• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதுமைச்சிந்தனை

2017_sep_s27
செப்டம்பர்

அதே கேன்…
நன்னீர் குடிக்க..
சிறுநீர் கழிக்க

– தமிழோவியன்

திருச்சி மாவட்டம் குறும்பப்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவைகள் உண்டாகி அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் சூழல் உருவானது. மேலும் இந்நிகழ்வு நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருந்ததால் பள்ளி நிர்வாகம் செய்வதறியாது திகைத்து நின்றது.

இதுகுறித்து மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது. உடனே இதற்குத் தீர்வு காணவேண்டும் என முடிவு செய்தனர். மாணவர்கள் சார்பாக அய்ந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அக்குழுவில் பதின்மூன்று வயது நிரம்பிய சுபிக் பாண்டியன், சந்தோஷ், தயாநிதி, ராகுல் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த அய்வர் குழு பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்பதை தீவிரமாய் ஆராயும்பொழுது ஓர் உண்மை வெளிப்பட்டது. பள்ளியில் சரியான முறையில் கழிப்பிட வசதி இல்லாததால் மாணவர்கள் கட்டாந்தரையில் சிறுநீர் கழிக்கின்றனர். கழிவுகள் வெளியேற சரியான வடிகால் வசதி இல்லாததால் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே பள்ளி அறைகளில் விரும்பத்தகாத மணம் வீசுகிறது. மேலும் சிறுநீர் கழிக்கும்போது தரைத்தளத்தில் பட்டு காலிலும், செருப்பிலும் தெறிப்பதால் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர்த் தொற்று (ஹிக்ஷீவீஸீணீக்ஷீஹ் மிஸீயீமீநீtவீஷீஸீs) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என அறிந்துகொண்டனர்.

பிரச்சினைகளைக் கண்டறிந்து விட்டோம். இனி தீர்வு காணவேண்டும் என்று முனைப்புடன் களத்தில் இறங்கினர். உடனே கழிவறை கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தனர்.

கழிவறை கட்ட வேண்டுமானால் அதிகச் செலவு ஆகும். அது நம்மால் முடியாது என்று உணர்ந்தனர். அதிகம் செலவும் ஆகக் கூடாது. அதே சமயத்தில் இதற்கு முடிவும் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர். அய்வர் குழுவின் தொடர் உழைப்பால் அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டது.

20 லிட்டர் தண்ணீர் கேன்களை தலைகீழாகப் பார்த்தால் ஆண்களுக்கான சிறுநீர் கழிப்புப் பாத்திரம் போல இருக்கிறதே… அதைப் பயன்படுத்தினால் என்ன  என்ற புதுமையான எண்ணம் தோன்றியது. 20 லிட்டர் பழைய வாட்டர் கேன்களை வாங்கி அதை நீளவாட்டில் பிறைவடிவில் வெட்டி சரியான வடிவம் செய்தனர். முதலில் அதற்கு வெளிர் பச்சை வண்ணம் பூசி சுவற்றில் பொருத்தி, அனைத்து வசதிகளோடும் நேர்த்தியாய் கழிவறையைத் தயார் செய்தனர். பழைய தண்ணீர் கேன்களையும், இதற்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும் வாங்குவதற்கு மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் அன்பளிப்பு பெற்று சிறப்பாய் செய்து முடித்தனர்.

குறைந்த விலை, குறைவான எடை, உறுதியான நீடித்த உழைப்பு என்று இம்மாணவர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுச் சிந்தனை முயற்சிக்கு “பாதுகாப்பான சிறுநீர் கழிக்கும் அமைப்பு’’ என்று பெயரிடப்பட்டது. இதை இவர்கள் பள்ளியில் செய்ததோடு மட்டுமல்லாமல் மற்ற பள்ளிகளுக்கும் சென்று இதைப்பற்றி விளக்கிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழ் மாணவர்களின் அபார சிந்தனையால் உருவான இந்தப் புதிய முயற்சிக்கு 2016இன் மாற்றுச் சிந்தனைக்கான I can
(என்னால் முடியும்) விருது வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்தப் பெருமை மிகுந்த செயலுக்கு கிராமக் கல்விக் குழுவும் பாராட்டி பரிசுகளை வழங்கியது.

மாற்றுச் சிந்தனை, கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றால் இன்று இந்தக் கிராமத்து மாணவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது! பிரச்சினைகளைக் கண்டறிவோம். தீர்வுகளைத் தேடுவோம். பிஞ்சுகளால் முடியாதா என்ன? <

13
பொது நலமே இவர் சுயநலம்!பொது நலமே இவர் சுயநலம்!27th September 2017
ஒளி இழந்த சூரியன்!27th September 2017ஒளி இழந்த சூரியன்!

மற்ற படைப்புகள்

2017_sep_s33
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

ஒளி இழந்த சூரியன்!

Read More
2017_sep_s7
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2017_sep_s17
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு

Read More
2017_sep_s46
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு

Read More
2017_sep_s12
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்!

Read More
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

சென்னை அருங்காட்சியகம் (எழும்பூர்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p