• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

2019_sep_a31
இலக்கணம்செப்டம்பர் 2019

கே. பாண்டுரங்கன்

VOICE [வினை வகை]

தை மாதத்தில் பொங்கல் தயார் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்!

பொங்கலுக்கு என்னென்ன வேண்டும்?

பால், சர்க்கரை, வெல்லம், பச்சரிசி, ஏலக்காய், உலர் திராட்சை, பாசிப்பருப்பு என பல உள்ளிடு பொருள்கள் தேவைப்படுமல்லவா?

அதுபோல, தமிழ் அல்லது ஆங்கில மொழி பேசுவதற்கு இம்மாதிரியான Tense, Voice, Articles, Noun, Pronoun மற்றும் Verb போன்ற பல உள்ளிடு பொருள்கள் தேவைப்படுகின்றன.

இவற்றை எப்போது பயன்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது என்பதில்தான் ஒரு மொழி முழு உருவம் பெறுகிறது _ பொங்கல் சமைப்பது போல.

நெருப்பு என்பது கற்றுக்கொள்ளல்.

பாத்திரம் என்பது Subject (எழுவாய் அதாவது செய்பவர்).

பால் என்பது Object (பயனிலை அதாவது பயன்படுத்தப்படுவது).

அரிசி என்பது Tense (காலம்).

சர்க்கரை என்பது Voice (குரல்)

உலர் திராட்சை, ஏலக்காய் என்பவற்றை Noun, Verb, Pronoun, Preposition, Articles, Adjective… போன்றவையாகக் கற்பனை செய்து கொள்வோம்.

இவற்றை வைத்துத்தான் மொழியை சமைக்கப் போகிறோம்.

அதாவது பேசுவதற்கும், எழுதுவதற்கும் சொற்றொடரை உருவாக்கும்போது இவையெல்லாம் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றன.

Voice என்பதை சர்க்கரை என்று ஏன் சொன்னேன் தெரியுமா? உப்பில்லாத பண்டம் குப்பையிலே… அதுபோல சர்க்கரை இல்லாத பொங்கலும், பாலும் சுவை தராது…

Voice இல்லாத மொழியும் பேச இயலாது.

புரிகிறதா? Voice என்றாலே குரல்தானே… குரலில்லாவிட்டால் மொழி பேச முடியுமா?

அதுபோல்தான் வினைவகை எனப்படும் இந்த Voice_உம்!

போன இதழில் Tense என்றால் காலம் என்று பார்த்தோம்.

Tense எதற்கு? Voice எதற்கு?

Tense என்றால் எப்பேது நடந்தது என்பதனை சொற்றொடரில் காட்டுவதாகும். Voice என்றால்

(1) யார் செய்தார்கள், (2) என்ன நடந்தது என்பதனை சொற்றொடரில் காட்டுவதாகும்.

விரிவாகப் பார்ப்போம்…

[Voice] வினை வகை இரண்டு:

1.    Active Voice
2.    Passive Voice

Active Voice  என்றால் செய்வினை வாக்கியம் (மூடப்பழக்கத்தைக் குறிப்பதல்ல)

முன்பு அட்டவணையில் 12 Tense  எடுத்துக்காட்டுகள் பார்த்தோமல்லவா? அவை எல்லாம் Active Voice ஆகும்.

தற்போது ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

முதலில் ஆங்கிலத்தில்…

I eat sugarcane

I                eat          sugarcane
(Subject)           (Verb)           (Object)
[Doer]

இது தமிழில் சற்று மாறி வரும்.

நான் கரும்பு சாப்பிடுகிறேன்.

நான்        கரும்பு       சாப்பிடுகிறேன்

(எழுவாய்)     (பயனிலை) (வினைச்சொல்)

(செய்பவர்) (பயன்படுத்தப்படுவது) (செயல்)

* இது சாதாரண நிகழ்காலம்.

* அது மட்டுமல்ல; இது செய்வினை சொற்றொடரும் (Active Voice-சும்) கூட.

* இங்கே Tense-இல் உள்ளபடி மாற்றம் ஏதும் இல்லாமல் அப்படியே வாக்கியம் வரும்.

