• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

அனிதாவின் கூட்டாஞ்சோறு

2017_oct_s4
அக்டோபர்கதை கேளு கதை கேளு


அனிதாவின் கூட்டாஞ்சோறு

– விழியன்

ரஹீம் தன்னுடைய பங்கான பெரிய பித்தளைச் சொம்புடன் வயல்களைத் தாண்டி இருக்கும் பெரிய ஆலமரத்திற்கு ஓடினான். ஏற்கனவே அங்கு அனிதா வந்து சேர்ந்திருந்தாள். இன்று அரை ஆண்டு விடுமுறை துவங்குகின்றது. சில நாட்கள் விடுமுறை என்பதால் யாரும் வெளியூருக்குச் செல்லவில்லை. தினமும் தேர்வு எழுதும் போதே விடுமுறையினை எப்படிச் செலவிடுவது என்று முடிவு செய்திருந்தார்கள்.

அந்த முடிவின்படி இன்று கூட்டாஞ்சோறு விளையாட்டு. அனைவரும் கூடி ஒன்றாக சமைப்பது. ஆனால் யாருக்கும் என்ன சமைப்பது என்று தெரியாது. அனிதா ஒவ்வொருவரும் என்ன கொண்டு வரவேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தாள். ரஹீம் பெரிய சொம்பு, டேவிட் கொஞ்சம் அரிசி, ராகவி கொஞ்சம் வெல்லம், மணி சில குச்சிகள், ரெஜினா ஒரு தீப்பெட்டி. அவ்வளவு தான். மிக எளிமையான, எந்த வீட்டிலும் திட்டு வாங்காத அளவிற்கே பொருட்கள்.

“என்ன அனிதா கையில் என்ன புக்?’’ என்றான் ரஹீம். அவள் கையில் இருந்தது ஏழாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம். இவர்கள் அனைவரும் படிப்பது அய்ந்தாம் வகுப்புதான். “அகமதோட அண்ணன் புக், ரஹீம். எப்படியும் ரெண்டு வருஷம் கழிச்சு படிக்கப்போறோம். சும்மா பார்த்துகிட்டு இருந்தேன்” என்றாள் அனிதா.

மூச்சு வாங்க டேவிட் ஓடிவந்தான். ஒரு மஞ்சள் பையில் அவனுடைய பங்கான அரிசியை எடுத்தான். “ஏன்பா, என்கிட்ட என்ன அரிசின்னு சொல்லி இருக்கணும் இல்ல. ரெண்டு அரிசி இருக்காமே! இட்லிக்கு ஒரு அரிசி, சோத்துக்கு ஒரு அரிசின்னு. எங்கம்மா கிட்ட கேட்டேன். என்ன செய்யப் போறீங்கன்னு கேட்டாங்க. தெரியலன்னு சொன்னேன். இந்தா இதை எடுத்துட்டு போன்னு சொன்னாங்க’’ என்று மஞ்சள் பையை நீட்டினான் டேவிட்.

தேவையான அளவு அரிசியை மட்டும் எடுத்து பம்ப் செட் அருகே சென்று கழுவ ஆரம்பித்தாள். ரஹீமும் டேவிட்டும் அருகே நின்றிருந்தார்கள். “அடுத்த முறை நாங்க செய்யணும் இல்ல’’ என்றார்கள். இன்னும் தங்கள் சக கூட்டாளிகள் வரவில்லை என்று நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ரெஜினா, ராகவி மற்றும் மணி மூவரும் ஒன்றாக வந்தார்கள். அவர்களுக்கு நிர்ணயித்த பொருளை சரியாக எடுத்து வந்தார்கள். கூடவே ஒரு குட்டி டிக்கெட்டும். மணியின் தங்கையும் வந்திருந்தாள். அரிசியைக் கழுவிவிட்டு ஆலமரத்தின் கீழே வந்தார்கள். குச்சிகளைக் கீழே வைத்து, ரெண்டு பெரிய கற்களை அடுப்பு போல வைத்தார்கள். நெருப்பு மூட்டினார்கள். வெறும் அரிசியும் தண்ணீரும் மட்டும் பாத்திரத்தில் இருந்தது. அதில் வெல்லத்தைக் கொட்டினான் மணி.

