• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாதனை : உசேன் போல்ட் ஆகணும்!

2019_jul_a34
ஜூலை 2019பிஞ்சுகள் பக்கம்

சர்வேஷின் கனவு

79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்கிறான் ஒரு 7 வயதுச் சிறுவன். தாம்பரம், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விசு, விஜயலட்சுமி ஆகியோரின் மகன் சர்வேஷ்.  மழலை மாறாத சர்வேஷ் தனது 4 ஆம் வயதில் கடலூரில்  நடந்த  குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதன் முதலாக இரண்டாம் பரிசு பெற்றார். ஏவிடி நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் தன் தந்தையோடு, சர்வேஷ் படிக்கும் சாய்ராம் பள்ளித் திடலில் தினமும் 2 கிலோ மீட்டர் ஓடுவாராம்.

குழந்தையின் ஆர்வத்தை பார்த்து மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள  அழைப்புகளும் தேடி வந்ததுண்டு. சில முறை தோல்வியடைந்து துவண்டுபோய் ‘அப்பா வேண்டாம்பா’ என்று அழுதாலும்,  ஒரு நாளும் ஆர்வத்தையும், உழைப்பையும் விட்டதில்லை. சென்னையில் நடந்த மாரத்தான் போட்டில் முதலில் தோற்றாலும், பின் விடாமுயற்சியால், 100 நாளில் ஓடும் சவாலில் 206 கிலோ மீட்டர் ஓடி முடித்தார். இது போல் 7 முறை அல்ட்ரா ரன்னிங் போட்டிகளில் பல சவால்களை எளிதாக எதிர்கொண்டவர்.

தமிழகத்தின் மாரத்தான் வீரர்களின் பட்டியலில் சர்வேஷ் பெயர் இடம்பெற்றிருக்கிறது. பெசன்ட் நகரில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தானில் பங்கேற்று பெறியவர்களையும் தாண்டி முதல் பரிசை வென்றார். ஓட்டத்தில் இருக்கும் ஆர்வத்தைப் போல் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் அதிகம். கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

மாரத்தான் இருக்கிறதோ இல்லையோ தினமும் பயிற்சியை விடாத சர்வேஷின் கனவு உசேன் போல்ட் போல் ஆவதாம்.!.

– செ.அன்புச்செல்வி

18
கொம்பு முளைச்சிருக்கா?கொம்பு முளைச்சிருக்கா?27th June 2019
பயணம் - பாடம்27th June 2019பயணம் - பாடம்

மற்ற படைப்புகள்

2020_jan_v30
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th December 2019 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி: விடை-பரிசுகள்

Read More
20
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
5th June 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! ஹினாமத்சூரி

Read More
3
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
9th November 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம் : ஒப்பிட்டு உங்களைத் தாழ்வாக எண்ணாதீர்!

Read More
29
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

Read More
2022_oct_3
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p