• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சு மனம்

2017_oct_s13
அக்டோபர்

தங்கம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால், தினமும் மதிய வேளையில் குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்து வருபவர். ‘இம்மாம் பெரிய சாப்பாட்டுக் கூடை. இனிமேல் அந்தக் கூடையில் ஒரு சிறிய பொருளைக் கூட வைக்க முடியாது’ என்ற அளவிற்கு சாப்பாட்டுக் கூடை முழுக்க பைகளாக இருக்கும். வாய் சிவக்க வெற்றிலை. அந்த வாயில் இருந்து வரும் அதிகமான வார்த்தைகள் “ஒழுங்கா சாப்பிடு’’ என்பதே.

கல்வியாண்டு துவக்கத்திலேயே சாப்பாடு கூடை எடுக்க பாட்டியிடம் சொல்லி வைக்க வேண்டும். பகல் சரியாக 11.30க்கு தன் வீட்டை பூட்டிவிட்டு காலி கூடையுடன் புறப்படுவார். சுமார் ஒரு மணி நேர நடையில் ஒவ்வொரு குழந்தை வீடாகச் சென்று சாப்பாட்டுப் பைகளை வாங்கிடுவார். வீட்டு வாசலில் பாட்டி நிற்கும்போது சாப்பாட்டுப் பை தயாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு பயங்கர குரல் ஒலிக்கும். முந்தைய நாள் சாப்பாட்டில் குறை இருந்தால் மீண்டும் நினைவுபடுத்துவார். “கொய்ந்தைக்கு காரமா இருக்குமா. கொஞ்சம் கொரச்சுக்கோ’’ என்பார்.

12.30 மணிக்கு சாப்பாட்டு மணி அடிக்கவும் தங்கம்மா பாட்டி பள்ளி வாசலை வந்தடையவும் சரியாக இருக்கும்.

பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரு தார்ப்பாய் அவர் கையில் வந்துவிடும். பள்ளியின் ஒரு மூலையில் அந்த தார்ப்பாயை மறைத்து வைத்திருப்பார். அதில் எல்லா குழந்தைகளையும் உட்கார வைப்பார். யார் யாருக்கு எந்த சாப்பாடு சேர வேண்டுமோ அவர்களிடம் கொடுப்பார். பெரிய பசங்க அவருக்கு உதவுவார்கள். பின்னர் ஒவ்வொருவரும் முழுதாக சாப்பிடுவதை உறுதி செய்வார். கொஞ்சம் மீதி வைத்தாலும் அன்பாக மிரட்டுவார். அந்த உருட்டல் பார்வையை பார்த்ததும் குழந்தைகள் மீண்டும் சாப்பிடுவார்கள். அப்படியும் மிச்சம் வைக்கும் சேட்டையர்கள் இருக்கவே செய்தார்கள்.

எந்தக் குழந்தைக்கேனும் உடம்பு சரி இல்லை என்றால் மதியமே ஆசிரியையிடம் பேசிவிட்டு குழந்தையை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிடுவார். தங்கம்மா பாட்டி பல ஆண்டுகளாக பள்ளிக்கு பரிச்சயம் என்பதால் ஆசிரிய-_ ஆசிரியைகளும் நம்பி அனுப்பி வைப்பார்கள். சில நிமிடங்களில் குழந்தையின் வீட்டிற்கு கைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தை வந்து சேர்ந்ததா என்றும் உறுதி செய்திடுவார்கள்.

வைகை அதே பள்ளியில் நன்கு படிக்கும் ஒரு அமைதியான சிறுமி. வைகைக்கு அந்தப் பாட்டியின் கூட்டத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால், அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் செல்வதால் காலையிலேயே சாப்பாடு செய்து கொடுத்து அனுப்பி விடுவார்கள். சாப்பிட்ட பிறகு என்றாவது ஒரு நாள் பாட்டியின் அருகே சென்று நிற்பாள். “ என்ன கண்ணு சாப்பிட்டியா?’’ என்பார். குழந்தையின் பெயர் தெரியவில்லை என்றாலும் கனிவாகப் பேசுவார். சாப்பிடவில்லை என்றால்தான் மிரட்டல் எல்லாம்.

