ஷ்30th September 2016
பேசாதன பேசினால்...30th September 2016பேசாதன பேசினால்...

மற்ற படைப்புகள்

2016_oct_pinju8
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2016_oct_pinju16
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

பேசாதன பேசினால்…

Read More
2016_oct_pinju52
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

’தங்கமகன்’ மாரியப்பன்

Read More
2016_oct_pinju12
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

இந்தியாவின் காலை உணவு?

Read More
2016_oct_pinju13
அக்டோபர்கதை கேளு கதை கேளு
30th September 2016 by விழியன்

ரகசியம்.. உஷ்ஷ்

Read More
2016_oct_pinju30
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

தகவல் சொல்லிட்டுப் போங்க!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p