• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குழந்தை வளர்ப்பு : குழந்தைகளைக் கண்டியுங்கள்!

2020_mar_v9
மார்ச் 2020

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டிப்பதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படி கண்டிக்காமல் வளர்ந்தவர்கள்தாம், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா முறைத்தாள்’, ‘அப்பா அடிக்க கையை ஓங்கினார்’ என சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கண்டிப்பை ஏற்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள். தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் கண்டித்துத் திருத்துவது, இயல்பான செயலே! அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்… அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

“குழந்தைகளைத் கண்டித்து வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?’’

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள்? வளரிளம் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே? அவர்கள் கண்டித்துச் சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பது தங்கத்தைப் புடம் போடுவதற்குச் சமம். இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் மிக அதிகமாகவே இருக்கின்றன. அவர்களைக் கொண்டாட வேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள். அதைவிடுத்து, “நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது’’ என இருந்தால், உங்கள் குழந்தைகள் மனதளவில் வலுவில்லாதவர்களாகி  விடுவார்கள்.

“டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளிதழில், ‘அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை; ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்’ என்று நினைத்து ஆரஞ்சு சாற்றில் விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்’ என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து ‘ஏய்!’ என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று ‘பிள்ளை கைமீறிப் போகிறதே’ என்கிற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்கிற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மருத்துவர்  முகிலன்
பேராசிரியர்,
பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,

பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள். தங்கள் தவறுகளால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள். குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

ஒருவரை அனுசரிப்பது,

அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது…

அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..

தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பது…

மற்றவர்களை மன்னிப்பது…

தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்கிற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது…

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும்போதே வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது என்பது எளிதானதல்ல.

எனவே, “அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க’’ என்னும் மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.<

38
திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 202026th February 2020
PREPOSITIONS - முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -1126th February 2020PREPOSITIONS - முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11

மற்ற படைப்புகள்

2020_mar_v54
பாடல்கள்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

Read More
2020_mar_v49
சிறார் கதைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

சிறுவர் கதை : பேராசைக்குக் கிடைத்த சூடு!

Read More
2020_mar_v44
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2020_mar_v47
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_mar_v51
அறிவியல்பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்

Read More
2020_mar_v6
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

திராவிட வாசகர் வட்டம் நடத்தும் – பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p