• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜனநாயகப் பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல்

2019_oct_v8
அக்டோபர் 2019கட்டுரை

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம்  நடுநிலைப் பள்ளியில், ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்குச் சாவடி அமைத்து பள்ளி மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மாணவர்களிடம் விளக்கினார். தேர்தலில் மாணவர் தலைவர், துணைத் தலைவர்,  கல்வி அமைச்சர், வேளாண் அமைச்சர், சுகாதார  அமைச்சர் ஆகிய துறைகளுக்குப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு வாக்குச் சீட்டு முறையில் வாக்களித்தனர். தேர்தலுக்கு வேண்டிய வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வேட்பாளர் பெயர்ப் பட்டியல், கையில் வைக்கும் மை போன்ற ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். வாக்குச்சாவடி அலுவலர்களாகவும் ஆசிரியர்கள் செயல்பட்டனர். ஆசிரியர்களும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுநிலைப் பள்ளி அளவில் மாணவர் பேரவைத் தேர்தல் ஏன்? இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியதாவது:

பொறுப்பு மூலம் பயிற்சி:

சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களிடம் கூறி வியாழன் தோறும் மாத்திரை கொடுக்கும் நிகழ்வு, புதன்கிழமை தோறும் குறுந்தகடு காட்டும் நிகழ்விற்கு மாணவர்களை பொறுப்பாகச் சொல்லி அதனை செயல்படுத்தச் சொன்னேன். அவர்கள் மிக அருமையாக அந்தப் பணிகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டனர். சரியான நேரத்தில் குறிப்பிட்ட ஆசிரியர்கள் விடுமுறையில் இருந்தாலும், அவர்கள் அதனை ஞாபகப்படுத்திச் செயல்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக எங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் மாணவர் பேரவைத் தேர்தல் நிகழ்த்துவது தொடர்பாகக் கலந்துரையாடினேன். அப்போது நாங்கள் மிகவும் யோசனையோடு மாணவர்கள் போட்டியிட ஆர்வமாக இருப்பார்களா? என்கிற சந்தேகத்தை ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களிடம் சொல்லிப் பார்ப்போம், அவர்கள் ஆர்வம் குறைவாக இருந்தால் நாம் வேறு யோசனை செய்து கொள்வோம் என்று முடிவு செய்தோம். மாலை வழிபாட்டுக் கூட்டத்தில் இதுபோன்று தேர்தல் நடத்தி அதன் வாயிலாக மாணவர் தலைவர், துணைத் தலைவர், பிற துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம் என்றுதான் சொன்னேன். ஆச்சரியம் பாருங்கள்! 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் களத்தில் போட்டியிடப் போவதாகச் சொன்னார்கள்.

தேர்தலில் போட்டியிட தொலைநோக்குத் திட்டம்


உடனே ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் துறைகளை முடிவு செய்து அதனை மாணவர்களிடம் அறிவித்தோம். அத்துடன் போட்டியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் துறை தொடர்பான தங்களின் திட்டத்தையும், அதனை பள்ளியில் மாணவர்கள் ஒத்துழைப்புடன் எவ்வாறு செயல்படுத்த உள்ளீர்கள் என்பதனையும் இரண்டு நாள் அவகாசம் கொடுத்து எழுதி எடுத்து வரச் சொன்னேன். இரண்டு நாள்கள் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கழித்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்களில் சுமார் 20 பேர் மட்டுமே எழுதிக் கொண்டு வந்தனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகிய தாங்கள் எவ்வாறு தங்கள் பள்ளியினை பார்த்துக் கொள்வார்கள், எதிர்காலத் திட்டம் என்ன போன்றவற்றை தொலைநோக்குச் சிந்தனையுடன் எழுதி எடுத்து வந்தனர். அதனைப் படித்துப் பார்த்து, அவர்கள் ஆர்வத்தைப் பாராட்டி, நாங்களே அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ற துறையை மாலை வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவித்தோம்.

