• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

ஜூன்

வானில் அனிதா செயற்கைகோள்

திருச்சியை சேர்ந்த பதினேழு வயதான  வில்லெட் ஓவியா. கைக்குள் அடங்கும் கலாம் செயற்கைக்கோளைத் தொடர்ந்து, அனிதா  என்ற பெயரில் புதிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார்

“சுற்றுப்புறச் சூழலால் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் நம்மைதாக்கும் பல நோய்களுக்கு காரணம் தெரியாமலேயே இரையாகிறோம். காற்று மாசுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த செயற்கைக்கோளை வடிவமைத்தேன். பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் பூமி வெப்பம் அடைவதால் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது… தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு செயற்கைக்கோளை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். வாயு மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் அளவு எவ்வளவு என்பதை அறிய இந்த செயற்கைக்கோள் உதவும். நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதாவின் நினைவாக இந்த செயற்கைக்கோளுக்கு அனிதா – சாட் என்று பெயரிட்டிறுகிறார்” வில்லெட் ஓவியா.
இந்த அனிதா சாட் செயற்கைக்கோள்

மே 6 ஆம் தேதி வளிமண்டலம் நோக்கி அனுப்பட்டுள்ளது.

மாதவிடாயும் மூடநம்பிக்கையும்

திருவாரூர் மாவட்டம் காளச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.பானுப்பிரியா.

இவர் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அகில இந்திய அளவில் நடந்த கல்வி மற்றும் செயல் திட்டத்தில் ‘மாதவிடாயும், மூடநம்பிக்கையும்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி வெற்றி பெற்று, டில்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தங்கப் பதக்கமும், ரூ.50,000/-_ ரொக்கமும் பெற்றுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கில் பாராட்டும் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை ஊக்குவித்த ஆசிரியர் தி.ஆனந்த் ஆங்கில பட்டதாரி.

16வயதில் எவர்ரெஸ்ட் உச்சி! சாதித்த சிவாங்கி பதக்

உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் நேபாளத்தில் அமைந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்டில் ஏறுவது அவ்வளவு எளிதல்ல. அங்கு நிலவும் கடும் குளிர், உயிருக்கு ஆபத்தான பனிப் பாறைகள், குறைந்த காற்றழுத்தம்  போன்றவற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனினும், மலையேற்றத்தில் அதிக ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் என, எந்தத் தடையும் இல்லாமல் எவரெஸ்டில் ஏறும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், அரியானா மாநிலத்தின் பிசார் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி சிவாங்கி பதக், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ‘இளம் வயதில் எவரெஸ்டை தொட்ட இந்தியப் பெண்’ என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் தொடங்கி மே 17 அன்று எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். முறையான பயிற்சியுடனும் தன்னுடன் வந்த 244 இருபால் மலையேற்ற வீரர்களுடனும் சென்று இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘உடல் ஊனத்துடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியரான அருணிமா சின்ஹாவின் சாதனையால், நான் ஈர்க்கப்பட்டேன். அவரின் அந்த முயற்சி தான் என்னையும் சாதிக்கத் தூண்டியது’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதற்கு முறையான பயிற்சியும் இடைவிடாத முயற்சியும்தான் காரணம் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா?<

ஊஞ்சல் தாத்தா

நூலின் பெயர்: ஊஞ்சல் தாத்தா

ஆசிரியர்: அ.ர.ஹபீப் இப்றாஹீம்

விலை: ரூ.30 பக்கங்கள்: 32

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்),

எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை_600018

தொலைபேசி : 044_-24332924

‘ஊஞ்சல் தாத்தா’ கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் ஊஞ்சலில் ஏறி மகிழ்வதும், அவர்களுக்கு தாத்தா நாட்டுப்புறக் கதைகளை சொல்லி ஊஞ்சலாட்டுவதும், வயதான காலத்திலும் மரங்களில் ஏறி பழங்களை பறித்து குழந்தைகளுக்கு அவர் வழங்குவதும் எனக்கு பிடித்திருந்தது. ஒருவர் இறந்துவிட்டால், அவரின் இடத்தை வேறொருவர் அன்பால் நிரப்புவார் எனும் நம்பிக்கையை இக்கதையின் மூலம் பெறுகிறேன்.

– பி. பாலகுமார், 8-ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெங்களத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்.

குழந்தைகளிடம் ஒருவரின் இறப்பைச் சொல்லும்போது சொர்க்கம் போயிருக்கிறார் போன்ற பொருளுடன் சொல்வதை இனியாவது தவிர்க்க வேண்டாமா? மற்றபடி இப் புத்தகம் நிறைய படங்களுடன் சிறார் ரசிக்கும் வகையில் உள்ளது.

– பொறுப்பாசிரியர்

26
படக்கதை13th June 2018
பெரியார் பிஞ்சு பழகுமுகாம் - 201813th June 2018பெரியார் பிஞ்சு பழகுமுகாம் - 2018

மற்ற படைப்புகள்

y27.jpg - 809.19 Kb
ஜூன்பழகுமுகாம்
13th June 2018 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு பழகுமுகாம் – 2018

Read More
ஜூன்
13th June 2018 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை

Read More
ஜூன்
14th June 2018 by ஆசிரியர்

வேண்டும் நமக்கு பகுத்தறிவு

Read More
ஜூன்
13th June 2018 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

Read More
ஜூன்
14th June 2018 by ஆசிரியர்

சிங்கப்பூர்

Read More
ஜூன்
13th June 2018 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p