• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மலேசிய

ஜூலை

அமைவிடமும் எல்லைகளும்:

¨           தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியாட்சி நாடு.

¨           தீபகற்ப நாடான மலேசியா, மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

¨           மேற்கு மலேசியாவையும் கிழக்கு மலேசியாவையும் தென் சீனக்கடல் பிரிக்கின்றது.

¨           மொத்த பரப்பளவு 329,847 சதுர கிமீ (127,350 சதுர மைல்கள்)

¨           மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன.

¨           மலேசியாவின் நில எல்லைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

¨           மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர்.

¨           நடுவண் அரசின் நிர்வாக மய்யம் புத்ராஜெயாவில் உள்ளது.

வரலாறு:

¨           வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாக கிடைத்திருக்கின்றன.

¨           2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் ‘புகித் ஜாவா’வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

¨           கிழக்கு மலேசியாவின் ‘சரவாக்’கில் அமைந்துள்ள ‘நியா’ குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன.

¨           கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்திலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த வணிகர்கள் குடியேற்றங்களையும் நகரங்களையும், வணிகத் துறைமுகங்களையும் உருவாக்கினர்.

¨           11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் இராசேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தை  போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அக் காலக் கட்டத்தில் சோழர்கள் மலேசியாவில் நிலையான ஆதிக்கம் கொண்டிருந்தனர்.

¨           தமிழர்கள் மட்டுமல்லாது இசுலாமியர்களும், போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், பிரித்தானிய பேரரசுகளும் வெவ்வேறு காலக்கட்டங்களில் மலேசியாவை ஆட்சி செய்துள்ளனர்.

¨           இரண்டாம் உலகப்போரின்போது 1943-_1945 வரை மலேசியாவை ஜப்பான் ஆட்சி செய்தது.

¨           1957 ஆகஸ்டு 31 அன்று மலேசியா பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை அடைந்தது.

¨           1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஆட்சிப் பிரிவுகள்:

¨ மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

¨           ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் ‘முகிம்’களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

¨           எல்லா மாநிலங்களுக்கும் சமமான நிதியும், நீதியும் மலேசிய பாராளுமன்றம் வழங்குகிறது.

புவியியல்:

¨           மலேசியா உலகின் நிலப்பரப்பில் 67ஆவது பெரிய நாடாக விளங்குகிறது.

¨           சிங்கப்பூருடன் ஒரு குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

¨           கடல்சார் எல்லையை வியட்நாம் மற்றும் பிலிப்பைன்சுடன் பகிர்கிறது.

¨           ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள ‘டான்ஜீங் பியாய்’ ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது.

¨           நாட்டின் உயரமான மலைச்சிகரம் ‘கின்டாலு’ மலைச்சிகரம்.

பொருளாதாரம்:

¨           சுமத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள மலாக்கா நீரிணை உலகின் 40% சரக்குக் கப்பல்கள் செல்லும் வழியாக இருந்து மலேசிய வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.

¨           மலேசியா தொழில் வளர்ச்சியடைந்த சந்தை பொருளாதார நாடாக விளங்குகிறது.

¨           உலகளவில் உள்நாட்டு உற்பத்தியில் 29ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

¨           நாட்டில் ‘மலாயா ரிங்கிட்’ நாணயம் புழக்கத்திலுள்ளது.

மக்கள் தொகை:

¨           மலேசியா மூன்று கோடி மக்களுக்கு மேல் வசிக்கும் நாடு.

¨           மக்கள் தொகையில் உலகின் 43ஆம்  நாடு.

¨           மலாய் இனக்குழுவினர் 50.5%. சீனர் 23.7% தமிழர்கள் 11%  மேலும் பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.

¨           மலேசியா சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர்.

¨           மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

சமயம்:

¨           மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் இசுலாம். ஆனாலும் மற்ற சமயங்களும் பின்பற்ற அனுமதியுண்டு.

¨           தோராயமாக 61.3% இசுலாம், 19.8% பவுத்தம், 9.2% கிறித்துவம், 6.3% இந்து, 1.3% தாவோ, கன்பூசியம் மற்றும் சீன சமயத்தையும், 0.7% எந்த சமயத்தையும் சாராதவர்களாக உள்ளனர்.

