• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சுவிட்சர்லாந்து

ஆகஸ்ட்

 

 

அமைவிடமும் எல்லைகளும்:

¨                     நிலப்பகுதிகளாலும் ‘ஆல்ப்ஸ்’ மலையாலும் சூழப்பட்ட மத்திய அய்ரோப்பிய நாடு.

¨                     எல்லைகள்: வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன்

¨                     மொத்த பரப்பளவு 41,285 ச.கி.மீ.

¨                     பரப்பளவில் உலகின் 136ஆம் நாடு.

சுவையான தகவல்கள்:

¨                     உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

¨                     ஜெனிவா (நிமீஸீமீஸ்ணீ) மற்றும் சூரிச் (ஞீuக்ஷீவீநீலீ)  நகரங்கள் நாட்டின் மிகப் பிரபலமான நகரங்களாக உள்ளன.

¨                     சுவிட்சர்லாந்து நடுநிலை நாடு. 1815இல் இருந்து இது சர்வதேச அளவில் உலகப் போர்கள் உள்ளிட்ட எந்தப் போரிலும் ஈடுபடவில்லை.

¨                     உலக செஞ்சிலுவைச் சங்கம், உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களைக் கொண்ட நாடு.

¨                     செர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமஞ்சு (ஸிஷீனீணீஸீsலீ) ஆகிய நான்கு தேசிய மொழிகளைக் கொண்டது.

¨                     சுவிஸ் தேசிய தினம்: ஆகஸ்ட் 1

வரலாறு:

¨                     150,000 ஆண்டுகளுக்கும் முன்பே சுவிட்சர்லாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்கள் இருக்கின்றன.

¨                     கி.மு.15 – ரோமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ்.

¨                     1798 – பிரெஞ்சுப் புரட்சியின் படைகள் சுவிட்சர்லாந்தைக் கைப்பற்றி, ஆட்சி அமைத்தனர்.

¨                     1990 – பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக 1998 மற்றும் 2007இல் அதிபர்களாக பெண்களே இருந்தனர்.

¨                     1963 – அய்ரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பு.

¨                     2002 – அய்.நா.சபையின் உறுப்பு நாடு.

அரசியல்:

¨                     முன்பு இது ஒரு கூட்டமைப்பு. ஆனால், 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. தற்போது மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட ‘கூட்டாட்சிக் குடியரசு’ ஆகும்.

¨                     அரசாங்கத்தில் 3 பிரதான ஆட்சி ஆணையங்கள் உள்ளன. இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம், ஆட்சிக்குழு, கூட்டமைப்பு நீதிமன்றம்.

¨                     அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள்.

¨                     சமுதாய ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி, சுவிஸ் மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக மக்கள் கட்சி போன்ற 4 முக்கியக் கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் உள்ளன.

இராணுவம்:

¨                     தரைப்படை மற்றும் விமானப் படைகளை கொண்ட நாடு. நாட்டில் கட்டாய இராணுவச் சேர்க்கை உண்டு.

¨                     சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருப்பதால் இங்கு கப்பல்படை இல்லை.

புவியியல்:

¨                     நாட்டின் 60% பகுதியைக் கொண்டுள்ளதும், வடபகுதி முதல் தென்பகுதி வரை பரவியுள்ளதுமான ஆல்ப்ஸ் மலையின் உயர்ந்த சிகரம் டுஃபோர்ஸ்பைட்ஸ். இதன் உயரம் 4,634 மீட்டர் (15,203 அடி)

¨                     சுவிட்சர்லாந்து பின்வரும் மூன்று அடிப்படை பரப்பியல் பகுதிகளாக அமைந்துள்ளன. தெற்கில் சுவீஸ் ஆல்ப்ஸ், சுவிஸ் பீடபூமி, வடக்கில் ஜீரா மலைகள்.

¨                     நாட்டில் அதிகமான பள்ளத்தாக்குகளும் எண்ணற்ற அருவிகளும் உள்ளன.

¨                     ஜெனிவா ஏரி, ஜூரிச் ஏரி, நியூசாடெல் ஏரி மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரி போன்ற பெரிய ஏரிகள் உள்ளன.

¨                     அதிகப்படியான மேய்ச்சல் புல்வெளிகள் உள்ள நாடு.

¨                     விலைமதிப்புள்ள குங்குமப்பூ, பலவகை ஒயின் திராட்சைகளும் பயிரிடப்படுகிறது.

பொருளாதாரம்:

¨                     உலகின் நிலையான பொருளாதார நாடு, எளிதாக வணிகம் செய்ய ஏற்ற நாடு

¨                     அயர்லாந்துக்குப் பிறகு அய்ரோப்பாவின் 2ஆவது உயர்ந்த பொருளாதார மதிப்பீட்டைக் கொண்ட நாடு.

¨                     சுவிட்சர்லாந்து பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.

¨                     ரசாயனம், உடல்நலம், அளவிடல் கருவிகள், இசைக்கருவிகள், ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் காப்பீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவை சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற் துறைகளாகும்.

¨                     தரமான கைக் கடிகாரத் தயாரிப்புக்கு புகழ்பெற்ற நாடு.

கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம்:

¨                     பொது மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.

