• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெற்றோர் கவனத்திற்கு…

2019_may_v3
மே 2019

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்!

1.  வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.

2. அம்மா அல்லது அப்பா நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.

3. குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டே வாசிப்பது நல்லது.

4. புத்தகங்களை வாசித்துக் கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.

5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.

6. அப்படிக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டுவிட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.

7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.

8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.

9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ, தாங்கள் சின்ன வயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்.

10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக் கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக் கொண்டிருக்கக் கூடாது.

11. குழந்தைகள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.

12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின் ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப் பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக் கொண்டேன்.

13.பள்ளியில் இருந்த நூலக வகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக் கதைகள் ஆகியவை என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கின.

14. என்னுடைய நண்பர்கள்  புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும் கூட செய்யவைத்தது.

15. விளையாட்டுப் பொருட்களைத்  தயக்கம் இல்லாமல் வாங்கிக் கொடுப்பதைப் போல; புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும் அந்தப் புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக் கொடுக்கவும் வேண்டும்.

16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன் வைத்து குழந்தைகளிடம் சிறிய அளவில்கூட முகச் சுளிப்பை காட்டக்கூடாது.

17.  நாள்தோறும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.

18.  கதைகள் அத்தனை வலிமையானவை. மனித மனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.

”உங்கள் குழந்தை மட்டும் ஸ்மார்ட் போன்களில் விளையாடாமல், புத்தகம் படிக்கிறதே! எப்படி இணங்க வைத்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

அந்தத் தாய் சொன்னார்: ”குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை. நாம் செய்வதைப் போல செய்கிறார்கள்”

21
திசை அறிதல்திசை அறிதல்4th April 2019
உலகம் நம் குடும்பம்25th April 2019உலகம் நம் குடும்பம்

மற்ற படைப்புகள்

2019_may_a4
மே 2019
25th April 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்

Read More
2019_may_v13
மே 2019
29th April 2019 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2019_may_Page-4
மே 2019
25th April 2019 by ஆசிரியர்

உயிர்நேயச் சிறுவர் டெடிக்!

Read More
2019_may_a16
மே 2019
29th April 2019 by விழியன்

பழுப்பு மரத்தில் சிக்கிய புப்பா

Read More
2019_may_a3
மே 2019
25th April 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More
2019_may_a7
மே 2019
26th April 2019 by ஆசிரியர்

விண்ணை நோக்கி – ’மணியம்மையார் சாட்’

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p