மொழி:

¨           மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி மலாய். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக உள்ளது.

¨           அடுத்ததாக தமிழும் சீனமும் அதிகம் பேரால் பேசப்படுகிறது.

¨           ஆங்கில மொழி கல்விக் கூடங்களிலும் வணிக மய்யங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

¨           இதோடு அல்லாமல் மேங்கிலிசு என்னும் மொழியும் வழக்கத்திலுள்ளது. இது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சையான ஆங்கிலம் ஆகும்.

¨           மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.

பண்பாடு:

¨           வரலாற்றுக் காலம் முதலே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டு தாக்கங்கள் இங்கு உண்டு.

¨           1971இல் மலேசியா அரசு, தேசியப் பண்பாட்டுக் கொள்கையை அறிவித்து, இசுலாம் மதத்தையும், மலாய் மொழியையும் மற்றவற்றைவிட கூடுதலாக பரப்பி வருகிறது.

விளையாட்டு:

¨           மலேசியாவில் பரவலாக விளையாடப் படுபவையாகக் கால்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிஸ், ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம் ஆகியன உள்ளன.

¨           தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் ‘சிலாட்’ மற்றும் ‘டோமோய்’ என்னும் இரு வகைகள் பயிற்றுவிக்கப்படுகிறது-.

ஊடகம்:

¨           மலேசியாவின் முதன்மை ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

¨           இருப்பினும் எதிர்கட்சிகளும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வைத்துள்ளனர்.

¨           மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.

¨           அரசுத் தலையீடு இருப்பதால் ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாகவே உள்ளது.

உள்கட்டமைப்பு:

¨           மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.

¨           04.7 மில்லியன் தொலைபேசி இணைப்புகளையும், 30 மில்லியன் செல்பேசி இணைப்புகளையும் கொண்டு, தொலைத்தொடர்பு பிணையத்தில் ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.

போக்குவரத்து:

¨           மலேசியாவில் ஏழு பன்னாட்டு துறைமுகங்கள் உள்ளன.

¨           முக்கிய துறைமுகமாக ‘கிளாங்’ துறைமுகம் உள்ளது.

¨           மலேசியாவில் உள்ள 98,721 கி.மீ. தொலைவு சாலைகளில், 1,821 கி.மீ. விரைவுச் சாலைகளாகும்.

¨           நாட்டின் மிக நீண்ட சாலையாக விளங்கும் வடக்கு _ தெற்கு விரைவுச் சாலை, தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 கி.மீ  தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

¨           118 விமான நிலையங்கள்.

¨           1,849 கி.மீ. தொலைவிற்கு தொடர்வண்டிச் சேவைகள்

¨           200 தொழிற்பேட்டைகளும், டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-_டெக் பார்க் போன்ற கட்டமைப்புகள் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.

¨           95% மக்களுக்குத் தூய குடிநீர் வசதி.

வளங்கள்:

¨           நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 ஜிகா வாட்ஸ் மேல் உள்ளது.

¨           இன்னும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும், 19 ஆண்டுக்கான எண்ணெய் இருப்பும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

¨           16% நீர் மின் நிலையங்கள் மூலமும், 84% அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் சில தகவல்கள்:

¨           18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோடபாருவில் கட்டப்பட்ட பள்ளிவாசலே மலேசியாவில் மிகவும் பழையதாகும்.

¨           அட்டை நூடுல்சுடன் மீன் கேக், கிளிஞ்சல்கள், முளைவிட்ட பீன்ஸ் ஆகியவற்றை வறுத்துச் சமைக்கப்படும் “சார் குவேடியோவ்” மலேசியாவில் மிகவும் பிரபலமான உணவு.<

27
இவ்வுலகம் பஞ்சபூதத்தால் ஆனதா ?6th July 2018
தென்மேற்குப் பருவக்காற்றின் பயணம்6th July 2018

மற்ற படைப்புகள்

ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

இவ்வுலகம் பஞ்சபூதத்தால் ஆனதா ?

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

பெரியாரின் பார்வை

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

மாற்றம்

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

பாகிஸ்தானை கலக்கும் பதினொரு வயது பிஞ்சு

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p