• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நாள்குறிப்பை நூலாக்கி வென்ற பிஞ்சுகள்

2017_jan_pinju73
ஜனவரி

யாரென்று தெரிகிறதா?

நாள்குறிப்பை நூலாக்கி வென்ற பிஞ்சுகள்

-சரா

நான் அன்றாடம் தேவையில்லாதவை என்று ஒதுக்கிவிடும் ஒவ்வொரு நிகழ்வும் எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பில் பயிலும் நான்கு பேர் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

அமெரிக்காவில் சிறுவர்களை எழுத்தாளர்களாக ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகளின் படைப்பாற்றலை வெளியிட்டு, அதில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “அமெரிக்காவின் இளம் எழுத்தாளர் விருது” வழங்குவார்கள்.

கின்லே பெம்பிரி (Kinleigh Bembry), ஜாக்சன் காம்பஸ் (Jackson Combass), பெல்லீ டிரிக்கர்ஸ் (Bailey Driggers), மற்றும் எமிலி பிக்காக் (Emily Peacock)  என்ற இந்த நான்கு பேரும் அமெரிக்காவில் உள்ள வடக்கு ஆமில்டன் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் தங்களின் நாட்குறிப்பில் அன்றாடம் நடக்கும் சிறிய நிகழ்ச்சிகளைக்கூட எழுதிவைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

தங்கள் நாட்குறிப்பை புத்தகமாக வெளியிட விருப்பப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தனர். பள்ளி நிர்வாகமும் அதை நூலாக தொகுத்திருந்தது, இந்த நிலையில் அமெரிக்க இளம் எழுத்தாளர் விருதிற்காக இவர்களது நாட்குறிப்பு நூலும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நூலை அனுப்பும்போதே பெல்லீயின் பெற்றோர், நாட்குறிப்பு நூலின் முக்கிய பக்கங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தங்களது வலைதளத்தில் பதிவேற்றி கருத்து தெரிவிக்கும்படி அனுப்பி இருந்தனர். இதற்கு உலகெங்கிலுமிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான கருத்துப் பரிமாற்றங்களும், ஆலோசனைகளும், பாராட்டுகளும் வந்திருந்தன.

அதேநேரத்தில் அமெரிக்கக் குழந்தை எழுத்தாளர் தேர்விற்கான குழுவினர் இவர்களின் நாட்குறிப்பையே இந்த ஆண்டின் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்து நூலாசிரியர்களான நால்வருக்கும் அமெரிக்க இளம் எழுத்தாளர்கள் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
எம்லி பிக்காக், கோடை விடுமுறையின்போது தனது நாட்குறிப்பில்  எழுதிய சிறு கவிதை ஒன்றின் தமிழாக்கம் இதோ:

“இந்த உலகை நான் பார்க்கிறேன்.

இந்த உலகம் என்னைப் பார்க்கிறது.

எனது குடும்பம் இந்த உலகம்,
இந்த உலகமே ஒரு குடும்பம்.

அதில் நானும் ஒருவர் என்பதில்,
எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”

ஜான்சன் காம்பாஸ் கடைவீதியில், தான் கண்டதாக எழுதியதாவது,

“அதிக அளவு ரூபாயைக் கொடுத்தும் பெரியவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை, எனது தங்கை கையில் ஒரு செண்ட் (ஒரு ரூபாய்) கொடுத்தேன். அவளின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை என்னால் அளவிட முடியவில்லை.”

“இந்த விருது எங்களுக்குக் கிடைத்ததுபற்றிக் கூறியவுடன் எங்களால் நம்பவே முடியவில்லை. எங்களது அன்றாட நாட்குறிப்பு நூல் எங்களுக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அனைவருக்கும் பிடித்துள்ளதா” என்று வியப்புடன் கேட்டு வருகின்றனர்.

அப்புறமென்ன-…? புதிய ஆண்டு தொடங்குகிறது. வீட்டில் பெற்றோரிடம் கேட்டால் புதிய நாள்குறிப்பு கிடைக்கும். நீங்களும் எழுத ஆரம்பிக்கலாமே! அப்போ பரிசு யார் தருவான்னு கேட்கிறீங்களா?

“பெரியார் பிஞ்சு” தரும்.

விளையாட்டல்ல… போட்டி! சிறந்த நாள்குறிப்புப் பதிவுகளுக்கு இவ்வாண்டு (2017) இறுதியில் பரிசு உண்டூஊஊஊஊ! (போட்டி நடைமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.)

23
நேயப் பொங்கல்!நேயப் பொங்கல்!6th January 2017
உலகம் சுற்றி - 56th January 2017உலகம் சுற்றி - 5

மற்ற படைப்புகள்

2017_jan_pinju20
ஜனவரி
6th January 2017 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 12

Read More
2017_jan_pinju58
ஜனவரி
6th January 2017 by ஆசிரியர்

2016 கடந்து வந்த பாதையில்

Read More
2017_jan_pinju34
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

பொங்கல் கவிதை- புகழ்பெறும் பொங்கல்!

Read More
2017_jan_pinju71
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

சிறந்த பிஞ்சு வாசகர் 2016

Read More
ஜனவரி
1st December 2017 by ஆசிரியர்

வாசகர் மடல்

Read More
2017_jan_t17
ஜனவரி
6th January 2017 by ஆசிரியர்

ஜோ(க்)சியர்- 2017 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p