• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!!

2019_mar_IMG-20190125-WA0036
மார்ச் 2019

சா.மூ.அபிநயா

ஓர் ஊரில் ஒரு சிட்டுக்குருவி இருந்தது.  கண்டங்கள் பல தாண்டிப் பறக்க வேண்டும் என்று அதற்கு ஆசை. புது இடங்களுக்குச் செல்வது, புதுப் பறவைகளை சந்திப்பது என்றால் அதற்குக் கொள்ளை மகிழ்ச்சி. அப்படிப்பட்ட சிட்டுக் குருவிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைத்தால்…? அந்தச் சிட்டுக்குருவி யார் தெரியுமா? நான்தான். நானும் என் நண்பர்களுடன் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திற்கு சென்றேன். அட ஆமாங்க! பாம்பனோ பீச் உயர்நிலை பள்ளி (Pompano Beach High School) நடத்திய 4ஆவது பன்னாட்டு உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக பங்கேற்க, நான் உள்பட எட்டு மாணவர்கள் சென்றிருந்தோம்.

பயணம் என்றாலே ஜாலி. விமானப் பயணம் என்றால் கேட்கவா வேண்டும்? மும்பை விமான நிலையம் முழுவதும் மயில் தோகை மாதிரி வண்ணமயமா இருந்துச்சு.

மும்பையிலிருந்து ஒரே தாவல்! நேரா நியூயார்க்! இடைநில்லாப் பேருந்துன்னு நம்ம ஊர்ல போற மாதிரி, உலகின் மறு பகுதிக்கு இடை நில்லாமல் நேராகச்சென்று இறக்கியது விமானம்!

நியூயார்க் நகரில் 6 மணி நேரம் காத்திருந்தோம். ஆளைப் பார்த்து எடைபோடக் கூடாது மாதிரி, சூரியன் பார்த்தும் எடை போடக் கூடாது போல! வெளியே 10 செல்சியஸ் வெப்பநிலை.  (அது வெப்பநிலையில்ல… குளிர்நிலை) ஆனால், சூரியன் எங்களுக்கு ஹாய் சொல்லிட்டு இருந்துச்சு. சரின்னு விமான நிலைய முனையம் (Terminal) மாறும்போது கையுறை (Mittens) இல்லாம போய்ட்டோம். சரியான குளிர். பேசினால் புகை புகையாக வருது. ஓட்டமும் நடையுமாக அடுத்த முனையத்திற்கு போய்ச் சேர்ந்தோம். அங்கே இருந்தவரை கேட்டபோதுதான் தெரிந்தது. நாங்கள் சென்றது ஆண்டின் மிகக் குளிரான வாரம் என்று! விமானத்தில் பயணிக்கும்போது காதை மூடிக்கொள்ள பஞ்சும் சூயிங்கமும் (Chewing gum) எடுத்துக்கொள்ள வேண்டும். தரையிறங்கும்போது வரும் காதுவலியை இது போக்கும். எனக்குப் பயன்பட்டது.

ஃபோர்ட் லார்டல் (Fort Lauradele) போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு விருந்தளிக்கும் குடும்பம் (Host Family) எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. இந்த மாநாட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. விருந்தளிக்கும் குடும்ப முறை. ஏதேனும் விடுதியில் தங்கி இருந்தால், மற்ற மாணவர்களுடன் பழகி இருந்திருப்போம். ஆனால், ஒரு குடும்பத்துடன் இருந்தபோது அவர்களின் கலாச்சாரம் மிக எளிமையாகப் புரிந்தது. இன்னும் சொல்லப்போனால், விருந்தளிக்கும் குடும்பம் போய் எங்கள் குடும்பம் என்னும் உணர்வுக்கு ஆளாகிவிட்டோம். என் பயண நினைவுகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

(பயணிப்பேன்)

32
அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (1920-2019) தொடங்கும் மார்ச் 10-ஆம் தேதி முதல் விடுதலை நாளேட்டில்…அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (1920-2019) தொடங்கும் மார்ச் 10-ஆம் தேதி முதல் விடுதலை நாளேட்டில்…28th February 2019
அய்ன்ஸ்ரூலி28th February 2019அய்ன்ஸ்ரூலி

மற்ற படைப்புகள்

2019_mar_IMG-20190125-WA0036
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!!

Read More
2019_mar_v15
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

வாட்ஸ் அப்-பில் வந்தது

Read More
2019_mar_v7
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_mar_v28
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

நூற்றாண்டு காணும் அன்னை

Read More
2019_mar_v22
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_mar_Moondru-peigalum
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p