• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கோமாளி மாமா-2

2020_feb_a11
கதைகோமாளி மாமாபிப்ரவரி 2020

கதை,ஓவியம் : மு.கலைவாணன்

விடுமுறை நாளான ஞாயிறு மாலையிலேயே மல்லிகா, மாணிக்கம், செல்வம் ஆகிய மூவரும் பூங்காவிற்கு வந்துவிட்டனர். காரணம், கோமாளி மாமா வந்து கதை சொல்வதாக சொல்லி-யிருந்தாரல்லவா…? அதுதான்…!

அழகான வண்ண வண்ண உடையுடன் ஆடி அசைந்து வந்தார் கோமாளி மாமா நல்லதம்பி.

“அடடே…! எனக்கு முன்னேயே வந்துட்டிங்களா? மகிழ்ச்சி!”

“உங்ககிட்ட கதை கேக்குற ஆர்வத்திலே எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும்னு ஆசை ஆசையா காத்துக்கிட்டிருந்தோம் மாமா!” என்றாள் மல்லிகா…

அதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினார்கள் மாணிக்கமும், செல்வமும்.

“நானும் உங்களுக்கு கதை சொல்லணுமேன்னு நிறைய புத்தகங்களைத் தேடிப் படிச்சேன்.”

“அப்ப இதுக்கு முன்னாடி நீங்க சரியா படிக்கலியா மாமா!” என கேலியாகக் கேட்டான் மாணிக்கம்.

“பள்ளிக் கூடத்துல படிக்கிறது மட்டும் படிப்பில்லே… நாம எந்தச் செயல் செய்யிறதா இருந்தாலும் அது தொடர்பா தெரிஞ்சுக்கிறதும், அதில சிறந்து விளங்குறவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறதும்கூட படிப்புதான். வாழ்க்கையில அனுபவப்பட்டுத் தெரிஞ்சுக்கிற ஒவ்வொரு சேதியுமே படிப்புதானே” என்றார் கோமாளி.

“அப்படி நீங்க அனுபவப்பட்டதை, படிச்சு தெரிஞ்சுக்கிட்டதை எங்களுக்கு இப்ப கதையாகச் சொல்லப் போறீங்க… அப்படித்தானே கோமாளி மாமா” என்றான் செல்வம்.

“சரியா சொன்னே செல்வம். அப்படி அனுபவப்பட்டதைத்தான் இப்ப சொல்லப் போறேன். வாங்க! அந்த மரத்து நிழல்ல உக்காந்துக்கலாம்” என்றபடி மரத்தடிக்குச் சென்றார் கோமாளி.

அங்கிருந்த மேடான மரத்து வேர் பகுதியில் கோமாளி அமர்ந்தார். அவரைச் சுற்றி குழந்தைகள்

மூவரும் அமர்ந்தனர். கோமாளி தன் சட்டைப் பையிலிருந்து கூழாங்கல், கிலுகிலுப்பை, சின்ன நாய்க்குட்டி பொம்மை மூன்றையும் எடுத்து வைத்தார். அதைப் பார்த்ததும் மல்லிகா, “கோமாளி மாமா! இது என்ன? ஏதோ கடை போட்டு வியாபாரம் செய்யிற மாதிரி அடுக்குறிங்க”… என்று கேட்டாள்.

“நான் இங்கே வரும்போது இந்தப் பொருளையெல்லாம் தள்ளு வண்டியிலெ வச்சு பாட்டு பாடிக்கிட்டே விற்பனை செய்துக்கிட்டு வந்தாரு ஒரு பெரியவரு”

“பாட்டுப்பாடி வியாபாரமா?” என்றான் செல்வம்

“ஆமா! அவரு ஒரு தத்துவ வியாபாரி!

ஒத்தை ரூபாய்க்கு ஒன்னு -_ பொருளு

ஒத்தை ரூபாய்க்கு ஒன்னு _ இத

மூணு வாங்குனா இலவசமா

தருவேன் தத்துவம் ஒன்னு…

விலையோ ரொம்ப மலிவு _ பொருளை

வாங்குங்க வரும் தெளிவு!

இப்படிப் பாடிக்கிட்டு வந்தாரு. அவருகிட்ட போயி, “நீங்க விக்கிற பொருளைப் பாத்தா சாதாரண பொருளா இருக்கு… ஆனா இதை வாங்குனா தத்துவம் இலவசம்னு வேற சொல்றீங்க. புரியலியே”ன்னு கேட்டேன். அதுக்கு அந்தப் பெரியவரு… “பார்க்க சாதாரணமாத் தெரியுற எல்லாமெ சாதாரணமானதும் இல்லே… பார்க்க அதிசயமாத் தெரியுற எல்லாத்திலேயும் அதிசயமும் இல்லேன்னாரு…

“அதுவும் சரிதான்… இந்தப் பொருளுக்குள்ள என்ன தத்துவம் இருக்கு”ன்னு நான் கேட்டேன்..