அ யார் செய்கிறார்கள்? என்று கேள்வி கேட்டால் அதற்குச் சரியான பதிலை இந்தச் சொற்றொடரின் முன்பகுதியிலுள்ள Subject  (எழுவாய் அல்லது செய்பவர்) சொல்லும். அதாவது, யார் சாப்பிடுகிறார்கள்? என்னும் கேள்வியைக் கேட்டால்… ‘நான் சாப்பிடுகிறேன்’ என்கிற பதில் அச்சொற்றொடரின் முற்பகுதியில் வருகிறது அல்லவா? அதாவது செய்வினை (நான் செய்வதால் செய்வினை)

Passive Voice என்றால் செயப்பாட்டுவினை.

ஆனால், Passive Voice இல் என்ன நடந்தது என்பது மட்டும் விளக்கமாகக் காட்டப்படும். பின்வரும் எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

முதலில் ஆங்கிலத்தில்…

Sugarcane is eaten [by me] Sugarcane    is eaten    [by me] [Object]    ‘Be’ form verb & [verb]    [Subject] [DOER]

இப்போது தமிழில்…

கரும்பு சாப்பிடப்படுகிறது (என்னால்)

கரும்பு              சாப்பிடப்படுகிறது                (என்னால்)

(பயனிலை) (வினைச்சொல்)      (எழுவாய்)

(பயன்படுத்தப்படுவது)     (செயல்)   (செய்பவர்)

மேலே கண்ட இச்சொற்றொடரில் யார் செய்கிறார்கள்? என்று கேள்வி கேட்டால் அதற்கான பதிலை இச்சொற்றொடரின் முன்பகுதியிலுள்ள பயனிலை (கரும்பு) சொல்லாது.

_இது என்ன நடந்தது, என்ன செய்யப்-பட்டது என்பதை விளக்கும் சொற்றொடர். எனவே, இது செயப்பாட்டு வினை சொற்றொடர் (Passive Voice).

சில இடங்களில் எழுவாய் (Subject) பயன்படுத்தத் தேவையிருக்காது. நீங்கள் ஆங்கில _ தமிழ்ப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே யார் செய்தார்கள் என்பது தேவைப்பட்டிருக்காது. அது மாதிரியான சொற்றொடர்கள் செயப்பாட்டு வினையில்(Passive Voice)  வந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக,

Periyar statue was erected at Anna Salai  [by Government]

தமிழில்…

பெரியார் சிலை அண்ணா சாலையில் நிறுவப்பட்டது (அரசாங்கத்தால்)

மேற்கண்ட வாக்கியத்தில் (அரசாங்கத்தால்) அல்லது [by Government] என்பது அவ்வளவு முக்கியமாகத் தேவைப்படவில்லை. செய்யப்படும் நிகழ்வு மட்டும் முக்கியமாகிறது. எனவே, இது (Passive Voice) செயப்பாட்டு வினை.

Active Voice, Passive Voice  இரண்டையும் ஓர் அட்டவணை மூலம் அடுத்த இதழில் தெளிவாகப் பார்க்கலாம்.

காத்திருங்கள்.

(தொடரும்…)

30
இசைப்போம் வாரீர்! - நீண்ட நீண்ட காலம் ( தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்)இசைப்போம் வாரீர்! - நீண்ட நீண்ட காலம் ( தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்)26th August 2019
வரைந்து பழகுவோம்26th August 2019வரைந்து பழகுவோம்

மற்ற படைப்புகள்

2019_sep_a41
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

சாதனை : சத்தமின்றி வென்ற ஜெர்லின் அனிகா

Read More
2019_sep_a43
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை – பரிசுகள்

Read More
2019_aug_v11
ஆகஸ்ட் 2019இலக்கணம்
1st August 2019 by ஆசிரியர்

”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” – ‘கால’ அட்டவணை! – 5

Read More
2019_sep_a45
கட்டுரைகட்டுரைசெப்டம்பர் 2019
27th August 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
2019_dec_c1
இலக்கணம்டிசம்பர் 2019
30th November 2019 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2021_jul_v39
இலக்கணம்ஜூலை 2021
4th July 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 24

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p