• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து

2019_aug_v4
ஆகஸ்ட் 2019

ஏழ்மை வரையரையிலும் பல்வேறு ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரியாக வரவில்லை. ஆறாம் வகுப்பில் எனது தந்தை, அரசுப் பள்ளியில் சேர்த்தார். பிறகுதான் என்னால் மூச்சுவிட முடிந்தது. இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இரண்டாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில் அய்.ஏ.எஸ் பயிலவேண்டும், சட்டம் பயில வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால், என்னைப் போன்றவர்கள் மூன்றாம் வகுப்பில், அய்ந்தாம் வகுப்பில், எட்டாம் வகுப்பில் என்று அடுத்தடுத்து பொதுத்தேர்வுகள் எழுதினால் என்னாகும்? தோல்வி அடைந்து என்னைப் போன்றவர்களின் கல்விக்கான எதிர்காலமே கேள்விகுள்ளாகும்.

– வ.ம.வேலவன், சென்னை

கிராமப்புறத்தில் முதல் தலைமுறையைச் சார்ந்த மாணவர்கள் தான் அதிகப்படியாக இருக்கிறார்கள்.  அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்கள். இத்திட்டத்தினை திணித்தால் ஒருவர் கூட அடுத்த வகுப்புக்கு முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்படும். இது ஒரு மறைமுக குலக் கல்வித் திட்டம் ஆகும். எனவே, இத்திட்டத்தினை ஆதரிக்கவில்லை.

– அருள், வேலூர் கிராமம், விழுப்புரம் மாவட்டம்

கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு இடம் இல்லை. சமூகநீதி, இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமைக்கு இடம் இல்லை. 5, 8 பொதுத் தேர்வு, 9, 10, 11, 12 Semester முறை, கல்லூரியில் இடம் பெற மீண்டும் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

– த.கோ.ஓவியா, சென்னை

திராவிட மொழிகளையே சாராத சமஸ்கிருத மொழியை இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது என்றும் பண்பாட்டு மொழி என உருவகப்படுத்துவதிலிருந்தே தெரிகிறது. இது தெளிவற்ற, ஒருதலைப்பட்சமான கொள்கை என்று.

தனியார் பள்ளிகளின் கட்டணங்களை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றால், இதனால் அனைவருக்கும் சமமான கல்வியும், கற்போர் எண்ணிக்கையும் கேள்விக்குறியாகிவிடும். முடிவில் கல்வி வியாபாரமாக்கப்படும்.

– செ.அன்புச்செல்வி, திண்டுக்கல்

22
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?””இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”27th June 2019
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி31st July 2019அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி

மற்ற படைப்புகள்

2019_aug_a7
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி

Read More
2019_aug_v10
அறிவியல்ஆகஸ்ட் 2019
1st August 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அழகிய பறவைகள் வீடு

Read More
2019_aug_v22
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_aug_v7
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
1st August 2019 by ஆசிரியர்

அடையாளம் – தமிழகத்தின் பட்டாம்பூச்சி

Read More
2019_aug_v17
ஆகஸ்ட் 2019பாடல்கள்
1st August 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_aug_a14
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p