சோறு கொதிப்பதை எல்லோரும் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பாக்கெட்டில் இருந்து இரண்டு பர்பி துண்டுகளை எடுத்தாள். “இவ்ளோதான் இருக்கு எல்லோருக்கும் ஒரு கடி மட்டும்தான்’’ என்று எவ்வளவு கடிக்க வேண்டும் என்று அனிதாவே கூறினாள்.

“டேய், கொதிக்கப்போகுது, துழாவ கரண்டி இருந்தா நல்லா இருக்கும்’’ என்றாள் ரெஜினா. அனிதா எழுந்து சென்று எங்கிருந்தோ ஒரு குச்சியை உடைத்து வந்தாள். இதான் கரண்டி என்றாள். துழாவினார்கள். ஒரு மணமும் வரவில்லை. ஆனாலும், ‘ஆஹா என்ன மணம் என்ன மணம்’ என்று சொல்லிக்கொண்டார்கள்.

“ஹே, சாப்பிட தட்டு?’’ என்றாள் மணியின் தங்கை. “ஆமால்ல, அதை மறந்துட்டோமே. பாத்திரத்தில் கையைவிட்டு நேரா சாப்பிட்டுக்கலாமா?” ரெஜினா ஒரு யோசனைச் சொன்னாள். “அதோ வாழைத் தோட்டம் இருக்கில்ல அங்கிருந்து பாதி இலை எடுத்துட்டு வந்தா போதும்’’ என்று சொல்வதற்குள் ரஹீமும் டேவிட்டும் ஓடினார்கள்.

சாப்பாடு தயார். கொதிவந்து அடங்கி விட்டது. அதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அனிதா எல்லோருக்கும் பரிமாறினாள். குச்சியைக் கரண்டியாக்கி இலையைத் தட்டாக்கி எல்லோரும் வயல் வரப்பின் ஓரத்தில் அமர்ந்து, ஓடும் நீரில் கால் வைத்து உண்ண ஆரம்பித்தார்கள்.

“செம சுவைப்பா’’ என்றான் மணி

“ஆமாம்! ஆமாம்!” என்றனர் எல்லோரும் தலையாட்டியபடி.

“அனிதா, நீ பெரியவளாகி பெரிய ஹோட்டல் கட்டு’’ என்றான் ரஹீம்.

“ரஹீம், அனிதா அம்மா எப்படி செத்தாங்கன்னு மறந்துட்டியா? ஒழுங்கா வைத்தியம் பார்க்க முடியாம, என்ன விவரமும் தெரியாம இல்லை இறந்து போனாங்க’’ என்றாள் ராகவி.

“ஆமா ரஹீம், நான் டாக்டராகப்போறேன்’’ என்றாள் அனிதா உறுதியாக.

24
அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!4th October 2017
வாட்ஸ் அப்பில் வந்தது...4th October 2017வாட்ஸ் அப்பில் வந்தது...

மற்ற படைப்புகள்

5
கதை கேளு கதை கேளுநவம்பர் 2023பிஞ்சு 2023
1st November 2023 by விழியன்

லாலி

Read More
2020_dec_v20
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2020
28th December 2020 by விழியன்

பொம்மாசூரா

Read More
17
கதை கேளு கதை கேளுஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
1st January 2024 by விழியன்

உஷ்ஷ்…

Read More
8
கதைகதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
8th September 2023 by விழியன்

மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா

Read More
24
2024கதை கேளு கதை கேளுமே 2024
29th April 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு… மெல்லிய தீடர் திருப்பம்

Read More
2019_nov_v28
கதைகதை கேளு கதை கேளுநவம்பர் 2019
1st November 2019 by விழியன்

ஷொய்ன்யிங் ளை டவ் இண்டு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p