• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குவைத் நாடு

2018_mar_s9
மார்ச்

அமைவிடமும் எல்லைகளும்:

¨           குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும்.

¨           பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன.

¨           மொத்தப் பரப்பளவு 17,818 கி.மீ2 (6,880 சதுர மைல்)

¨           ஈராக்குக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே அமைந்துள்ள சிறிய நாடாகும்.

¨           தலைநகரம் குவைத் சிட்டி.

மக்களும் மொழியும்:

¨           2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 4 மில்லியன் ஆகும்.

¨           ஆட்சி மொழி அரபு.

¨           மக்கள் குவைத்தி என அழைக்கப்படுகின்றனர்.

¨           நாட்டில் 85% மக்கள் முசுலிம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்களுள் 70% மக்கள் சன்னி பிரிவையும், 30% மக்கள் ஷியா பிரிவையும் சார்ந்தவர்கள்.

¨           84% சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவராக உள்ளனர்.

¨           மக்கள் தொகையில் உலகின் 140ஆவது நாடு.

¨           அரபு மொழியோடு ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகிறது.

பொருளாதாரம்:

¨           குவைத் நாட்டின் நாணயம் குவைத் தினார்.

¨           குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது.

¨           கல்ஃப் ரூபாய்க்கு மாற்றாக 1961இல் தினார் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

¨           குவைத் நாட்டின் பொருளாதாரம் பெட்ரோலியத்தை நம்பியே உள்ளது. பெட்ரோலியம் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும்.

¨           தனிநபர் வருமானத்தில் உலகின் நான்காவது வளமான நாடு.

¨           உலகக் கச்சா எண்ணெய் வளத்தில் 10% குவைத் நாடு கொண்டுள்ளது.

¨           1937இல் குவைத்தில் மிகுந்த எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அபரிமிதமான எண்ணெய் வளத்துடன் வளர்ச்சி அடையத் தொடங்கியது.

வரலாற்றுக் குறிப்பு:

¨           குவைத் நாட்டின் வரலாறு 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. அரேபியர்கள் அந்தக் காலக்கட்டத்தில்தான் குவைத் பகுதிக்குள் நுழைந்து குடியேறத் தொடங்கினர்.

¨           ஈராக்குக்குக் சொந்தமான எண்ணெய்க் கிணறுகளில் குவைத் எண்ணெய் திருடி விற்பதாகக் குற்றம் சாட்டி போரில் ஈடுபட்டு ஈராக், குவைத் நாட்டை 1990இல் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.

¨           1991இல் அமெரிக்கா மற்றும் அய்.நா. தலையீட்டால் ஈராக் குவைத்தை விட்டு வெளியேறியது.

¨           வெளியேறுகையில் குவைத்தில் மொத்தம் உள்ள 1080 எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்துவிட்டுச் சென்றது.

¨           1990-_91 ஆண்டுகளில் சேதமடைந்த எண்ணெய் உள் கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் $5 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது.

அரசு முறை:

¨           இங்கு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி நடைபெறுகிறது.

¨           குவைத் அய்க்கிய இராச்சியம் (பிரிட்டனிடமிருந்து) ஜூன் 19, 1961இல் விடுதலை அடைந்தது.

¨           குவைத் நாட்டில் அரசரைத் தொடர்ந்து அமீர் மற்றும் பிரதமர் அதிகாரம் மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள்.

¨           குவைத் நாட்டின் தேசிய பறவை சாகர் ஃபால்கான் (Saker Falcon)

¨           தேசிய விலங்கு ஒட்டகம்

¨           தேசிய மலர் அர்பாஜ் (Arfaj)

¨           தேசியக் கனி பேரிச்சை.

¨           தேசிய விளையாட்டு கால்பந்து.

¨           தேசிய மரம் ராயல் பால்ம்.

மேலும் அரிய தகவல்கள்:

¨           மற்ற சில அரபு நாடுகளைப் போலில்லாமல் இந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டலாம். வேலைக்குச் செல்லலாம்.

