• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

”ரோலிங் சர்ர்ர்ர்ர்”

2018_nov_v44
கதை கேளு கதை கேளுநவம்பர் 2018

கதை கேளு கதை கேளு

விழியன்

ரோலிங் சர்ர்ர்ர்ர் என்ற குரல் வந்ததும் காட்டுவழிப் பாதையின் மீது எல்லோர் கண்களும் திரும்பின. படத்தின் இயக்குநர் கரப்பான்பூச்சி பூஞ்சைய்யா, டைரக்டர் என்று எழுதி இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தது. கேமராவை குப்லி கரடி கையாண்டது. படப்பிடிப்பு தளத்தில் நிறைய மான்களும், முள்ளம்பன்றிகளும் உதவி செய்துகொண்டிருந்தன. இன்றைய காட்சி மிகவும் உருக்கமான காட்சி. பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாயும் மகனும் காட்டிற்குள் சந்திக்கின்றார்கள். தாயாக நடிப்பது கஞ்சிரா என்ற குரங்கு. உண்மையில் கஞ்சிரா ஒரு ஆண் தான் ஆனால் பெண் வேடமிட்டு இன்று தாயாக நடிக்கின்றது. அச்சோ இன்னும் கதையின் நாயகனைப் பற்றி சொல்லவில்லையே. நாயகன் லிபு என்ற குட்டிப்புலி. லிபு தான் மகனாக நடிக்கின்றது.

லிபுவின் குட்டி வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்வோம். லிபுவிற்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்று ஆசை. தன் காட்டின் அருகே ஒரு படப்பிடிப்பு நடந்தபோது அதனைப் பார்த்து நடிக்க ஆசை வந்தது. சிறுவயதில் நடந்த அந்த படப்பிடிப்பிலும் கஞ்சிரா தான் நடித்து இருந்தது. அதற்கு கொடுத்த மரியாதையையும் பக்கத்து காடுகளில் இருந்து வந்து மற்ற விலங்குகள் கையெழுத்து வாங்கியதையும்  பார்த்து இன்னும் ஆசை அதிகரித்தது. எப்படியேனும் அந்த பிரகாச விளக்கின் முன்னர் நின்றுவிட வேண்டும். காட்சியை நடித்து முடித்தவுடன் செட்டில் இருப்பவர்கள் எல்லோரும் கைத்தட்டிவிட வேண்டும் என நினைத்தது. ஆனால் ஒருமுறை தன் தாயுடன் திரையரங்கிற்குச் சென்று பாதியிலேயே ஓடிவந்து விட்டது லிபு. யானை என்றால் லிபுவிற்கு பயம். படத்தில் யானை ஒன்று திரையில் தோன்றியதுமே அம்மாவின் முந்தானையைத் தேடியது. ஒரு காட்சியில் யானை திரையில் ஓடிவருவதைப் பார்த்து திரையரங்கைவிட்டே ஓடோடி வீட்டிற்கு வந்துவிட்டது. அதன் பின்னர் திரையரங்கம் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. ஆனால் திரைப்பட சுவரொட்டிகளைப் பார்க்கும், திரை விமர்சனங்களைப் படிக்கும்.

ரோலிங் சர்ர்ர்ர் சொல்லும் இணை இயக்குநரான மானின் கை காலை பிடித்து இந்த கதாபாத்திரத்தை வாங்கி இருக்கின்றது. தன் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. காட்சிக்காக அது ஆசையாசையாக வளர்த்த மீசையை வெட்டிக் கொண்டது. ஒப்பனைக் கலைஞரிடம் எப்படியாச்சும் வண்ணம் தீட்டி மறைக்கமுடியாதா என மன்றாடியது. ஆனால் ஒரே பிடியாக வெட்டியாக வேண்டும் என மீசையை வெட்டியது.

என்னப்பா அந்த லிபுகிட்ட காட்சியை சொல்லியாச்சா என விசிறிக்கொண்டே கேட்டது பூஞ்சைய்யா. சொல்லியாச்சு சார், அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்து லிபு ஓடி வரணும், வந்து தன் தாயை பார்த்ததும் அம்மா… என உருகி அழைத்து கட்டிப்பிடிக்கவேண்டும். தெளிவா சொல்லியாச்சு சார்.

