• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! – ஆமை புகுந்த வீடு உருப்படாதா?

2020_mar_v45
கட்டுரைமார்ச் 2020

சிகரம்

‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்னும் மூடநம்பிக்கை கிராமப்புற மக்களிடையே காணப்படுகிறது. இந்த மூடநம்பிக்கையின் விளைவால், ஆமை புகுந்த வீட்டை விற்கக் கூட முடியாது. காரணம், அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள்.

ஆமை என்பது நிலத்திலும் நீரிலும் வாழும் ஓர் உயிரினம். அதனால் யாருக்கும் எந்தக் கேடும் வராது. பாம்பு, கொசு, பூரான், தேள் போன்றவை கேடு தரக் கூடியவை. ஆனால், அவை வீட்டுக்குள் வந்தால் அந்த வீடு உருப்படாது என்று சொல்லாமல், எந்தத் தீங்கும் செய்யாத ஆமை வந்தால் மட்டும் அந்த வீடு உருப்படாது என்று நம்புவது முட்டாள்தனம் அல்லவா?

அப்படியென்றால் ஆமை புகுந்த வீடு என்பதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

ஆமை என்றதும் நமக்கு கடல் பகுதியும், மீனவர்களும் நினைவுக்கு வரலாம். நெய்தல் நிலப்பகுதியிலிருந்து வந்த சொலவடையோ என்றும் தோன்றலாம்.

ஆனால், பன்னெடுங் காலமகவே, தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள். கடலில் நெடுந்தொலைவு பயணித்து உலகெங்கும் தங்கள் ஆளுமையைச் செலுத்தியவர்கள். அவ்வாறு கடல் பயணம் செய்வதற்கு உகந்த வழிகளை கடலில் காட்டும் வழிகாட்டிகள் கடல் ஆமைகள். எனவே, மீனவர்களுக்கும், கடலோடிகளுக்கும் ஆமைகள் மதிப்புக்குரிய உயிர்கள்.

பிறகு எப்படி இந்தச் சொல்லாடல் உருவாகியிருக்கலாம் என்று யோசித்தால், நிலப் பகுதிகளிலும், ஏரி, குளங்களிலும் ஆமைகள் உண்டு. இவை நிலத்தாமை எனப்படுபவை. இவை நிலத்தைத் துளைத்து உள் சென்று முட்டையிட்டு வசிக்குமாம். ஓரிடத்தில் ஆமை புகுந்தால் அங்கேயே வாழத் தலைப்பட்டு விடுமாம். இதனை அங்கிருந்து விரட்டுவது கடினமாக அன்றைக்கு இருந்தது என்றும், அதனால் நிலப் பகுதிகளில் இந்தச் சொலவடை உருவாகியிருக்கலாம் என்றும் சொல்கிறார் ஆய்வாளர் ஒரிசா பாலு. இன்று ஏரி, குளங்களையெல்லாம் அழித்து, மனிதர்கள் வீடுகள் கட்டிய பிறகு, தங்கள் இருப்பிடங்கள் ஒழிக்கப்பட்டதால் “மனிதர்கள் புகுந்த பகுதி உருப்படாது’’ என்று ஆமைகள் சொன்னால்… அது சரியாக இருக்கும். ஆமைக் கறியை மனிதன் சாப்பிடுகிறான். ஆமை புகுந்த மனிதனே நன்றாக இருக்கும்போது, வீடு உருப்படாது என்பது மூடத்தனமல்லவா?

ஆனால், உண்மையில் மனிதனை உருப்பட விடாமல் செய்யும் சில ஆமைகள் உண்டு. அவை, பொறாமை, கல்லாமை, இயலாமை, முயலாமை போன்றவை. பொறாமை உடையவன் அடுத்தவர் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் வயிறு எரிவான், கவலைப்படுவான். மாறாக, தான் முன்னேற முயற்சி மேற்கொள்ள மாட்டான். இப்படிப்பட்டவன் உருப்படவேமாட்டான்.

