• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வாழ்த்துகள் பிஞ்சுகளே!

2017_june_1_b4
ஜூன்

வகுப்பில் ஒரு எட்டு* முன்னே வைத்திருக்கிறீர்கள். நம் அண்ணன்கள், அக்காக்களெல்லாம் பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். மதிப்பெண்களை வைத்தெல்லாம் பெரிதாய் கவலை கொள்ளத் தேவையில்லை.

தமிழகக் கல்வித் துறை முக்கியமான பல மாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கிறது. ’நீட்’ என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கான தேர்வைக் கூட இவ்வளவு வன்முறையாகவும், மோசடியாகவும் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் அண்ணன்கள் அக்காக்களெல்லாம் பட்ட பாடுகளை நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். இவற்றிலிருந்து நம்மையும், நம் கல்வியையும் காக்க தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். இது ஒருபுறம்.

மற்றொரு புறம் – மேல்நிலைப் பள்ளிக் கல்வி தொடர்பான இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

1. 11-ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே,  12-ஆம் வகுப்பு பாடத்தை நடத்திக் கொண்டிருந்த கல்வி நிறுவனங்களின் தவறான போக்கை மாற்ற 10, 11,12 ஆகிய மூன்று வகுப்பிற்கும் பொதுத் தேர்வு உண்டு என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

2. மேல்நிலைப் பள்ளியில் பாடப்பிரிவுகளை வழங்கும்போதும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய ஆணையை நினைவூட்டி பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.
இவையிரண்டும் முக்கியமானவை,

மற்றபடி, கேள்வி முறைகளிலும், மதிப்பெண் அளவுகளிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எவ்வகையில் பயன்படும் என்பதை கல்வியாளர்கள் ஆய்வு செய்துவருகிறார்கள்.

கல்வித் துறையின் மீது அனைவரின் கண்களும் இருக்கும் வேளையில்தான் இப்போது அடுத்த வகுப்புக்குள் நீங்கள் நுழைகிறீர்கள்.

பெரியார் பிஞ்சு உங்களுக்கு சொல்வது ஒன்று தான். கல்வி என்பதும், படிப்பு என்பதும் வெறும் பள்ளிக் கல்வி மட்டுமல்ல… இந்த சமூகத்தில் சுற்றி இருப்பவற்றிலிருந்தும், இயற்கையிடமிருந்தும் நாம் கற்க ஏராளமாக உண்டு. பாடப் புத்தகங்களைத் தாண்டி நூலகங்களில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடித் தேடிப் படியுங்கள். மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. பாடத்தைப் புரிந்து மதிப்பெண்களையும் பெறுவது கூடுதல் சிறப்பு – அவ்வளவுதான்.

மதிப்பெண் எடுப்பதைவிட அறிவியலை நாம் எப்படி புரிந்து படிக்கிறோம் என்பதும் தான் முக்கியமானது. 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக் கோளை உருவாக்கிய கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ரிஃபாத் ஷாரூக், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்திருக்கும் மொத்த மதிப்பெண்கள் 750. அறிவியல் அறிவுக்கும், அறிவியல் பாட மதிப்பெண்ணுக்குமே தொடர்பில்லை எனும்போது பிற துறைகளில் உள்ள திறமைகளை மதிப்பெண்ணால் அளவிட முடியுமா?

1190 மதிப்பெண் எடுத்துள்ள யாழினி அக்கா, “நான் எல்லா செய்திகளையும் படிப்பேன்” என்று சொல்வதையும் கேளுங்கள்.

பள்ளிக்கூடம் என்பது நம்மையொத்த வயதுள்ள மாணவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பையும், கூடவே அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றைக் கற்கும் வாய்ப்பையும் சேர்த்துத் தரும் இடம். அவ்வளவே! பயப்படாமல், கவலையில்லாமல் மகிழ்ச்சியாக இவ்வாண்டு பள்ளிக் கூடத்தை அனுபவியுங்கள்!

22
படமும் ! அது சொல்லும் கதையும் !படமும் ! அது சொல்லும் கதையும் !2nd June 2017
தந்தை பெரியாரின் கதை - 32nd June 2017தந்தை பெரியாரின் கதை - 3

மற்ற படைப்புகள்

2017_june_1_b48
ஜூன்
2nd June 2017 by ஆசிரியர்

பிஞ்சுகளை வருத்தும் பிழையான எண்ணங்கள்!

Read More
2017_june_1_b53
ஜூன்
5th June 2017 by ஆசிரியர்

தந்தையைப் போற்றுவோம்!

Read More
2017_june_1_b5
ஜூன்
2nd June 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_june_1_b47
ஜூன்
3rd June 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2017_june_1_b36
ஜூன்
3rd June 2017 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2017_june_1_b12
ஜூன்
2nd June 2017 by ஆசிரியர்

மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியைப் படைத்த மாணவர்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p