• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எதற்கு?

2019_sep_a51
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

நிலவில் மனிதன் வாழ்வதற்கு பாதைபோடச் சொல்லும் ‘ நிலவுக்கலன் 2 ‘

(சந்திராயன்)

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்-பட்ட ‘சந்திரயான் 2’ விண்கலம் பூமியின் வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதைக்குள் சென்றுள்ளது. .

நிலவுக்கலன் என்னும் ‘சந்திரயான் 2’ விண்கலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாகும். அதாவது, தரையிறங்குவதற்காக உள்ள ஒரு கலனையும், சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள் போன்ற ஒரு கலனையும், நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு வாகனத்தையும் கொண்டுள்ளது.

இம் மூன்று பகுதிகளும், நிலவில் ஆராய்ச்சி-களை மேற்கொள்வதற்குரிய ஆய்வுக் கருவிகளை தனித்தனியே கொண்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்தி, நிலவில் தண்ணீர், தாதுக்கள் இருப்பு போன்றவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

‘சந்திரயான் 2’ விண்கலமானது, ‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் முனைப்பகுதியில் ஆய்வுக்கலன் வைக்கப்-பட்டுள்ளது.

ஜூலை 22-ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய ‘சந்திரயான் 2’ விண்கலம், ஆகஸ்ட் 15-அன்று நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. பிறகு இது நிலவைச் சுற்றிவந்து செப்டம்பர் மாதம் 6 அல்லது 7ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்துருவத்தின் முக்கியத்துவம்

“தடையற்ற தொலைத்தொடர்பு, கற்பாறைகள் அற்ற நிலப்பரப்பு, சூரிய மின்கலன் மூலம் விண்கலத்தை இயக்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வசதி ஆகிய காரணங்களினால்தான் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க முடிவுசெய்துள்ளோம்” என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவில் மனிதர்களின் குடியிருப்புக்குச் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தென்துருவம் கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் முதல் முறையாக விண்ணுக்கு அனுப்பிய ‘பேரேஷீட் விண்கலம்’ இதே பகுதியில் தரையிறங்கும்போதுதான் விபத்தில் சிக்கியது. இருந்தபோதிலும், நிலவின் வேறுபட்ட பகுதிகளில் விண்கலங்களை தரையிறக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டிய அவசியம் உள்ளதாக ‘இஸ்ரோ’ கூறுகிறது.

‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் சிறீஅரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களில், ‘சந்திரயான் 2’ விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் வலம் வர ஆரம்பித்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்ததும், ‘சந்திரயான் 2’ விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து லேண்டர் தனியே பிரிந்து தென்துருவத்தில் தரையிறங்கும்.

ஆர்பிட்டரிலிருந்து தனியே பிரியும்போது, நொடிக்கு 100 கி.மீ. வேகத்தில் சென்று-கொண்டிருக்கும் லேண்டர், அடுத்த 15 நிமிடங்களில் தனது வேகத்தை நொடிக்கு 30 கி.மீ. வேகத்துக்கு குறைப்பதே இஸ்ரோ இதுவரை கையாண்டதிலேயே மிகவும் சவாலான காரியமாக இருக்கும்” என்று கூறுகிறார் சிவன்.

மெதுவாகத் தரையிறங்கிய பிறகு, ரோவர் ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலவின் பரப்பை ஆய்வு செய்யத் தொடங்கும். ஆனால், இந்த ரோவர் வாகனம் தனது ஆயுட்காலத்தில் மொத்தமாக 500 மீட்டருக்கு மேலாக நகராது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவிலுள்ள தாதுக்கள் குறித்த ஆராய்ச்சியை ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளும்,  நிலவில் ஏற்படக்கூடிய அதிர்வுகள் குறித்து லேண்டரிலுள்ள கருவிகளும் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதே சூழ்நிலையில், ஆர்பிட்டர் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அதன் வேகத்திலேயே சுற்றிக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

‘சந்திரயான் 2’ திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 603 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், மொத்த திட்ட செலவில் 80 சதவிகிதத்தை நாட்டின் தனியார் நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வடிவமைப்பதற்காக மொத்தம் 375 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதிலும் 60% தொகையை 120 தனியார் நிறுவனங்கள் பகிர்ந்துகொண்டு பங்களித்துள்ளன.

“நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான் 2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சிவன். இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள், புயல்களிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கும், கிராமப்புற இந்தியாவிற்கான ‘பிராட்பேண்ட்’ இணைப்பைக் கொண்டுவருவதற்கும் உதவியதைப் போன்று, நிலவை ஆய்வு செய்யும் ‘சந்திரயான் 2’ திட்டமும் மனிதகுலத்திற்கு உதவும் தகவல்களை வெளிக்கொணரும் என்று எதிர்பார்க்கலாம்.

19
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்27th August 2019
மகிழ்ச்சிச் செய்தி27th August 2019மகிழ்ச்சிச் செய்தி

மற்ற படைப்புகள்

2022_nov_43a
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
9th November 2022 by ஆசிரியர்

எறும்புடா… நெருங்குடா… பார்ப்போம் !

Read More
2020_oct_v8
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

துடுக்குத் தம்பி!

Read More
2023_mar_31
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
4th March 2023 by ஆசிரியர்

உலக நாடுகள் வரிசை : லாவோஸ்

Read More
2019_aug_a14
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_sep_v22
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
31st August 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_apr_v21
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஆறு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p