• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கடிதத்தில் மனிதநேயப் பாடம் நடத்திய அமெரிக்கப் பிஞ்சு அலெக்ஸ்

2016_oct_pinju42
அக்டோபர்

சிரியா நாட்டில் நடைபெற்று வரும் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்; பொருளை இழந்துள்ளனர். அப்போரை நிறுத்த வழியில்லாமல் உலகமே திணறிப்போயுள்ளது. அங்கிருந்து மக்கள் பல நாடுகளுக்கும் உயிர் தப்பி ஓடுகின்றனர்; புலம் பெயர்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொடரத் துடிக்கின்றனர். அதை நீங்களும் செய்திகளின் வழி அறிந்துவருகிறீர்கள் தானே!

அப்போரின் போது, காயமடைந்த மூன்று வயது சிறுவனாகிய ஒம்ரானின் புகைப்படம் உங்களைப் போலவே உலக மக்களின் இதயத்தையும் உருக்கியது. தன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த அச்சிறுவன், விமான தாக்குதலின்போது ஒரே நொடியில் அவர்கள் அனைவரையும் இழந்தான்.

இடிந்து விழுத்த அவனுடைய வீட்டின் இடிப்பாடுகளில் சிக்கி இருந்த அவனை மீட்பு படையினர் காப்பாற்றினர். என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல், அழத்தெரியாமல், உடம்பில் ரத்தக்காயங்களுடன் அமைதியாக இருந்த ஒம்ரானின் புகைப்படம் சமுக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, இப்போரில் உக்கிரத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணரவைத்தது.

சிரியா மீது மற்ற நாடுகள் நடத்திய வான்வழி தாக்குதலில் குடும்பத்தை இழந்து, ரத்தக்காயங்-களுடன், அமைதியாக இருந்த அந்த சிறுவனின் புகைப்படம் நியூயார்க் நகரின் ஸ்கேர்ஸ்டேல் பகுதியில் வசிக்கும் ஆறு வயது சிறுவன் அலெக்சின் மனதை தொட்டது. உடனே அவன் ஒம்ரானை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறு தன் நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதினான்.

அண்மையில் அக்கடிதத்தைப் படித்த ஒபாமாவுக்கு அச்சிறுவன் எழுதிய செய்தி ஆச்சரியத்தை அளித்துள்ளது. செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் அய்க்கிய நாடுகள் அவை நடத்திய அகதிகள் தொடர்பான மாநாட்டில் அக்கடிதத்தை வாசித்து காட்டினார் ஒபாமா.

“ஒம்ரானை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு உங்களால் வர முடியுமா? உங்களுக்காக கொடிகள், பலூன்கள், மற்றும் மலர்களுடன் நாங்கள் காத்துக்கொண்டு இருப்போம். நாங்கள் அவனுடைய குடும்பத்தினர், அவன் எங்கள் சகோதரன். என் சகோதரி கேத்ரின் அவனுக்காக பட்டாம்பூச்சிகள் மற்றும் மின்மினி பூச்சிகளை பிடித்து வைத்திருப்பாள்.

என்னுடைய பள்ளியில் எனக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு நண்பன் உண்டு. அவனுடைய பெயர் ஓமர். எனது நண்பனை ஒம்ரானுக்கு அறிமுகம் செய்துவைப்பேன். நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடுவோம். அவனிடம் விளையாட்டு பொருள்கள் இருக்காது. பரவாயில்லை, என் சகோதரி அவளிடம் உள்ள நீல நிற பெரிய முயல் பொம்மையை பகிர்ந்துக்கொள்வாள்.

அவன் எங்களுக்கு ஒரு புதிய மொழியை சொல்லிக்கொடுப்பான். ஜப்பான் நாட்டிலிருந்து வந்துள்ள என்னுடைய மற்றொரு நண்பன் ஆடோவுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது போல் அவனுக்கு கற்றுத்தருவோம்.

கணிதப் பாடத்தில் உள்ள கூட்டல், கழித்தல் கணக்குகளை நான் அவனுக்கு சொல்லித்தருவேன். என்னுடைய இரண்டு சக்கர வண்டியை அவனுக்கும் தந்து, அவ்வண்டியை எப்படி ஓட்டுவது என்று அவனுக்கு கற்றுத்தருவேன். நீங்கள் அவனை அழைத்து வருவதற்காக காத்துக்கொண்டு இருப்பேன்” என்று அலெக்ஸ் அவனுடைய கடிதத்தில் எழுதியிருந்தான்.

அலெக்ஸ் எழுதிய அக்கடிதத்தைப் பாராட்டிய, அமெரிக்க அதிபர் ஒபாமா, அதனை அய்.நா. அகதிகள் மாநாட்டிற்கு வந்துள்ள தலைவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

மேலும், நாம் இந்த சிறுவனிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம். மற்றவர்களை குறித்த பயமோ, எந்த நாட்டை சேர்ந்தவர்களோ, எந்த இனத்தை சேர்ந்தவர்களோ, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்களோ என்று யோசிக்காமால் மனிதாபிமானம் மட்டுமே முக்கியம் என்று கருதும் இந்த சிறுவனிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்-கொள்ள வேண்டும் என்று ஒபாமா தெரிவித்தார்.

அலெக்ஸ் என்ற அந்தப் பிஞ்சு, உலகத் தலைவர்களுக்கே பாடம் நடத்தியுள்ளான். அப்படித் தானே!

17
அசைவ உணவு அறிவைக் கெடுக்குமா?அசைவ உணவு அறிவைக் கெடுக்குமா?30th September 2016
பிரபஞ்ச ரகசியம் 3930th September 2016பிரபஞ்ச ரகசியம் 39

மற்ற படைப்புகள்

2016_oct_pinju32
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

எண்ணிச் சொல்லுங்க…

Read More
2016_oct_pinju52
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

’தங்கமகன்’ மாரியப்பன்

Read More
2016_oct_pinju20
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2016_oct_pinju46
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 39

Read More
2016_oct_pinju7
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

பிஞ்சுகள் கொண்டாடிய பெரியார் பிறந்தநாள் விழா

Read More
2016_oct_pinju38
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

அசைவ உணவு அறிவைக் கெடுக்குமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p