• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அடையாளம் – தமிழகத்தின் பட்டாம்பூச்சி

2019_aug_v7
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்

’தமிழ் மறவன்’

 

தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்’ வகையை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு முன்பே அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்’ (Tamizh Maravan) எனும் வகை பட்டாம்பூச்சியை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழகம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது பட்டாம்பூச்சிகளாகும். காய், கனிகள் மற்றும் விதைகள் உருவாவதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் முக்கியக் காரணியாக விளங்கும்  மகரந்தச் சேர்க்கைக்கு உறுதுணையாக விளங்குபவை பட்டாம்பூச்சிகள்.

இந்தியாவை ஆட்சி செய்தபோது ஆங்கிலேயர்கள் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். மொத்தம் 324 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்படுத்தியுள்ளனர். இதில் 311 வகை பட்டாம்பூச்சி வகைகளை, பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை பட்டாம்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் பட்டாம்பூச்சியை தங்களது மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்துள்ளன. அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நண்பனாக விளங்கும் பட்டாம்பூச்சியை தமிழக அரசின் பட்டாம்பூச்சியாக அறிவிக்க வேண்டும் என பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநில பட்டாம்பூச்சியைத் தேர்வு செய்ய வனத் துறையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. “தமிழ் மறவன்’ மற்றும் தமிழ் லேஸ்விங்’ ஆகிய பட்டாம்பூச்சிகள் இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், தமிழ் மறவன்’ வகையை மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாலவர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் தமிழ் மறவன்’ வகையை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளார். இதனால் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிர்ரோசாரா தாய்ஸ் என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த பட்டாம்பூச்சி தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீரோடைகள், ஈரமான பகுதிகளில் வாழும். குறிப்பாக மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு, சிறுவாணி பகுதிகளில் இவற்றை அதிகமாகக் காணலாம்.

பழுப்பு ஆரஞ்சு நிறத்தில் கருப்புப் புள்ளிகள் கொண்ட இவை, மரவொட்டி என்கிற தாவரத்தில் முட்டையிட்டு, வளரும் தன்மை கொண்டவையாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வகையில் அதிக அளவில் இவற்றைக் காணலாம். 60 மி.மீ. முதல் 75 மி.மீ. வரை இதன் உடல் அளவும், ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை இதன் ஆயுள்காலமும் இருக்கும். கோவையைச் சேர்ந்த பட்டாம்பூச்சி ஆர்வலர் அ.பாவேந்தன் கூறும்போது, பட்டாம்பூச்சிகள் அதிகமாக எங்குள்ளதோ, அந்த வனப்பகுதி செழுமையாக உள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் கோவையில் கல்லாறு, தேனி மற்றும் மேகமலை, விருதுநகர் அருகே செண்பகத்தோப்பு, திருச்சி அருகே பச்சமலை உள்ளிட்ட 20 இடங்களில் அரியவகை பட்டாம் பூச்சிகள் உள்ளன என்றார்.

பட்டாம்பூச்சிகள் கூடத்தில் அடைத்து பாதுகாக்கப்படுவதைவிட இயற்கையான சூழலில் அவை பெருகி வாழ வழி செய்வது இயற்கையை ரசித்துக் காப்பதாக அமையும்.

39
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!1st August 2019
”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” - ‘கால’ அட்டவணை! - 51st August 2019”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” - ‘கால’ அட்டவணை! - 5

மற்ற படைப்புகள்

2021_may_m13
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

இதுல ஒருத்தன் மட்டும் பறக்காவட்டி யார் அவன்?

Read More
34
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு அமைச்சரின் பாராட்டும், நமது நன்றியும்!

Read More
2021_jan_v24
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
25
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 7: முக்குளிப்பான்

Read More
2022_sep_4
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th September 2022 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு : மச்சம் எப்படி உருவாகிறது

Read More
2022_oct_35
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

பொருத்துக

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p