• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

இம்மாவின் மூக்குக்கண்ணாடி

2017_nov_s30
கதை கேளு கதை கேளுநவம்பர்

“இம்மா, இங்க கவனி, நான்  பலகையில்  எழுதுறதை கவனிக்காம என்ன செய்ற?” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்தில் இருந்த இட்டி கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. அன்றைய பாடம் “எப்படி மனிதர்கள் அடிக்க வரும்போது தப்பிப்பது?” என்பதே. இவர்களுக்கு பள்ளிக்கூட வகுப்புகளே மொத்தம் ஏழு நாட்கள் தான். முதல் நாள் எப்படி சாப்பாடு தேடுவது. அடுத்த நாள் பாடம் எப்படி மனிதர்களின் ரத்தத்தைச் சுவைப்பது, எந்த இடத்தில் மறைந்துகொள்வது, கொசுமருந்து போடப்பட்டதும் எப்படி அங்கிருந்து தப்பிப்பது, எப்படி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ்வது என்று தினம் ஒரு பாடம். முன்னர் எல்லாம் 5 நாள்தான் இருந்தது, இப்போது தான் 7 நாள் பாடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் மொத்தமே ஏழு நாட்கள் தான் பள்ளியில். ஆனால் அதற்கே கொசுக்கள் மூக்கால் அழும்.

நம்ம இம்மாவின் பிரச்சினைக்கு வருவோம். இம்மா தன்னுடைய மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டது. கண்ணாடி இல்லாததால் பலகையில் எழுதி இருப்பது சரியாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததால் வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார் ஆசிரியர். இம்மா கொசு கொஞ்சம் பயந்து இருந்தது. அப்பா எப்படியும் திட்டப்போகிறார். இம்மாவும் இட்டுவும் எல்லா இடத்திலும் இம்மாவின் கண்ணாடியைத் தேடினார்கள். ஓவென அழ ஆரம்பித்தது இம்மா. “பொறுமையா இரு, எனக்கு ஒரு துப்பறிவாளன் கொசு தெரியும் அவர் சரியா உன் கண்ணாடியை கண்டுபிடிச்சுக் கொடுத்திடுவார்.” அந்த துப்பறிவாளனைத் தேடிச்சென்றனர்.

இருட்டு அறையின் பின்புறம் சிலந்திகள் நிரம்பி இருந்த இடத்தில் துப்பறிவாளன் இருந்தார். அந்த இடமே விநோதமாக இருந்தது. “வாங்க கொசுக்களே, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று முக மலர்ச்சியுடன் கேட்டது துப்பறிவாளன் கொசு. தன் மூக்குக்கண்ணாடியை காணவில்லை என்ற விஷயத்தை தெரிவித்தது இம்மா. சில கேள்விகளைக் கேட்டது. “என் பின்னாடி வாங்க” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது துப்பறிவாளன்.

வழக்கமாக கொசுக்கள் நேராக போகும். ஆனால் துப்பறிவாளன் கொசு திடீரென வலது புறமும் திடீரென இடது புறம் திரும்பி திரும்பிச் சென்றது. பின்னாடி வந்த இரண்டு கொசுக்களும் கொஞ்சம் குழம்பிப்போயின. வேகமாக போய்க்கொண்டிருந்த துப்பறிவாளன் கொசு கொஞ்சம் வேகத்தை குறைத்தது. எதிரே ஆசிரியர் கொசு அமர்ந்துகொண்டிருந்தது “வணக்கம் ஆசிரியரே, நலமா?” என்று நலம் விசாரித்துவிட்டு மீண்டும் வேகம் பிடித்தது. இம்மாவின் வீட்டின் பக்கம் போகும் என எதிர்பார்த்தார்கள், ஆனால் து.கொசு அவர்கள் பள்ளி வகுப்பு நடந்த மூலைக்குச் சென்றது. அங்கும் இங்கும் தேடியது. இம்மாவும் இட்டுவும் அமைதியாக பார்த்தன. அட நாம தான் இங்க தேடிட்டோமே. அப்புறம் எப்படி து.கொசு இங்கே கண்டுபிடிக்கும் என உள்ளுக்குள் சிரித்தன.

சரியாக பத்தாவது நிமிடத்தில், “இம்மா, அதோ அந்த கட்டிலுக்கு கீழே உன் கண்ணாடி இருக்கும் பார். நீ வகுப்பில் அமர்ந்து இருந்த போது கண்ணாடியை கழற்றி வைத்திருக்கின்றாய், மின்விசிறியை யாரோ போட்டபோது கண்ணாடி பறந்து போயிருக்கு, அதனை நீ கவனிக்கவில்லை” என்றது து.கொசு. அட ஆமாம் சரியாக அங்கே தான் கண்ணாடி இருந்தது. இம்மா மகிழ்ந்தது.

“துப்பறிவாளன் கொசுவே, உங்களிடம் நான் ஒரு விஷயம் கேட்கவா?”

“ஓ”

“உங்களுக்கு வயது நிறைய ஆகிறது, ஆனாலும் எப்படி கண்ணாடி போடாம இருக்கீங்க? எப்படி கூர்மையா யோசிக்கிறீங்க?”

“அதுவா? நான் பச்சையா இருக்கும் எல்லா காய்கறிகளையும் விடாமல் சுவைத்துவிடுவேன், அதே போல கேரட்டையும் விடுவதில்லை. மாலை வேளையில் டி.வி. பார்ப்பதை அறவே தவிர்த்துவிடுவேன். இன்னும் எவ்வளவு நாள் கடந்தாலும் என் கண் சிறப்பா தெரியும். மூளையும் வேலை செய்யும்.”

இதைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஏதோ பொருள் அவர்கள் மூவரை நோக்கி வந்தது. “என் பின்னாடி வாங்க” என கத்தியது து.கொசு. அதன்படியே இம்மாவும் இட்டுவும் பின்னால் சென்றார்கள். மூவரும் பாதுகாப்பான இருட்டு அறையை அடைந்தார்கள். “அப்பாடி!”

“உங்க பள்ளியில் சொல்லி கொசு ‘பேட்’ட்டிடம் இருந்து தப்பிப்பது எப்படின்னு பாடம் வைக்கச் சொல்லுங்க இட்டு, இம்மா.. அதைப்பற்றி நானே ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். நல்ல விளக்கப்படமும் அந்த புத்தகத்தில் இருக்கு”

“இன்னொரு நாள் பள்ளியா…” என வாயை பிளந்தது இட்டு. ஹேவென மற்ற இருவரும் அதனைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.

20
பிஞ்சு செய்திகள்பிஞ்சு செய்திகள்6th November 2017
சுடோகு6th November 2017சுடோகு

மற்ற படைப்புகள்

16
அக்டோபர் 2024கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

கதை கேளு… கதை கேளு…ரெடி…கெட்…செட்…கோ!

Read More
2017_nov_s39
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

வண்ணத்துப்பூச்சி

Read More
2021_nov_v8
கதை கேளு கதை கேளுநவம்பர் 2021
27th October 2021 by விழியன்

தடுப்பூசி

Read More
2016_dec_pinju14
கதை கேளு கதை கேளுடிசம்பர்
7th December 2016 by விழியன்

பால் பாயாசம்

Read More
2022_mar_p6
கதை கேளு கதை கேளுமார்ச் 2022
2nd March 2022 by விழியன்

ஆடு…மாடு…ஓடு…

Read More
2019_nov_v28
கதைகதை கேளு கதை கேளுநவம்பர் 2019
1st November 2019 by விழியன்

ஷொய்ன்யிங் ளை டவ் இண்டு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p