• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள் – கென்யா

2018_feb_s13
பிப்ரவரி

– தமிழோவியன்

அமைவிடமும் எல்லைகளும்:

>>           கென்யக் குடியரசு என்ற அழைக்கப்படும் கென்யா ஒரு கிழக்கு ஆப்ரிக்க நாடாகும். இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே எத்தியோப்பியாவும், கிழக்கே சோமாலியாவும், தெற்கே தான்சானியாவும் மேற்கே உகாண்டாவும், வடகிழக்கே சூடானும் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.

>>           கென்யாவின் தலைநகரம் நைரோபி.

>>           நாட்டின் மொத்தப் பரப்பளவு 5,80,367 கி.மீ2 (2,24,080 சதுர மைல்)

மொழியும் மக்களும்:

>>           ஆட்சி மொழிகள் ஆங்கிலம் மற்றும் சுவாகிலி

>>           மக்கள் தொகை 48 மில்லியன்

>>           மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும்  இறப்பு விகிதம் அதிகமாகவும் உள்ளது.

>>           97% ‘பான்டு’ மற்றும் ‘நிலோடிக்’ மக்கள் அதிக அளவு வசிக்கிறார்கள்.

>>           83% மக்கள் கிறித்துவ, 11.2% மக்கள் இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுகின்றனர்.

>>           2.4% மக்கள் மத மறுப்பாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

>>           பல்வேறு வகையான கலாச்சார, பண்பாடுகளை உடைய நாடு.

>>           பல்வேறு வகையான கிராமிய இசை மற்றும் பாடல்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன.

>>           கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை, தடகளப் போட்டிகள் போன்ற வகைகளில் உலகத் தரமிக்க வீரர்களைக் கொண்ட நாடு.

>>           உலகத்தரமிக்க ஓட்டப் பந்தைய வீரர்களைக் கொண்ட நாடு.

இயற்கை:

>>           கென்யா வெப்பமண்டல நாடு.

>>           தலைநகர் நைரோபியை சுற்றி குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

>>           நைரோபி நகரைச் சுற்றி சவானா புல்வெளி நிலங்கள் காணப்படுகின்றன.

>>           உலகளவில் மிகப் பிரபலமான நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி இங்கு உள்ளது.

>>           கென்ய வன விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, எருமை, நீர் யானை மற்றும் ஒட்டகச்சிவிங்கி, யானை ஆகியன அதிக அளவு உள்ளன.

>>           அதிக அளவு தேசிய விலங்குகள் பூங்கா உள்ள நாடு.

>>           கென்யாவின் உயரமான கென்யமலை, மொத்த ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிக உயரமான மலையாகும்.

பாட்டியன் (17,058 அடி) நெலியோன் (17,022 அடி) லெனானோ (16,355 அடி) என இம்மலையில் மூன்று மிக உயரமான சிகரங்கள் உள்ளன.

பொருளாதாரம்:

>>           விவசாயத் தொழிலாளிகள் நிறைந்துள்ளனர்.

>>           அய்ரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் காபி மற்றும் மலர் வகைகளை ஏற்றுமதி செய்யும் நாடு கென்யா.

>>           நாணயம் கென்ய சில்லிங் (ரிணிஷி)

>>           சுற்றுலா மற்றும் விவசாயத்தில் அதிகளவு வருமானம் பெறுகிறது.

>>           கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பொருளாதாரத்தில் வளரும் நாடு.

>>           மலர்களை ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

>>           நாட்டின் வளர்ச்சியடைந்த மூன்று நகரங்களாக நைரோபி, மேம்பாஸா, கிசுமு ஆகியவை உள்ளன.

>>           சாலை, இரயில்வே, வழி விமானப் போக்குவரத்துகள் தரமாக உள்ள நாடு. கென்யாவில் 15 விமான நிலையங்கள் பரபரப்புடன் இயங்குகின்றன.

>>           டானா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள டர்க்வெல் ஜார்ஜ் அணைக்கட்டு மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்கப்பட்டு நாட்டுக்குப் பயன்படுகிறது.

>>           அதிகப்படியான குழந்தைகள் கல்வியில்லாமல் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அரசியல் நிர்வாகம்:

>>           இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த கென்யா 1963 டிசம்பர் 12இல் விடுதலை பெற்றது.

>>           கென்யா குடியரசு நாடு.

>>           இங்கு குடியரசுத் தலைவரே ஆட்சி மற்றும் அதிகாரத் தலைவர் ஆவார்.

>>           நாடாளுமன்றம் மேலவை, கீழவை என இரு அவைகளைக் கொண்டது.

>>           பல கட்சி ஆட்சி முறை உள்ள நாடு.

>>           கென்யாவை 1888 முதல் 1962 ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர்.

>>           இரண்டாம் உலகப் போரில் பெருமளவு கென்யர்களையே இங்கிலாந்து பயன்படுத்தியது.

>>           தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய படைகளை இராணுவத்தில் கொண்ட நாடு.

>>           கென்யா நிர்வாகத்திற்காக 47 கவுண்டிகளாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.

>>           கென்யாவில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் அரசு கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

உணவு

>>           கென்யர்கள் தமிழர்களைப் போலவே 3 வேளை உணவை உட்கொள்கின்றனர். அவர்களின் உணவில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது.

>>           ‘உகாலி’ என்ற உணவு இங்கு மிகப் பிரபலம்.<

20
செய்து அசத்துவோம்செய்து அசத்துவோம்1st February 2018
எந்திரள் உடன் - ஒரு நேர்காணல்1st February 2018எந்திரள் உடன் - ஒரு நேர்காணல்

மற்ற படைப்புகள்

2018_feb_s48
பிப்ரவரி
31st January 2018 by ஆசிரியர்

கணிதப்புதிர்

Read More
2018_feb_s21
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

மனிதநேயர் ஓமந்தூரார்!

Read More
2018_feb_s5
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை :

Read More
2018_feb_s3
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெரியார் பிஞ்சு வாசகர் பரிசு பெறுவது எப்படி?

Read More
2018_feb_s9
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 11

Read More
2018_feb_s32
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

வெற்றி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p