மாணவ வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தல் :

போட்டியில் உள்ள அனைத்து மாணவ வேட்பாளர்களையும் அனைத்து மாணவர்களின் முன்பாகவும் அவர்களது தொலைநோக்குத் திட்டத்தையும், அவர்கள் பள்ளிக்குச் செய்ய உள்ள பணிகளையும் குறித்து பேசச் சொல்லி வாக்குக் கேட்கச் சொன்னோம். மாணவ வேட்பாளர்களும் அருமையாகச் சொல்லி வாக்குகள் சேகரித்து உள்ளனர்.

மாணவர்களின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதில் அளித்தல் :

மாணவ வேட்பாளர்கள் பள்ளியில் தாங்கள் செயல்படுத்த உள்ள தொலை நோக்குத் திட்டத்தினை அனைத்து மாணவர்கள் முன்பாகவும் எடுத்துரைத்த பின்பு, வாக்களிக்க உள்ள மாணவர்களை கேள்விகள் கேட்கச் செய்து அது தொடர்பான பதில்களைப் பெற்ற பின்பு, யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு எடுக்கச் சொன்னோம். இதனால் மாணவர்களுக்கும் தாங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள நபர் செயல்பாடு உடையவரா என்கிற உண்மையையும், தொலைநோக்குத் திட்டம் உடையவரா என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் :


இன்றைய நிலையில் அவர்களின் பொறுப்புகளை அவர்களே செய்யும்போது அவர்களுக்கு வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சியும், தன்னம்பிக்கையும் வளரும். இதனை ஏற்படுத்துவதே கல்வியின் வெற்றி ஆகும். ஆசிரியர்களும் வாக்கு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கைக்குத் தயார் செய்தல் :

மாணவர் பேரவைத் தேர்தலை ஜனநாயக முறைப்படி வாக்குச் சீட்டு தயார் செய்து, வாக்குப் பெட்டிகளும் தயார் செய்து, அதனைத் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் பார்வையிட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தி, பதவி ஏற்பு நிகழ்வும் நடத்துகிறோம்.

வாக்களித்தது தொடர்பாக மாணவர்களின் கருத்துகள் :

 

எட்டாம் வகுப்பு மாணவி சிரேகா:

“அனைவரும் 18 வயதில்தான் வாக்களிப்பார்கள். நாங்கள் இந்த வயதில் வாக்களித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பிற்காலத்தில் நாங்கள் தேர்தலில் நிற்கும் காலங்களில் இது எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எங்கள் பதவியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்து உள்ளோம்” என்று கூறினார்.

ஏழாம் வகுப்பு ஜோயல்:

“நான் வாக்களிக்கப் போகிறேன் என்று சொன்னதும், எங்கள் வீட்டில் நம்பவில்லை. இன்று வாக்களித்த பிறகு எனது விரலில் மை வைத்து உள்ளது எனக்குப் புதிய அனுபவமாக உள்ளது. வாக்குச் சீட்டில் பெயர் எழுதி அதனை வாக்குப் பெட்டியில் போடும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.கண்டிப்பாக நான் பிற்காலத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவேன். இங்கும் நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

27
கடந்த இதழ் குறுக்கெழத்துப் போட்டி: விடை-பரிசுகள்கடந்த இதழ் குறுக்கெழத்துப் போட்டி: விடை-பரிசுகள்28th September 2019
பிஞ்சு & பிஞ்சு30th September 2019பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2020_feb_a31
கட்டுரைபிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

சாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை!

Read More
2019_oct_v20
அக்டோபர் 2019கதை
30th September 2019 by ஆசிரியர்

படக்கதை – வாடிய வயிற்றைக் கண்டு வாடிய வள்ளலார்!

Read More
2019_sep_a45
கட்டுரைகட்டுரைசெப்டம்பர் 2019
27th August 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
2019_oct_v3
அக்டோபர் 2019பாடல்கள்
26th September 2019 by ஆசிரியர்

உயிர் விளக்கு!

Read More
2020_mar_v45
கட்டுரைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! – ஆமை புகுந்த வீடு உருப்படாதா?

Read More
2019_dec_a24
கட்டுரைடிசம்பர் 2019
27th November 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! : கணவன் பெயரைச் சொல்லக்கூடாது

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p