• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கொஞ்சம் கற்போம்…

2019_apr_Page-2425
ஏப்ரல் 2019

”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்”

கே.பாண்டுரங்கன்

‘இனிப்பு’  என்றாலே பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோருக்கும் பிடிக்கும். பிடிக்காது என்று சொல்பவர்களே இல்லை.

ஆங்கிலம் கற்றுக் கொள்ளுதல் என்பது பலருக்கு கசக்கக் கூடிய ஒன்று. நிறைய பேருக்கு ஆங்கிலம் படிக்க மிகுந்த ஆர்வம் இருக்கும்… ஆனால், அதைக் கற்றுக் கொள்ளும் வழி மட்டும் தெரியாது.

ஆங்கிலம் என்பது இஞ்சி, ஏலக்காய் போன்றது. தமிழ் என்பது கரும்பு போன்றது. ஏலக்காயும், இஞ்சியும் ஆரோக்கியம்தான். நல்லதுதான். அதுபோல் கரும்பும் ஆரோக்கியமானதுதான். நல்லதுதான். கரும்பை வயலிலிருந்து அறுத்து எடுத்து, சுத்தம் செய்து, சல்லைகளை நீக்கி, சிறிதாக வெட்டி, பல்லால் மென்று நாவால் சுவைத்துதான் சுவையை அறிந்து கொள்கிறோம்.

உடல் உற்சாகம் அடைவதை, பலம் அடைவதை, சாறாகப் பருகியும் உணரலாம்… அறியலாம்.

கரும்பை உணர்வதுபோல் தமிழையும் உணர வேண்டும் _ அறிய வேண்டும். தமிழை உணர்ந்தால்தான், அறிந்தால்தான் ஆங்கிலத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

வாங்க… தமிழ் கலந்து ஆங்கிலம் அருந்துவோம்.

அதற்கு முன் ஒன்று!

உடலுக்கு பல்வேறு உறுப்புகள் இருப்பதுபோல், ஓர் ஆங்கில சொற்றொடரையோ ஒரு தமிழ் சொற்றொடரையோ எழுதுவதற்கு பல்வேறு சொல் உறுப்புகள் (Organs) தேவைப்படுகின்றன.  அவற்றை ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்வோம்.

பயப்படாதீங்க… எளிதுதான்!

Articles – சுட்டிடைச் சொல்

ஆர்டிகிள் என்பது சுட்டிடைச்சொல் அதாவது சுட்டுஇடைச்சொல் என்றால் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்… புரிகிறதா?

‘A’ என்றால் ஒரு

‘An’ என்றால் ஓர்

‘The’ என்றால் அந்த, இந்த

மாற்றிச் சொல்வதானால்….

ஒரு = A

ஓர் = An

இந்த, அந்த = The

இவை ஆங்கிலத்தில் ஆர்ட்டிகில்ஸ் (Articles) என்று அழைக்கப்படும்?

‘An’ – ‘ஓர்’ இவை எங்கு, எப்படி வரும்?

A, E, I, O, U ஆகியவை Vowel மீறீகள் (உயிரெழுத்துகள்) ஆகும்.

An என்பது உயிரெழுத்து ஒலி ஒலிக்கும் இடங்களுக்கு முன்தான் வரும். அதாவது vowel- களுக்கு முன்தான் வரும். அதாவது,

An Order = ஓர் ஆணை

An Aeroplane = ஓர் ஆகாய விமானம்

An Idli = ஓர் இட்லி

An Orange = ஓர் ஆரஞ்சு

An Umbrella = ஓர் அழகிய குடை

‘A’ – ஒரு எப்படி, எங்கு வரும்?

அதாவது, தமிழில் ஒரு எப்படி, எங்கே வரும்?

ஒரு என்பது மெய் எழுத்துக்களின் முன்புதான் வரும்.

அதாவது, ‘A’ என்பது consonant முன்பு  வரும் சுட்டிடைச்சொல்.

‘A’ Boy = ஒரு பையன்

‘A’ Girl = ஒரு பெண்

‘A’ Baby = ஒரு குழந்தை

‘A’ Tree = ஒரு மரம்

மேற்கண்டவை சின்ன எடுத்துக்காட்டுகள்தான்…

தமிழில் ஓர் என்பது, அ, ஆ, இ போன்றவை உயிரெழுத்து ஒலிகளுக்கு முன்தான் வரும். உயிர்மெய் எழுத்துகளுக்கு முன் ஒரு என்ற சொல்லைப் பயன்படுத்துவோம். இப்போது புரிகிறதா A-வை ஒரு என்றும். An-னை ஓர் என்றும் ஏன் சொல்கிறோம் என்று!

‘The’ – அந்த/ இந்த எப்படி, எங்கே வரும்?

அதாவது, அந்த, இந்த என்பது ஏற்கனவே சுட்டப்பட்ட பெயர்ச் சொல்லை மீண்டும் குறிப்பிடும்போது வரும்.

அப்படித்தான் The என்ற சுட்டிடைச்சொல்லும்!

எ.கா: A Lion lived in a forest.The Lion roared loudly.

ஒரு சிங்கம் ஒரு காட்டில் வசித்தது. அந்த சிங்கம் சத்தமாக கர்ச்சித்தது.

இப்போது கியும், The யும் எப்படி பயன்படுத்தப்-படுகிறது என்பது புரிகிறதல்லவா?

அதேபோல, குறிப்பிட்ட ஒன்றைச் சுட்டாமல் பொதுப்படையாக ஒரு பெயரையோ, இடத்தையோ, பொருளையோ சுட்டுவதற்கும், இயற்கையாக உள்ள அஃறிணைப் பொருட்களுக்கும் முன்பு ‘ஜிலீமீ’  வரும். எ.கா: மலை, சூரியன், நிலவு, காடு

எ.கா: ‘The’ sun, ‘The’ forest, ‘The’ mountain, ‘The’ Lion

அந்த  சூரியன்,  இந்த  காடு, இந்த  மலை போன்றவை.

அதேபோல,

அந்த, இந்த  என்பது உச்சபட்சமாக-சொல்லப்படும் வார்த்தைகளுக்கு முன்பும் வரும்.

எ.கா: ‘The ‘ most important matter, ‘The’ fastest horse, ‘The’ greatest man in the world

அந்த முக்கியமான  விபரம், அந்த வேகமான குதிரை, உலகின் மிகச்சிறந்த இந்த மனிதன்

வினைச் சொற்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

 


 

24
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிளாஸ்டிக் தேவையா?பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிளாஸ்டிக் தேவையா?4th April 2019
செய்து அசத்துவோம்4th April 2019செய்து அசத்துவோம்

மற்ற படைப்புகள்

2019_apr_v9
ஏப்ரல் 2019
3rd April 2019 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2019_mar_v22
ஏப்ரல் 2019
4th April 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_apr_Page-14-16
ஏப்ரல் 2019கதை கேளு கதை கேளு
3rd April 2019 by விழியன்

அலாமியும் அதிசய பறவைகளும்

Read More
2019_apr_v6
ஏப்ரல் 2019
2nd April 2019 by ஆசிரியர்

புல்லைத் தாண்டாமல் வெளியேற வழி சொல்லுங்கள்!

Read More
2019_apr_IMG-20190319-WA0088
ஏப்ரல் 2019
3rd April 2019 by ஆசிரியர்

வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!! – 2

Read More
2019_apr_v22
ஏப்ரல் 2019
4th April 2019 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p