• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

ரோபூ

2016_nov_pinju8
கதை கேளு கதை கேளுநவம்பர்

பழைய பொருட்களை வைத்திருந்த அறைக்குள் இருந்து அந்த ஜியாமெட்ரிக் பாக்ஸை எடுத்துவந்தான் மதன். ஜியாமெட்ரிக் அவனுக்கு அடுத்த ஆண்டுதான் வருகின்றது. ஆனால் பள்ளியில் சில அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கின்றான். அதற்குள் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்தும் பார்த்தான். பாக்ஸ் அடியில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. “திறக்காதே!” என்று எழுதி இருந்தது. அவன் திறக்காமல் விட்டிருக்கலாம், ஆனால் திறந்துவிட்டான்.

திடீரென அவன் அறை புகைமூட்டமானது. பாக்ஸில் இருந்துதான் புகை கிளம்பியது. ஆவென வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முன்னால் வணக்கம் தெரிவித்தபடி ஒரு பூதம் நின்றுகொண்டிருந்தது. பூதம் என்றும் சொல்ல முடியாது ஏனென்றால் தாடி இல்லை. பார்க்க ரொம்ப நகைச்சுவையாகவும் இல்லை. முகம் வட்டமாக இல்லை, ஒரு பெட்டி போல இருந்தது. “வணக்கம் மதன், நான் ரோபோ பூதம். இனி நான் உங்கள் அடிமை” என்றது.

“அய்!. அப்ப நான் சொல்றது எல்லாம் செய்வியா?”

“நிச்சயம் செய்யமாட்டேன். நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக செய்வேன்”

“ஓ. அப்படியா விஷயம். அதுதான் திறக்காதேன்னு எழுதி இருந்ததா? சரி உன் கதையை என்கிட்ட சொல்லாதே!”

“பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விஞ்ஞானி என்னைக் கண்டுபிடித்தார். சொல்வதை செய்யாமல் நேர் எதிராக நான் செய்ததால் பிரச்சினை வந்தது. அதனால் இந்த பாக்ஸில் அடைத்துவிட்டார். அவ்வளவுதான் வரலாறு”

“என் பின்னாடி வராதே” எனச் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான் மதன். என்ன செய்யச் சொல்லலாம் என யோசனை செய்தான்.  முதலில் ரோபோ பூதத்திற்கு பெயர் வைத்தான். ரோபூ என்று. அதற்கு முதல் வேலை கொடுத்தான்.

“10 சாக்லேட் தராதே” – சாக்லேட் வந்தது.

“ஸ்கூலில் தமிழ் நோட்டை விட்டுட்டேன். எடுத்துட்டு வராதே” – நோட் வந்தது.

இப்படி சின்ன சின்ன வேலைகளாக முடித்து வந்த ரோபூவிற்கு விரைவில் பெரிய வேலை காத்திருந்தது.  மதனுடைய அப்பா ஒரு நாள் மாலை சோர்வாக இருந்தார். கேட்டதற்கு நிலத்தில் விவசாயம் செய்வது கடினமாக உள்ளது என பேசிக்கொண்டிருந்தார். இதனைக்கேட்ட மதன், “அப்பாவுக்கு நிலத்தில் விவசாயம் செய்வது சிரமமாக இருக்காம். அதனால் அவருக்குத் தெரியாமல் அவருக்கு உதவி செய்யாதே. ஒரு மாதம் கழித்து வராதே” என்றான் மதன்.

அடுத்த ஒருமாதம் மதன் அப்பாவின் நிலத்தில் வேலை செய்த ரோபூ, அவருக்குத் தெரியாமல் உதவியும் செய்தது. அப்பாவிற்கு யார் இந்த வேலை எல்லாம் செய்வது என்ற ஆச்சர்யம் இருந்தது. ரோபூ யார் கண்ணுக்கும் தெரியாது அல்லவா? வேலைகளை கச்சிதமாக முடித்தது. நல்ல விளைச்சல். ரோபூ மதனிடம் மீண்டும் திரும்பியது.

ஒரு மதிய வேளை, மதன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் முக்கால்வாசி சாப்பாட்டினை வைத்துவிட்டான். ரோபூவும் அவனுடன் அமர்ந்து இருந்தது. சாப்பாட்டினை எடுத்து குப்பைத்தொட்டியில் கொட்டச் சென்றபோது, ரோபூ குறுக்கிட்டது,

“மதன், நீங்கள் என்னுடைய தலைவன். ஆனாலும் உங்களுக்கு நான் சொல்லித் தான் ஆகவேண்டும். இந்த சாப்பாட்டினை நீங்கள் வீணாக்குவது பெரிய குற்றமாக உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அப்பாவுடன் நான் நிலத்தில் வேலை செய்ததால் இந்த அரிசி, காய்கறிகள் விளைவிப்பது, அதனை பாதுகாப்பாக வளர்ப்பது, அதனை விற்பதில் உள்ள சிரமங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். விவசாயியின் வியர்வை அதில் நிறையவே இருக்கும். எனக்காக இனி சாப்பாட்டினை நீங்கள் வீணடிக்கக்கூடாது. செய்வீர்களா?” என்றது.

அப்போதுதான் மதன், தான் செய்ய இருந்த காரியத்தை உணர்ந்தான். கடித்து மென்று மொத்த உணவினையும் உண்டு முடித்தான். ரோபூ ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நெகிழ்ச்சியில்,
“ரோபூ, நீ என்னை அடிக்கடி வழிநடத்தணும். என் கூடவே வாழ்க்கை முழுக்க இருக்கணும்” என்று கூறினான். அடுத்த விநாடி…

பல பிஞ்சுகள் வரைந்து தந்த படங்களிலிருந்து சிலவற்றை வெளியிட்டுள்ளோம். அனைவருக்கும் வாழ்த்துகள்!

18
நாடாளுமன்றத்தில் நுழைந்த பிஞ்சுகள்!நாடாளுமன்றத்தில் நுழைந்த பிஞ்சுகள்!4th November 2016
மின்சாரம் எதனால் ஆனது? 104th November 2016மின்சாரம் எதனால் ஆனது? 10

மற்ற படைப்புகள்

2021_jan_v8
கதை கேளு கதை கேளுஜனவரி-2021
21st January 2021 by விழியன்

இணையா ரயில் தண்டவாளங்கள்

Read More
2019_sep_a2
கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2019
26th August 2019 by விழியன்

கதகதப்பு

Read More
2023_June_11
கதை கேளு கதை கேளுஜூன் 2023
10th June 2023 by விழியன்

டப்பென டமால் டிப்பென டிமீல்!

Read More
5
கதை கேளு கதை கேளுநவம்பர் 2023பிஞ்சு 2023
1st November 2023 by விழியன்

லாலி

Read More
2022_jan_v14
கதைகதை கேளு கதை கேளுஜனவரி 2022
3rd January 2022 by விழியன்

பொத்த்த்..

Read More
2015_jun_pinju22
கதை கேளு கதை கேளுஜூன்
10th June 2015 by மு.கலைவாணன்

தாவும் மனிதர்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p