“மூனு ரூபா குடுத்து மூனு பொருளை எடுங்க… நாலு தத்துவத்தை நறுக்குன்னு சொல்றேன், நடந்துக்கிட்டே இருங்கன்னு” அந்த வியாபாரி சொன்னாரு. நானும் மூனு ரூபாயைக் கொடுத்தேன். முதல்ல இந்தக் கூழாங்கல்லை எடுத்துக் கொடுத்தாரு… “என்னங்க! கூழாங்கல்லை தர்றீங்களே”ன்னு கேட்டேன். அதுக்கு அந்த வியாபாரி… பறக்காத பொருள் பறக்கிற பொருளை பறக்காமச் செய்யும்”னு சொன்னாரு…

“புரியலியே” என்றான் மாணிக்கம்.

“எனக்கும் புரியல… நான் அந்தத் தத்துவ வியாபாரியை உத்துப் பாத்தேன். அவரு… “என்ன முழிக்கிறீங்க… காகிதம்… காத்துல பறக்குமா பறக்காதா?”ன்னு கேட்டாரு…

நான் “பறக்கும்”னு சொன்னேன்.

“இந்த கல்லு பறக்குமா?”ன்னு கேட்டாரு

“பறக்காது”ன்னு நான் பதில் சொன்னேன்…

“உம்… பறக்காத இந்தக் கல்லை பறக்கிற காகிதத்து மேலே வச்சா காகிதம் காத்துல பறக்குமா?’ன்னாரு… ‘நான் பறக்காது’ன்னு சொல்ல… அவரு, “அதைத்தான் சொன்னேன். பறக்காத பொருள் பறக்கிற பொருளை பறக்காமச் செய்யும்’னு. சரி கூழாங்கல்லுக்கு என்ன தத்துவம்?”ன்னு கேட்டேன்.

“உருளும் கல்லில் பாசி புடிக்காது… இதுதான் தத்துவம்னு சொன்னாரு… இது என்ன தத்துவமா?”ன்னு கேட்டதுக்கு…

“முதல்ல இந்தக் கல்லு எப்படி உருவாகுது தெரியுமா?”ன்னு என்னையே திருப்பிக் கேட்டாரு…

நானு… “ஓடுற ஆத்துத் தண்ணியில அடிபட்டு உருண்டுக்கிட்டே வர்றதுனால இப்படி கூழாங்கல் உருவாகுதுன்னு” பதில் சொன்னேன்.

“அப்படி உருண்டு வர்ற இந்தக் கூழாங்கல்லுல பாசி படியுமா?”ன்னு கேட்டாரு.

“அதெப்படி படியும்? அதுதான் உருண்டுக்கிட்டே இருக்கே… உருளாம ஒரே இடத்தில இருக்கிற கல்லுலதான் பாசி படியும்னு” பதில் சொன்னேன்.

“ஆங்! அதுலதான் இருக்கு தத்துவம். வாழ்க்கையில உருண்டு புரண்டு எப்பவும் உழைச்சிக்கிட்டிருக்கிறவனை வறுமை, கஷ்டங்கிற பாசி புடிக்காது”ன்னு சொன்னாரு…

“அடடே அருமையா சொன்னீங்க… சரி இதுக்கு என்ன தத்துவம்” அப்படின்னு இந்த கிலுகிலுப்பையெ எடுத்து ஆட்டிக் கேட்டேன்.

“இது என்னாது?”ன்னு அந்த தத்துவ வியாபாரி கேட்டாரு.

“இது கிலுகிலுப்பை! இதுகூடவா தெரியாது” என்றான் செல்வம்.

“உம்! இதைத்தான் நானும் சொல்லிட்டு, இதுக்கு… என்ன தத்துவம், அதைச் சொல்லுங்கன்னு கேட்டேன். வெறும் வாய்க்கு அவலு”ன்னு சொன்னாரு.

“என்னாது வெறும் வாய்க்கு அவலா… புரியலியே” என்றாள் மல்லிகா…

“வெறும் வாய் என்ன செய்யும்னு கேட்டாரு வியாபாரி…

நானு சும்மா இருக்கும்னு” சொன்னேன்.

