• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்

2019_jan_v52
ஜனவரி 2019

விழா நாயகர்கள்

சரவணா ராஜேந்திரன்

வள்ளுவர், கவுதம புத்தர், வர்த்தமான மகாவீரர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் இவர்களின் வரலாற்றை நாம் பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். இவர்களின் சமூகப் பங்களிப்பின் காரணமாக இவர்களது பிறந்த நாளை விழாவாக அரசு கொண்டாடுகிறது.

இவர்களின் பிறந்த நாள் விழாக்களின் போது அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, அமைதிக்கு, ஒற்றுமைக்கு இன்னும் மானுடம், பொதுநலம் சார்ந்த பணிக்காக அவர்களின் பங்களிப்பை அரசும் மக்களோடு சேர்ந்து நினைவு கூர்கிறது, இதில் புத்தர், மகாவீரர் போன்றோரின் கொள்கைகள் பெருவாரியான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை மதமாக மாறிவிட்டன.  இருப்பினும் புத்தரும் மகாவீரரும் மதம் என்ற எல்லையைக் கடந்து அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவர்களாக இன்றும் நினைவில் வைக்கப்படுகிறார்கள்.

கவுதம புத்தர்

பிறப்பு ஆண்டு: கி.மு.563, லும்பினி (நேபாளம்). மறைந்த  ஆண்டு: கி.மு.483, குஷிநகர் உ.பி. (இந்தியா).

இதேபோல் தான் மத்திய ஆசியாவின் அரேபியப் பகுதியில் பிறந்த ஏசுவும், நபிகள் நாயகமும், புத்தர், மகாவீரரைப் போன்றே அம்மக்களின் நன்மைக்காக பேசியவர்கள். அவர்களின் கோட்பாட்டை பிற்காலத்தில் வந்தவர்கள் மதமாக மாற்றினார்கள்.

இயேசு மற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்கள் என்று கருதப்படுபவற்றை அம் மதத்தைச் சார்ந்தவர்கள் பிரபலமாகக் கொண்டாடுகின்றனர். அந்நாளில் இருந்த சமூகச் சூழலில் அவர்களின் கருத்துகள் புதுமையானதாக இருந்தன. மதம் என்று மாறிய பின் அனைத்திலும் மூடநம்பிக்கைகள் நிறைந்துவிட்டன.

ஒரு விழா என்பதன் மய்யக் கருத்து என்ன? சமூகத்தில் விழிப்புணர்வு கொண்டுவருவது, ஆடம்பரமில்லாதது, மக்களுக்கு விழா நாயகர்களின் தொண்டறத்தையும் சமூக நற்பணிகளையும் நினைவு படுத்துவது போன்றவற்றுடன் சமூக விழாக்கள் என்பவை நமது பண்பாட்டை, நமது உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவதாக அமையவேண்டும். தலைவர்களின் பிறந்த நாள்களை நன்றியுணர்வுடன் நாம் கொண்டாடுவதும் வழிபாடாக மாறிவிடாமல், சமூக சீர்திருத்த நோக்கத்திற்காகவே இருக்க வேண்டும்.

மகாவீரர்

கி.மு.599 வைசாலி, பிகார்.

கி.மு.528 பவபூரி, பிகார்.

உலகில் பல்வேறு விழாக்கள் சமூக அமைதிக்கும்,  இயற்கைக்கு நலம் விளைவிக்கும் வகையிலும் கொண்டாடப்படும் திருவிழாக்களாக உள்ளன. முக்கியமாக நமது திராவிட நாகரிகம் பரவிய பகுதி என்று கூறப்படும், இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்கில் உள்ள ஆஸ்திரேலியா முதல் மேற்கே உள்ள மடகாஸ்கர் மற்றும் மொரீசியஸ் தீவுகள் வரை அறுவடைத் திருவிழா பெரும் உவகையுடன் அந்தந்த மக்களால் கொண்டாடப்படுகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் விழாக்கள், அனைத்து மக்களுமே ஒன்றாக இணைந்து கொண்டாடும் பெருவிழாக்களாக இன்றளவும் நடைபெறுகின்றன.

அண்ணல் அம்பேத்கர்

பிறப்பு: 14 ஏப்ரல் 1891.

மறைவு: 6 டிசம்பர் 1956.

நாமும், அனைவரும் இணைந்து மகிழ்வோடு ஒரு விழாவைக் கொண்டாடுகிறோம்! அதுதான் பொங்கல்! பொங்கல் நமக்கான விழா,  ஆண்டுதோறும் வயல்வெளியில் உழைத்து உழைத்துக் கிடைத்த பலனை அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதே உண்மையான விழாவாகும். இதற்கு பொங்கல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக ஊரே சேர்ந்து கொண்டாடும் பொங்கல் போன்ற விழாக்கள் தான் நமக்கான விழாக்கள் ஆகும். இதுதான் சமூகத்திடையே ஒற்றுமையையும் மகிழ்வையும் தருவதோடு, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தாமல், கால்நடைகளும்   நம் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ளும் திருவிழாவாகும்.

தந்தை பெரியார்

பிறப்பு: 17 செப்டம்பர் 1879.

மறைவு: 24 டிசம்பர் 1973.

சிற்றூர்களில் பொங்கல் அன்று நாம் வீட்டு வாசலில் கட்டும் நெற்கதிர்களை சிட்டுக்குருவிகள் கொத்தித் தின்பதைக் கண்டிருப்பீர்கள். இப்படி அனைத்து உயிரினங்களும் பயனுறக் கொண்டாடும் விழாவைப் போன்றே நம் விழாக்கள் இருக்கவேண்டும்.

அப்படி இல்லாமல் தேவையற்ற செலவுகளுடன், சுற்றுப்புறச்சூழல் சீர்குலைவு, உடல் பாதிப்பு, சமூக ஒற்றுமையைச் சிதைத்தல், பிறரை இழிவுபடுத்தப் பயன்படும் தீபாவளி போன்ற பண்டிகைகளை நாம் புறக்கணிக்க வேண்டும். மதப் பார்வையின்றி அனைவரும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடும் பொங்கல் போன்ற நமது விழாக்களை உற்சாகத்துடன் நாம் கொண்டாடவேண்டும்.

(நிறைவு)

30
களஞ்சியம்களஞ்சியம்3rd January 2019
சின்னக்கைச் சித்திரம்3rd January 2019சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2019_jan_v36
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வெறுபாடு!

Read More
2019_jan_v8
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

அழகிய பென்சில் கிரீடம்

Read More
2019_jan_v5
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர் பொன்னூசல்

Read More
2019_jan_v56
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_jan_v40
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

’அவ்னி’யைக் கொன்றது சரியா?

Read More
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

அல்லும் பகலும் உழைத்திடடா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p