வைகை தன் பெற்றோரிடம் எவ்வளவோ சொல்வாள். “மதிய சாப்பாட்டை அந்தப் பாட்டியிடம் கொடுத்து அனுப்புங்க” என்று. ஆனால், சாத்தியப்படவில்லை. ஆண்டின் இறுதியில் அந்த எண்ணம் சாத்தியமானது. வைகையின் அப்பாவிற்கு வடமாநிலம் ஒன்றிற்கு இடமாற்றல் வந்துவிட்டது. அம்மாவும் வேலையை விட்டுவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும். கல்வியாண்டின் கடைசி மாதம். ஆனால், ஒரு வாரத்திற்குதான் முழுநாள் பள்ளி. அதாவது தேர்வு ஆரம்பித்தால் பாதி நாள் மட்டுமே பள்ளி. தங்கம்மா பாட்டியை பார்க்க முடியா—-து.

—-எப்படியோ பேசி வைகையின் சாப்பாட்டுப் பை தங்கம்மா பாட்டியின் கூடையில் ஏறியது. வைகையின் அம்மா வேலையை விட்டிருந்ததால் பாட்டியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார். அதுவும் ஒரேஒரு வாரத்திற்குத்தான். வைதேகிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. மதியம் எப்ப ஆகும் என காத்திருந்தாள். எல்லோரிடமும் “இன்னிக்கு மதியம் எனக்கு தங்கம்மா பாட்டி சாப்பாடு எடுத்து வருவாங்களே’’ என்று மகிழ்ச்சியாக கூறினாள்.

தார்ப்பாயில் அமர்ந்து வைகை உண்டாள். வேண்டுமென்றே, “போதும் பாட்டி’’ என்று பாதி சாப்பாட்டில் நிறுத்தினாள். “ஒழுங்கா சாப்பிட்றியா இல்லையா’’ என்று மிரட்டல். ஒரு சிறு சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் சாப்பிட்டாள் வைகை. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பைகளை பாட்டியின் கூடையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். வைகை மட்டும் அங்கேயே நின்றாள்.

“என்ன கண்ணு, பசங்க எல்லாம் போச்சு, நீ போகல?’’ என்றார் பாட்டி.

“இந்தா பாட்டி’’ என்று ஒரு டிபன் பாக்ஸை நீட்டினாள் வைகை.

“நீ சாப்பிடலையா?… நான் பார்த்தேனே, நீ முழுசா சாப்பிட்டியே’’.

“பாட்டி நான் சாப்பிட்டேன். இது உங்களுக்காக எடுத்து வந்தது. எப்படியும் நீங்க திரும்ப எல்லா பாத்திரங்களையும் கழுவி விட்டு ஒவ்வொரு வீடா கொடுத்துட்டு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். உங்களுக்கு எவ்வளவு பசி இருக்கும். அதான் அம்மாகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு சாப்பாட்டு பாக்ஸ் கொடுத்துவிட சொன்னேன்.’’

“கண்ணு’’ என்று முழுமையாக சொல்லக்கூட முடியவில்லை பாட்டியால். கண்களில் பாசக் கண்ணீர் தழும்பியது.

ஒரு வாரத்திற்கு தினமும் வைகைதான் பாட்டிக்கு சாப்பாடு கொடுத்தாள். தகவல் கடைசி நாள்தான் மற்ற குழந்தைகளுக்குத் தெரியவந்தது. வைகை கோடை விடுமுறையில் வடமாநிலம் சுற்றிப் பார்க்கப் போய்விட்டாள். அடுத்த கல்வியாண்டில் இருந்து பாட்டிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் இருந்து மதியம் ஒரு சாப்பாட்டு பாக்ஸ் வர ஆரம்பித்தது. அப்போதுதான் வைரமான வைகையின் பிஞ்சு மனம் தங்கமான தங்கம்மா பாட்டிக்குப் புரிந்தது. ஆனாலும், பாட்டியின் மிரட்டல் மட்டும் குறையவில்லை.

 

-வெங்கட.இராசா, ம.பொடையூர்

18
உங்கள் நண்பர்களுக்கு இதை Forward செய்ய வேண்டாம்உங்கள் நண்பர்களுக்கு இதை Forward செய்ய வேண்டாம்4th October 2017
சிறு கை அளாவிய ஜுவல்4th October 2017சிறு கை அளாவிய ஜுவல்

மற்ற படைப்புகள்

2017_oct_s10
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

மகிழதிகாரம்

Read More
2017_oct_s28
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்!

Read More
2017_oct_s22
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2017_oct_s14
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

கணிதப் புதிர்

Read More
அக்டோபர்
1st October 2017 by ஆசிரியர்

வாசகர் மடல்

Read More
2017_oct_s3
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p