“வாயில கொஞ்சம் அவலைப் போட்டா?” என்றார் வியாபாரி.

“மெல்லும்”னு சொன்னேன்.

“கொஞ்சம் அவல் கிடைச்சா மெல்லுற வாயி மாதிரி, கொஞ்சம் பொடியான கல்லை இதுக்குள்ள போட்டதும் சத்தம் போடுது இந்தக் கிலுகிலுப்பை, உலகத்தில சில பேர் இந்த மாதிரிதான் இருக்காங்க… கொஞ்சம் விஷயம் தெரிஞ்சாலே அலட்டிக்கு-வாங்க”ன்னு சொன்னாரு வியாபாரி.

“அது என்னமோ உண்மைதாங்க மாமா! சரி இந்த நாய் பொம்மைக்கு என்ன தத்துவம்னு கேட்டிங்களா?” என்றான் மாணிக்கம்.

“கேட்டேன்… அதுக்கு குரைக்கிற நாய் கடிக்காது”ன்னு பட்டுன்னு பதில் சொன்னாரு.

“எப்படிங்கன்னு கேட்டதுக்கு… “இந்த நாய் பொம்மையை அழுத்த அழுத்த குரைக்கிற மாதிரி செய்யுதா? ஆனா இது கடிக்குமா?” என்று என்னைப் பாத்தாரு.

நானு… “அதெப்படி கடிக்கும்? இது நாய் பொம்மைங்க” அப்படின்னு பதில் சொன்னேன். அவரு, “அதாவது வள்ளு வள்ளுன்னு குரைக்கிற நாய் கடிக்காது. வேட்டைக்கும் ஆகாதுன்னு சொல்லுவாங்க. அது மாதிரி, ரொம்ப அலட்டிக்கிட்டு வளவளன்னு பெருமை அடிச்சுக்கிறவங்க எந்த வேலைக்கும் சரிப்பட மாட்டாங்க… புரிஞ்சுதா”ன்னு கேட்டாரு.

“கோமாளி மாமா! மூனு ரூபா குடுத்து… மூனு பொருளை வாங்குனதுக்கு முத்தான மூனு தத்துவம் சரி.. ரொம்ப நல்லாயிருக்கு…!

இலவசமா ஒரு தத்துவம் சொல்லுவேன்னு சொன்னாரே, அதைச் சொன்னாரா? அந்தத் தத்துவ வியாபாரி”ன்னு கேட்டான் செல்வம்.

“செல்வம் உன்ன மாதிரித்தான் நானும் நாலாவது தத்துவம் சொல்லுங்கன்னு கேட்டேன்…”

அதுக்கு அந்தப் பெரியவரு… “மூளையில்லாதவன் கையில இருக்கிற காசு மூனு நிமிஷம் கூட நிலைக்காது” என்றார்.

மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் கலகலவெனச் சிரித்தனர். கோமாளியும் அவர்களோடு சேர்ந்து சிரித்தார். “அங்கே புடிச்ச ஓட்டந்தான் இங்கே வந்துட்டேன்” என்றார்.

மாலை மறைந்து இருள் பரவும் நேரமானது. ஆனால், குழந்தைகள் மூவரும் அறிவு வெளிச்சத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர்.

(மீண்டும் வருவார் கோமாளி)

27
சிறுவர் கதை : ப்யூஸ் போன பல்புசிறுவர் கதை : ப்யூஸ் போன பல்பு28th January 2020
தெரிந்தது சூரிய கிரகணம் முறிந்தது மூடநம்பிக்கை28th January 2020தெரிந்தது சூரிய கிரகணம் முறிந்தது மூடநம்பிக்கை

மற்ற படைப்புகள்

2016_may_pinju42
கதை கேளு கதை கேளுமே
4th May 2016 by விழியன்

மகியும் நோவாவும்

Read More
18
கதை
9th March 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? பூத கணங்களை விரட்ட…

Read More
2022_dec_42
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2022
5th December 2022 by விழியன்

அதிசய மலர் கதம்பழகி

Read More
2023_may_16
கதைமே 2023
4th May 2023 by ஆசிரியர்

தொடர் கதை – 5 : நீதிமன்றத்தில் வாதிட்ட பூசணிக்காய்

Read More
2021_dec_v16
கதைடிசம்பர் 2021
29th November 2021 by ஆசிரியர்

படக்கதை : இரும்புத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்!

Read More
2015_aug_pinju4
ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு
12th August 2015 by -மு.கலைவாணன்

ஜாதி நாய்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p