• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இந்தியா மட்டும் தான் நல்ல நாடா?

2017_jan_pinju26
ஜனவரி

ஓர் இரவு நேர உணவுக்குப் பின் நடந்த உரையாடல்

நிறைமொழி: அப்பா, உலகத்திலேயே இந்தியர்கள் தானே சிறந்தவங்க? இந்தியாதானே பெருசு?

நான்: ஏம்மா, யாரு சொன்னாங்க?

நிறைமொழி: நம்மதானே இந்தியா, அதுனால நம்மதானே பெருசு? பாகிஸ்தான், சீனா, அமெரிக்காகாரங்க எல்லாம் கெட்டவங்க இல்லையா?

நான்: அப்படி யாரும்மா சொன்னாங்க?

நிறைமொழி: நேஹா சொன்னா, டீச்சர் எல்லாருமே சொன்னாங்க….

நான்: அப்படியெல்லாம் இல்லம்மா, எல்லா நாட்லயும் நம்மள மாதிரி குட்டிப் பிள்ளைங்க, அப்பா, அம்மா, அய்யா, அப்பத்தான்னு மனுசங்க தான் நிறைஞ்சு இருக்கிறாங்க, முக்கால்வாசிப் பேர் வேலைக்குப் போறாங்க, உழைக்கிறாங்க, சாப்பிடுறாங்க, யாரும், யாரையும் விடப் பெரியவங்க இல்லம்மா! பாகிஸ்தானை விட இந்தியா பெருசும் இல்ல, இந்தியாவை விடப் பாகிஸ்தான் பெருசும் இல்ல….

நிறைமொழி: ஒலிம்பிக்ஸ்ல மட்டும் இந்தியா ஜெயிக்கும்போது நீங்க கை தட்டுனீங்க?

நான்: உசைன் போல்ட் ஜெயிச்சப்பக் கூட நான் கைதட்டினேனே, அந்த ஸ்பானிஷ் அக்கா சிந்துவுக்கு எதிரா நல்ல ஷாட் அடிச்சப்பக் கூட அப்பா கை தட்டினேனே? திறமையோடு விளையாடுற எல்லாருக்கும் அப்பா கை தட்டுவேன், அதேமாதிரி நீயும் செய்யணும்.

விளையாட்டு மனுசங்கள நாடுகளையெல்லாம் தாண்டி ஒரே இடத்துல கூடி இருக்கச் செய்யுறது, ஜெயிக்கிறப்ப சேர்ந்து கொண்டாடுறது, தோக்குறப்ப தட்டிக் கொடுத்து இன்னும் தீவிரமா முயற்சி செய்யக் கத்துக் கொடுக்குறதும்மா… எந்த நாடும், எந்த மாநிலமும், எந்த மனுஷனும், எந்த மொழிக்காரனும் பெரியவனும் கிடையாது, சின்னவனும் கிடையாதும்மா…

மகள் அநேகமாக இந்திய தேசத்தின் பொதுப்புத்தியில் திணிக்கப்படும் நம்பிக்கைகளை உள்வாங்கும் வயதில் இருக்கிறாள். இனி கன்னட மொழி உயர்ந்தது, இந்தி உயர்ந்தது, தமிழ் உயர்ந்தது, அய்ரோப்பியன் அறிவாளி, வெள்ளைக்காரன் நல்லவன், இந்தியா நல்லது, பாகிஸ்தான் கெட்டது, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், இந்துக்கள் புனிதமானவர்கள், ஆண்கள் பாதுகாவலர்கள், பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்,

மோடி உலகின் தலைசிறந்த உத்தமர், சைவம் ஒழுக்கம், அசைவம் குற்றம் என்றெல்லாம் சமூகத்தில் பலரும் புரிதலின்றி சொல்லிக் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கைகள் தேசபக்தியின் பெயரில் எல்லா இடங்களிலும் ஒரு நுட்பமான கண்ணுக்குத் தெரியாத பார்ப்பனீய ஊசியின் மூலம் ஏற்றப்படும். அந்த விஷம் இந்த தேசமெங்கும் வெற்றிகரமாகச் செலுத்தப்-பட்டிருக்கிறது. அதைப் பற்றி எதுவும் தெரியாமலேயே மக்களும் திரும்பச் சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களை ஏளனமாகப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

திரும்ப ஒருமுறை மகளைப் பார்த்து இப்படிச் சொன்னேன்,

நான்: பூமி மனுஷங்களுக்கு மட்டுமில்லம்மா! எல்லா உயிர்களுக்கும் அம்மா மாதிரி. இங்கே யாரும் யாருக்கும் பெரியவங்களும் இல்ல, சின்னவங்களும் இல்ல, இனிமே யாராவது, டீச்சர் கூட – இந்தியா பெரியது, பாகிஸ்தான் சின்னதுன்னு சொன்னா, அப்பா சொன்னது மாதிரியே தைரியமா சொல்லு!

“அங்கேயும் நம்மள மாதிரிக் குட்டிப் பிள்ளைங்க, அப்பா, அம்மா, அய்யா, அப்பத்தா எல்லாரும் இருக்குற வீடும், பள்ளிக் கூடங்களும் தானே இருக்குனு.”

பக்கத்தில் வந்து அணைத்துக் கொண்டு முத்தம் கொடுத்த மகளுக்கு நான் சொன்னவற்றில் கால்வாசி புரிந்திருக்கும், முழுவதும் புரிய வெகுநாட்கள் ஆகாது.

31
2016 கடந்து வந்த பாதை  செல்வி ஜெ.ஜெயலலிதா2016 கடந்து வந்த பாதை செல்வி ஜெ.ஜெயலலிதா6th January 2017
மின்சாரம் எதனால் ஆனது? 126th January 2017மின்சாரம் எதனால் ஆனது? 12

மற்ற படைப்புகள்

2017_jan_pinju14
கதை கேளு கதை கேளுஜனவரி
6th January 2017 by விழியன்

கறுப்பழகியின் புன்னகை

Read More
2017_jan_t18
ஜனவரி
6th January 2017 by ஆசிரியர்

பேசாதன பேசினால் 4

Read More
2017_jan_pinju22
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2017_may_s18
ஜனவரி
5th May 2017 by ஆசிரியர்

படக்கதை : சார்லி சாப்ளின்

Read More
2017_jan_pinju20
ஜனவரி
6th January 2017 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 12

Read More
ஜனவரி
1st December 2017 by ஆசிரியர்

வாசகர் மடல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p