• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

யாச்சியின் குமிழி ஆசை

2019_jul_v13
கதை கேளு கதை கேளுஜூலை 2019

குமிழி செய்யவேண்டும் என்ற ஆசை எப்படியோ யாச்சிக்கு வந்துவிட்டது. யாச்சி பள்ளிக்கு செல்லும் ஒரு முயல்குட்டி. நூலகத்தில் இருக்கும் புத்தகத்தில் குமிழி இருப்பதைப் பார்த்துவிட்டது. நாட்டில் சிறுவர்கள் ஏதோ சோப்புத் தண்ணீரில் குழலை முக்கி எடுத்து ஊதினால் குமிழி வரும் என போட்டிருந்தது.

தன் தோழமையான வாசியா வாத்திடம் தன்னுடைய ஆசையைக் கூறியது. வாசியா ஒரு தேர்ந்த வாசகி. நூலகத்தில் குமிழி பற்றிய மேலும் செய்திகளை சேகரித்தது. தன் நண்பன் முயல் யாச்சிக்கு உதவ முயன்றது. ஊதுவதற்கு குழல் வேண்டும் அடுத்ததாக அந்த குழையும் நீர் வேண்டும். ஒரு பப்பாளி மரத்தின் கிளையை உடைத்து அதனைக்கொண்டு சின்னதாக குழல் செய்துகொண்டன யாச்சியும் வாசியாவும். அடுத்ததாக அந்தக் கலவை நீரை செய்ய வேண்டும். அவர்களுடைய நண்பன் முதலையிடம் விசாரித்தார்கள். அது குளத்திற்கு அருகே இருக்கும் ஒரு விசேஷமான இலை இருக்கும், அதாவது பாதி மஞ்சள் நிறத்திலும் மீது பச்சை நிறத்திலும் இருக்கும். அந்த இலையை நன்றாக குழைத்தால் கலவை தயார் என்றது முதலை.

யாச்சியும் வாசியாவும் அந்த இலையைத் தேடி அலைந்தார்கள், கண்டுபிடித்தும்விட்டார்கள். எண்ணி இருபது இலைகள் மட்டுமே இருந்தன. அதனைப் பறித்து எடுத்துவந்து நன்றாக குழைத்தார்கள். யாச்சி அந்த பப்பாளிக் குழலைக் எடுத்து, கலவையில் முக்கி ஊத முயன்றது. ஆனால் குமிழி வரவில்லை. இருவரும் சோர்ந்தனர். மீண்டும் முதலையிடம் சென்று விசாரித்தனர்.

ஓர் இரவு அந்தக் கலவையை காய வைக்கவேண்டும் என்றது முதலை. அப்படியே செய்தார்கள். ஓர் இரவு காத்திருந்தார்கள். இதனை தன் நண்பர்கள் யாரிடத்திலும் சொல்லவே இல்லை. ஒரே ஒரு நண்பன் பாகாவிடம் மட்டும் யாச்சி கூறியது. பாகா ஒரு குட்டி யானை. அதே பள்ளியில் தான் பாகாவும் படிக்கின்றது. எல்லோரிடமும் நன்றாகப் பழகும்.

ஹே, நானும் குமிழி ஊதும்போது வரேன்பா என்று ஆசையாக கேட்டது. சரி வா என யாச்சி அழைத்துச்சென்றது. திட்டம் இது தான். வாசியா, குழலைக்கொண்டு குமிழியை ஊதும். பாகாவின் மேல் அமர்ந்து மேலே வரும் குமிழிகளை யாச்சி உடைக்கும். அவ்வளவு தான். அது தான் அவர்களுக்கு மகிழ்ச்சி. இன்று குமிழிகள் நன்றாகவே வந்தன. ஒன்று, இரண்டு, மூன்று.. பத்து குமிழிகள் குழலில் இருந்து வந்தன. ஒன்பது குமிழிகளையும் பாகாவும் யாச்சியும் உடைத்துவிட்டன. பத்தாவது குமிழி தான் மிகப்பெரியதாக வந்தது. பாகா மீதிருந்து தாவி அந்த குமிழியை உடைக்க முயன்றது யாச்சி முயல்.

அப்போது நடந்தது அந்த அதிசயம். டமாலென யாச்சி குமிழிக்குள் சென்றுவிட்டது. குமிழி மேலே மேலே பறக்க ஆரம்பித்தது. சில நொடிகள் என்ன நடக்கின்றது என பாகாவிற்கும் வாசியாவிற்கு புரியவே இல்லை. பாகாவின் உயரத்தையும் தாண்டி மேலே சென்றது குமிழி. மேலே மேலே மேலே..

பதறியபடியே குமிழி செல்லும் திசையில் பாகாவும் வாசியாவும் ஓடின. குமிழிக்கு உள்ளே இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என யாச்சி கத்தியது வெளியே கேட்கவே இல்லை.

பதறிக்கொண்டு யானை ஓடி வருவதைப்பார்த்த பருந்து நண்பன் என்ன என விசாரிக்க, அதோ யாச்சி என்றது. யாச்சி உயரப்பறந்து கொண்டிருந்தது. இல்லை மிதந்துகொண்டு இருந்தது. பருந்து நண்பன் சிறகடித்து பறந்து மேலே சென்றது. குமிழிக்கு அருகே சென்றதும் யாச்சிக்கு உயிர் வந்தது. அதுவரை பதட்டமாக இருந்த யாச்சி கொஞ்சம் நிதானித்து கீழே அந்த காட்டினைப் பார்த்தது. ஆஹா, என்ன அழகு என்ன அழகு என வியந்தது. பருந்து தன் கூரிய அலகுகளால் டொக் என குமிழி மீது குத்த படால் என குமிழி வெடித்தது. சர்ர்ரென மேல இருந்து யாச்சி விழ ஆரம்பித்தது. அது விழவும் கீழே பாகா வரவும் சரியாக இருந்தது.  லபக் என பாகா யாச்சியை பிடித்துக்கொண்டது.

அன்று இரவு, முதலை எல்லோருக்கும் விருந்து  வைத்திருந்தது. குமிழியில் பறந்த கதையை ஆயிரத்தி முப்பதாவது முறையாக யாச்சி சொல்லிக்கொண்டு இருந்தது.

அங்க மேல எனக்கு பயமே இல்லை…

24
MY MOTHER!MY MOTHER!27th June 2019
கொம்பு முளைச்சிருக்கா?27th June 2019கொம்பு முளைச்சிருக்கா?

மற்ற படைப்புகள்

2017_dec_s12
கதை கேளு கதை கேளுடிசம்பர்
1st December 2017 by விழியன்

மழைவில்….

Read More
8
2024கதை கேளு கதை கேளுஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…இந்த மலைக்கே

Read More
4
ஏப்ரல் 2024கதை கேளு கதை கேளு
2nd April 2024 by விழியன்

அக்பர்,சீதா மற்றும் சிலர்

Read More
2017_apr_s20
ஏப்ரல்கதை கேளு கதை கேளு
27th March 2017 by விழியன்

மேலங்கி

Read More
2018_jan_s28
கதை கேளு கதை கேளுஜனவரி
5th January 2018 by விழியன்

பொங்கல் ராட்டினம்

Read More
2019_jul_a11
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

பிஞ்சுகளின் படைப்புகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p