¨           இங்கு பெட்ரோல் விலையைவிட தண்ணீர் விலை அதிகம்.

¨           எண்ணெய் வளம் கண்டறியப்படுவதற்கு முன்பு உலகின் ஏழை நாடாகவே குவைத் இருந்தது.

¨           குவைத்தில் மற்ற வெளிநாட்டவர்களைவிட இந்தியர்களே அதிகம் உள்ளனர்.

¨           குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகள் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

¨           குவைத்தின் மிகப் பிரபலமான உணவு “மீன்கறி”

¨           உலகின் 5ஆவது எண்ணெய் வளமிக்க நாடு.

¨           முத்துக்குளித்தல், மீன்பிடி தொழில் இங்கு அதிகமாக நடைபெறுகிறது.

¨           வளைகுடா நாடுகளில் அதிக அளவு தொலைக்காட்சி நாடகம், நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் தயாரிப்பது குவைத்திலேயே அதிகம் நடக்கிறது.

¨           குவைத்தில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி விளையாட்டுகள் விரும்பி விளையாடப்படுகிறது.

¨           குவைத் 6 கவர்னர்கள் ஆளும் நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

¨           பெருமளவு பாலைவனங்களே சூழ்ந்த நாடு.

¨           குவைத்தில் நிரந்தரமான ஆறுகள் இல்லை.

¨           சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரையே குடிநீராக பயன்படுத்தும் நாடு.

¨           அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத் கல்வித் தரத்தில் வளர்ச்சி அடைந்த நாடு.

¨           நவீனமயமாக்கப்பட்ட தேசிய நெடுஞ் சாலைகளைக் கொண்ட நாடு.

¨           பெரும்பாலான மக்கள் பேருந்துப் போக்குவரத்தையே விரும்புகின்றனர்.

¨           குவைத்தில் 2 விமான நிலையங்கள் உள்ளன. பரபரப்பான பல துறைமுகங்களும் உள்ளன.

 

குவைத் டவர்

¨    குவைத்தில் உள்ள டவர்களில் முருகாய் டவர் மிக உயரமானது. இதன் உயரம் 372 மீட்டர்.

¨    இந்த டவரிலிருந்து பார்த்தால் குவைத் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளைப் பார்க்க முடியும்.


பைலக்கா தீவு
¨    பைலக்கா என்ற தீவு மிகவும் பிரபலமானது. ஒரு காலத்தில் மக்கள் வசித்த தீவு. இப்போது மக்கள் வசிக்கவில்லை. போரில் பாதிப்படைந்த கட்டிடங்களே எஞ்சி நிற்கின்றன.

¨    ‘தி அவென்யூ மால்’ அங்காடித் தெரு: இது மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய அங்காடித் தெருவாகும். இந்த ‘தி அவென்யூ மால்’ 800 கடைகளைக் கொண்டது.

¨    ஹவுஸ் ஆப் மிரர்: முழுவதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட வீடு.

முக்கிய சுற்றுலாத் தலம்:

¨    குவைத் சிட்டியில் அமைந்துள்ள மாபெரும் மசூதி.
¨    இது 4 இலட்சத்து 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்தது.
¨    இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 5 ஆயிரம் பேர் தொழுகை செய்ய முடியும்.

34
கிழக்கிலும் மேற்கிலும் ஏன் காந்த விசை இல்லை?கிழக்கிலும் மேற்கிலும் ஏன் காந்த விசை இல்லை?14th March 2018
சின்னச் சின்னக் கதைகள்15th March 2018

மற்ற படைப்புகள்

2018_mar_s1
மார்ச்
22nd March 2018 by ஆசிரியர்

குளோனிங் குரங்கு

Read More
2018_mar_s18
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
மார்ச்
17th March 2018 by ஆசிரியர்

துளிப்பா

Read More
மார்ச்
14th March 2018 by ஆசிரியர்

பொதுத் தேர்வு பயமா?

Read More
2018_mar_s11
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

சின்னச் சின்னக் கதைகள்

Read More
2018_mar_s20
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p