• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தொடரும் ஆராய்ச்சி

2018_oct_v30
அக்டோபர் 2018

வளர்ச்சியைப் பாதிக்குமா செல்பேசிகள்?

சிறுமிகளின் ஆய்வு சொல்லும் முடிவு


* பள்ளிச் சிறுமிகள் 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த சிறிய ஆராய்ச்சி ஒன்று, உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.

* டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது.

* அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

* அய்ந்து மாணவிகளும் ஸெஸ் எனப்படும் புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில் விதைத்தனர்.

* தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர்.

* மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர்.

* இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.

* இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி ஆகியவற்றை அளித்தனர்.

* 12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர்.

* சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.

* வைஃபை கருவி உள்ள அறையில் வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள் வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன.

* இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

* இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

* ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், “இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் என்றார்.

* இதுபற்றி மாணவிகள் கூறும்போது, எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது என்றனர்

சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்சினை இருந்தது. இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

* வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள். தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்” என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.

* சிறிய புல்லுக்கு விதைத்த விதை மிகப்பெரிய மரமாக முளைத்துள்ளது!

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த ஆராய்ச்சி குறித்த மேல் ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெற்றுவருகின்றன. இது உண்மை தானா? வைஃபை வளர்ச்சியைப் பாதிக்குமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. என்றாலும், மாணவிகளே ஆராய்ச்சியை மேற்கொண்டது வரவேற்கத் தக்க ஒன்று தானே!

24
வரைந்து பழகுவோம்வரைந்து பழகுவோம்6th October 2018
மந்திரத்தால் மணல் சர்க்கரையாகுமா?15th October 2018மந்திரத்தால் மணல் சர்க்கரையாகுமா?

மற்ற படைப்புகள்

2018_oct_v32
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

மந்திரத்தால் மணல் சர்க்கரையாகுமா?

Read More
2018_oct_v5
அக்டோபர் 2018
3rd October 2018 by ஆசிரியர்

அறிந்துகொள்வோம்…

Read More
2018_oct_v44
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

இளையோர் இனியும் தூங்கலாமா?

Read More
2018_oct_v39
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2018_oct_v9
அக்டோபர் 2018
5th October 2018 by ஆசிரியர்

பெரியாரின் தயவு தாட்சணியமின்மை

Read More
2018_oct_v43
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

மலேசியாவில் பெரியார் பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p