• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜோதிடர் ஓடினார்!

2017_jul_jothidar
ஜூலை

 

சந்தை கூடும் இடத்திலே
சாலை ஓரம் தன்னிலே
குந்தி இருந்த சோதிடர்
குறிகள் பார்த்துக் கூறுவார்

அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா
ஆண் குழந்தை பிறக்குமா?
மதிப்பு உலகில் உயருமா?
மனதில் கவலை நீங்குமா?

இந்த வகையில் கேள்விகள்
ஏதுஏதோ அவரிடம்
வந்து மக்கள் கேட்பது
வழக்க மாகி விட்டது!

கும்பல் ஒன்று சுற்றிலும்
கூடி அன்று நிற்கையில்
அம்பு போலப் பாய்ந்துமே
அங்கோர் பையன் வந்தனன்!

இரைக்க இரைக்க வந்தவன்
என்னே! நமது ஜோதிடர்
இருக்கும் வீடு தீயிலே
எரியு தென்றே கதறினன்

பையன் சொல்லைக் கேட்டதும்
பதறி எழுந்த ஜோதிடர்
அய்யோ, அப்பா! என்றுமே
அலறி ஓட்டம் பிடித்தார்!

முன்னால் அவரும் வேகமாய்
மூச்சுப் பிடித்து ஓடவே
பின்னால் அவரைத் தொடர்ந்து
பெரிய கூட்டம் ஒன்றுமே!

நாடி தளர்ந்து விட்டது!
நாக்குத் தொங்கிப் போனது!
ஓடி வந்தார் அப்படி!
உடல் குலுங்கச் ஜோதிடர்!

மனைவி மக்கள் தீயிலே
மடிந்து வீட்டில் உள்ளவை
அனைத்தும் பொசுங்கிச் சாம்பலாய்
ஆன தென்றே எண்ணினார்!

எண்ணம் போல வீட்டிலே
எதுவும் நடக்க வில்லையே!
என்றும் உள்ள நிலையிலே
இருந்த வீட்டைக் கண்டனர்!

புரளி செய்த பையனைப்
பிடித்துக் கொண்டு ஜோதிடர்
மிரட்டிக் கேட்க லானார்!
மீசை இரண்டும் துடித்தன!

“நாட்டுக் கெல்லாம் ஜோதிடம்
நானு ரைப்பேன் என்கிறீர்!
வீட்டில் தீ! தீ! என்றதும்
விழுந்த டித்து வருகிறீர்!

எந்த விஷயம் நடப்பினும்
எனக்குத் தெரியும் என்கிறீர்!
சொந்த விஷயம் அறிந்திட
ஜோதிடத்தால் முடிந்ததோ?

பையன் இதனைச் சொன்னதும்
பக்கம் இருந்த அனைவரும்
கையைத் தட்ட லாயினர்!
கலகலென்று சிரித்தனர்!

– குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா

நூல்: ஈசாப் பாடல்கள்

20
A BIRDS'S LIFEA BIRDS'S LIFE1st July 2017
My school is cool1st July 2017My school is cool

மற்ற படைப்புகள்

2017_jul_s7
ஜூலை
1st July 2017 by ஆசிரியர்

நாங்கள் பெரியார் பிஞ்சு படிக்கிறோம்! அப்ப நீங்க!

Read More
2017_jul_pinju
ஜூலை
1st July 2017 by ஆசிரியர்

பிஞ்சுகள் பின்பற்ற வேண்டியவை!

Read More
2017_jul_Pg-35
ஜூலை
1st July 2017 by ஆசிரியர்

எல்லாம் இனிதாகும்

Read More
2017_jul_s18
ஜூலை
1st July 2017 by ஆசிரியர்

ஆகாய வீடு

Read More
2017_jul_s2
ஜூலை
1st July 2017 by ஆசிரியர்

பெண் மருத்துவர்கள்

Read More
2017_jul_s9
ஜூலை
1st July 2017 by ஆசிரியர்

கல்வி வள்ளல் காமராசர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p