¨                     சுவிட்சர்லாந்தின் முதல் பல்கலைக்கழகம் 1460இல் பாசெல் நகரில் தொடங்கப்பட்டது.

¨                     ஜூரிச் பல்கலைக்கழகம் நாட்டின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். மேலும் சுவிட்சர்லாந்தில் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

¨                     சுவிஸ் விஞ்ஞானிகள் பலர் நோபல் பரிசுகள் பெற்றுள்ளனர். ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் போன்று  நோபல் பரிசு பெற்ற 113 பேர் சுவிட்சர்லாந்துக்குத் தொடர்புடையவர்கள்.

¨                     அமைதிக்கான நோபல் பரிசு 9 முறை சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

¨                     துகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கான உலகின் மிகப்பெரிய ஆய்வகம் ஜெனிவாவில் உள்ளது.

உள்கட்டமைப்பு:

¨                     நீர் மின்சாரம் – 56%; அணுசக்தி மின்சாரம் – 39%

¨                     சுவிட்சர்லாந்தில் 1,638 கி.மீ. அதிநவீன சாலைகள் உள்ளன.

¨                     நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக ஜூரிச் விமான நிலையம் உள்ளது.

¨                     சுவிட்சர்லாந்தில் 5,063 கி.மீ நீளம் கொண்ட ரயில்வே போக்குவரத்து உள்ளது.

சுற்றுச்சூழல்:

¨                     சுவிட்சர்லாந்து பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கூளங்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நாடாக உள்ளது.

மக்கள்:

¨                     மக்கள் தொகை: 8 மில்லியன்

¨                     அதில் 22% குடியேறிய வெளிநாட்டினர், 17.3% இத்தாலியர்கள், 13.2% ஜெர்மானியர்கள், 11.5% செர்பியர்கள்.

¨                     சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் உள்ளது.

உணவு:

¨                     ஃபாண்ட்யு, ரேக்லெட் மற்றும் ரோஸ்ட்டி போன்ற உணவுகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன.

¨                     பால் பொருட்கள் மற்றும் க்ரையர், எம்மண்டல்,  பாலாடைக் கட்டிகள் போன்றவைகள் முக்கிய உணவுப் பொருட்களாக உள்ளன.

¨                     18ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் தயாரிப்பு நடைபெறுகிறது.

¨                     வாலெய்ஸ், வாயூத், ஜெனிவா மற்றும் டிசினோ ஆகிய பகுதிகளில் சுவிஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது.

விளையாட்டு:

¨                     பனிச்சறுக்கு, மலையேறுதல், கால்பந்து, அய்ஸ் ஹாக்கி, கோல்ஃப், டென்னிஸ் விளையாட்டுகள் மிகப் பிரபலமானவை.

¨                     ‘சுவிங் ஃகென்’ எனப்படும் சுவிஸ் மல்யுத்தம் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய விளையாட்டாகும்.

¨                     டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற ரோஜர் பெடரர், மார்டினா ஹிங்கிஸ் போன்றோர்கள் சுவிட்சர்லாந்தைச் சார்ந்தவர்கள்.

ஊடகங்கள்:

¨                     ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன.

¨                     ‘சுவிஸ் செய்தி முகமை’ (ஷிழிகி) என்ற தொலைக்காட்சி நாட்டின் முக்கிய செய்திகளை 24 மணிநேரமும் ஒலி-_ஒளி பரப்பிக்கொண்டே உள்ளது.

பண்பாடு:

¨                     நாட்டில் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய, ரோமன்ஷ் பண்பாடுகள் வழக்கத்திலுள்ளன.

¨                     கேளிக்கை நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறுகின்றன.

¨                     திரைப்படங்கள், நாட்டுப்புறக் கலைகள் உயிர்ப்புடன் உள்ளன.

¨                     இசை, நடனம், கவிதை, மரச் சிற்பக்கலை மற்றும் சித்திர தையல் கலை பெரிதும் வளர்ச்சி நிலையில் உள்ளது.

மதம்:

¨                     சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ தேசிய மதம் எதையும் கொண்டிருக்கவில்லை.

¨                     பெரும்பாலான மக்கள் ‘கத்தோலிக்க திருச்சபை தேவாலயங்களை’ ஏற்றுக் கொண்டுள்ளனர்.

¨                     கிறித்துவம் பெரும்பான்மைமிக்க மதமாக உள்ளது. இஸ்லாமிய மக்களும் 4.3% உள்ளனர்.

33
பூமய்யாவின் வாழைக்காய் வறுவல்1st August 2018
எண்ணித் துணிக கருமம் !1st August 2018

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்
1st August 2018 by ஆசிரியர்

காணாமல் போன சூரியன்

Read More
ஆகஸ்ட்
1st August 2018 by ஆசிரியர்

AUGUEST !5

Read More
y1.jpg - 344.24 Kb
ஆகஸ்ட்
1st August 2018 by ஆசிரியர்

தொடர் வண்டி !

Read More
ஆகஸ்ட்
1st August 2018 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை

Read More
ஆகஸ்ட்
1st August 2018 by ஆசிரியர்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

Read More
ஆகஸ்ட்
1st August 2018 by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p