ரோலிங் சர்ர்ர்ர்ர் என்ற குரல் வந்ததும் காட்டுவழிப் பாதையின் மீது எல்லோர் கண்களும் திரும்பின. தூரத்தில் லிபு ஓடி வந்தது.

கட் என்றது பூஞ்சைய்யா.

பல ஆண்டுகள் கழிச்சு அம்மாவை பார்க்க வர்ற ஒரு நடுக்கம் வேண்டாமா?

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

கட்

அம்மா..ன்னு காடே அதிர்கின்ற மாதிரி கத்தணும் லிபு

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

கட்

கண்ணைக் கீழ வெக்காத லிபு

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

கட்

தாடை அதிரணும்..

கஞ்சிரா சார் மேக்கப் கலைஞ்சிடுச்சு

இன்னும் வேகமா ஓடி வா லிபு

இன்னும் சத்தம்..

சுமார் அய்ம்பது ரீ-டேக் எடுத்து-விட்டார்கள். லிபு கடைசியா ஒரு டேக் எடுத்திடலாம். எல்லோரும் சோர்ந்து-விட்டார்கள். கஞ்சிரா சார் கூட கடுப்பா இருக்கார். இப்போது சரியாக நடிக்கின்றேன் என சோர்வாக அந்த அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றது.

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

காத்திருந்தார்கள். காத்திருந்தார்கள் காத்திருந்தார்கள். லிபு வருவது போலவே தெரியவில்லை. ஆமாம் லிபு படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பிவிட்டது. ஆப்பிள் பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு என விதவிதமாக கிடைக்கும் என நினைத்தது. ஆனால் தண்ணீர்கூட கிடைக்கவில்லை. தண்ணீர் தாகம், பசி. நேராக வீட்டிற்கு சென்றது. லிபுவின் அம்மா சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்திருந்தது.

என்ன லிபு எங்க போயிட்ட? எங்க சாப்பிட்ட? இவ்வளவு நேரம் காத்திருந்து இப்ப தான் சாப்பாட்டை எல்லாம் எறும்புக்கு கொடுத்திட்டு கழுவி வெச்சேன். என்ன எங்காச்சும் பலமான சாப்பாடா? அடேய் என்ன மீசை எல்லாம் வெட்டிருக்க என்றது.

அம்மா… என்று உருக்கமாக கத்தியது.

ஆனால் கட் என யாருமே சொல்லவில்லை. உடனே சீக்கிரம் தன் மகனுக்கு உப்புமா சமைத்து கொடுத்தது. நடந்தை சொல்லச் சொல்ல தாயார் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அம்மா, இதை என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லக்கூடாது என வாக்குறுதி வாங்கிக் கொண்டது. ஆனால் ஏதேனும் குறும்புத்தனம் செய்தால் உடனே தாயார் ரோலிங் சர்ர்ர்ர்ர் எனச் சொல்லும்.

16
குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்29th October 2018
கராத்தே வெற்றியாளர்கள்29th October 2018கராத்தே வெற்றியாளர்கள்

மற்ற படைப்புகள்

2015_jul_pinju6
கதை கேளு கதை கேளுஜூலை
13th July 2015 by -மு.கலைவாணன்

கோபுரத்துப் புறாக்கள்

Read More
2019_mar_v33
கதை கேளு கதை கேளுமார்ச் 2019
1st March 2019 by விழியன்

சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல்

Read More
2018_nov_v8
நவம்பர் 2018
29th October 2018 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More
2020_oct_v10
அக்டோபர் 2020கதை கேளு கதை கேளு
14th October 2020 by விழியன்

வானவில்லின் வண்ண மகள்

Read More
2022_april_24
ஏப்ரல் 2022கதை கேளு கதை கேளு
4th April 2022 by -விழியன்

தலைகீழ் உலகம்

Read More
14
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by விழியன்

கதை கேளு கதை கேளு: சிக்கிய வால்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p