• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இளம் சாதனையாளர்கள் – தண்ணீரால் இயங்கும் ஊர்தி

2019_oct_v30
அக்டோபர் 2019

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த மாணவர் முருகன், மதுரை அரசு அய்.டி.அய்.யில் 2ஆம் ஆண்டு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார்.

அண்மையில் கோவையில் நடந்த ஹேக்கத்தான் எனும் அறிவியில் நிகழ்ச்சியில் பங்கேற்று, தான் உருவாக்கிய நீரினால் இயங்கும் இரு சக்கர ஊர்தியை அங்கு காட்சிப்படுத்தினார்.

‘தண்ணீர் பைக்’ குறித்து இளம் விஞ்ஞானி முருகன் கூறுகையில், “இரு சக்கர ஊர்தியை ‘ஸ்டார்ட்’ செய்வதற்கு ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பைப் போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்கு ‘சோலார் பேனலுடன்’ கூடிய ‘பேட்டரி’ இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாகப் பிரிந்து வெளியேறி, ஹைட்ரஜன் இன்ஜினுக்குச் சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ தூரம் வரை செல்லலாம்” என்கிறார்.

இதற்கு முன் 2017இல் வேர்க் கடலை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து சிறந்த ‘இளம் விஞ்ஞானி’ விருதை சென்னையில் பெற்றார். மாற்றுத் திறனாளிகளுக்காக ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினார். போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை என ஆதங்கப்படும் முருகன்,

“என்னிடம் இதுபோல பல செயல்முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர முடியும்’’ என்று  வருந்துகிறார். அரசு இவர் போல ஏழ்மையிலும் சாதனை செய்ய முயல்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது கடமையாகும்

– ச.மலர்விழி

வருங்கால விஞ்ஞானி

தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த நித்தியன் ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். அண்மையில் இஸ்ரோ அறிவித்த ‘Space Tourism’ என்னும் தலைப்பில் ஆங்கில கட்டுரைப் போட்டியை நடத்தியது. “சுமார் 200 பேர் இந்தப் போட்டியில் கலந்துகிட்டாங்க. அதில் ஜூனியர் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார்” நித்தியன்.

அதன் பயனாக “ஒரு நாள் முழுக்க குடும்பத்துடன் இஸ்ரோவைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது” என்கிறார் நித்தியனின் தந்தை சவுந்தர்ராஜன்.

“இஸ்ரோவுக்குள்ளே எங்க செல்போனை எல்லாம் வாங்கி வெச்சுட்டாங்க. ராக்கெட்டை எப்படி தயார் செய்வாங்க? அதுக்கு என்னென்ன தேவைன்னு சொன்னாங்க. அங்கே போய்ட்டு வந்ததும், வருங்காலத்தில் ‘சயின்டிஸ்ட்’ ஆகி நிறைய சாதிக்கணும்னு முடிவெடுத்திருக்கேன்” என உணர்வு பொங்கக் கூறினார் நித்தியன். நித்தியனின் லட்சியம் வெற்றி பெற வாழ்த்துவோம் பிஞ்சுகளே

– மகிழ்

29
இசைப்போம் வாரீர்!இசைப்போம் வாரீர்!3rd October 2019
உலக நாடுகள் - பராகுவே (PARAGUAY)3rd October 2019உலக நாடுகள் - பராகுவே (PARAGUAY)

மற்ற படைப்புகள்

2019_oct_v35
அக்டோபர் 2019கட்டுரை
4th October 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்!

Read More
2019_oct_v19
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th September 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_oct_v31
அக்டோபர் 2019அறிவியல்கதை
3rd October 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை – அய்ன்ஸ்ரூலி

Read More
2019_oct_v3
அக்டோபர் 2019பாடல்கள்
26th September 2019 by ஆசிரியர்

உயிர் விளக்கு!

Read More
2019_oct_v4
அக்டோபர் 2019இலக்கணம்
28th September 2019 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2019_oct_v8
அக்டோபர் 2019கட்டுரை
28th September 2019 by ஆசிரியர்

ஜனநாயகப் பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p