அதேபோல் கல்லாதவன், முயற்சி செய்யாதவன், எதையும் செய்யும் திறனில்லாதவன் உருப்பட மாட்டான். ஆக, இந்த ஆமைகள் நுழைந்த வீடு  அதாவது, பொறாமை, இயலாமை, கல்லாமை, முயலாமை ஒரு வீட்டில் உள்ளவர்கள் உள்ளத்தில் நுழைந்தால் அந்த வீடு உருப்படாது என்று வேண்டுமானால் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஒப்பிலியப்பன் என்பது ஒரு கடவுளின் பெயர். அதாவது, அந்தக் கடவுள் ஒப்பில்லாதவர் என்பது  அதற்குப் பொருள். ஆனால், ஒப்பிலியப்பன் என்பது நாளடைவில் உப்பிலியப்பன் என்றாகி, உப்பு இல்லாத உணவுகளை அந்தக் கடவுளுக்குப் படைக்கத் தொடங்கி, அப்படியே படைத்தும் வருகின்றனர்.

போகி என்பது இந்திரன் பெயர். மழையைத் தருபவன் இந்திரன் என்பதால் மழைப் பண்டிகையைப் போகிப் பண்டிகை என்றனர். ஆனால், நாளடைவில் போகி என்பதற்கு போக்கி என்று பொருள் கொள்ளப்பட்டு, அன்று வீட்டில் உள்ள பழையவற்றைப் போக்குதல் என்று எண்ணி பழைய பொருள்களைக் கொளுத்துகின்றனர். இவை போலத்தான் ஆமை புகுந்த வீடு என்னும் மூடநம்பிக்கையும் வந்துள்ளது. எனவே, ஆமை புகுவதால் மட்டும் அல்ல; ஆமையை வளர்த்தால்கூட அந்த வீடு கெட்டுப் போகாது. இதுவே உண்மை!

ஆசிரியரின் வாழ்த்து பிஞ்சுகளின் பிரச்சாரம்

வெள்ளக்கோவிலில், ஜனவரி 1 அன்று ஆசிரியர் தாத்தா அவர்கள் வழங்கிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பெரியார் பிஞ்சுகள் சாலையில் வடித்து அறிவியல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளக்கோவில் ஒன்றியப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சு.சிவகுமார்_புனிதா ஆகியோரின் மகள், பெரியார் பிஞ்சு பழகு முகாமில் பயிற்சி பெற்ற “பெரியார் பிஞ்சு’’ செந்தமிழரசி அவர்கள் தலைமையில், பெரியார் பிஞ்சுகள் அகில், தனின், வினிஸ் ஆகியோர் “2020ஆம் புத்தாண்டு அறிவியல் புத்தாண்டாக மலரட்டும்’’ என்று சாலைகளில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரியார் பிஞ்சுகளின் இந்த முயற்சியை அப்பகுதியிலுள்ள பலரும் பாராட்டி ஊக்குவித்தனர்.<

49
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு27th February 2020
சிறுவர் கதை : பேராசைக்குக் கிடைத்த சூடு!27th February 2020சிறுவர் கதை : பேராசைக்குக் கிடைத்த சூடு!

மற்ற படைப்புகள்

2020_mar_v51
அறிவியல்பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்

Read More
2020_mar_v33
கதைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

படக்கதை: ஊடுருவிப் பார்த்த ரோண்ட்ஜன்

Read More
13
கட்டுரைஜுன் 2024பழகுமுகாம்பிஞ்சு 2024
5th June 2024 by உடுமலை

இதுதான் பழகுமுகாமின் சிறப்பு!

Read More
2020_mar_v45
கட்டுரைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! – ஆமை புகுந்த வீடு உருப்படாதா?

Read More
29
2024கட்டுரைஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by அருண் பகத்

பரிணாமம் – கற்கருவிகளைப் பயன்படுத்தும் காப்பசீன் குரங்குகள்!

Read More
2020_mar_v44
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p