• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020

பெரியார் பிஞ்சுகளின் கடிதம்

அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு,

உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம் அறிய ஆவல். கரோனா தொற்று நோய் காரணமாக அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக எங்களுக்கு கிடைத்துள்ள விடுமுறைக் காலத்தை நாங்கள் பயனுள்ள வகையில் செலவிடுகிறோம் தாத்தா.

நீங்கள் கலந்துகொண்ட மாநாடுகள் மற்றும் கழக நிகழ்ச்சிகளில் எங்கள் பெற்றோரோடு கலந்துகொண்ட நாங்கள் உங்கள் உரைகளை ஆர்வமாகக் கேட்டிருக் கிறோம். அதில் எங்களுக்கு பிடித்தது, பெரியார் தாத்தா வின் கொள்கைகளில் “மனிதன் தானாகவும் பிறக்க வில்லை, மனிதன் தனக்காகவும் பிறக்கவில்லை”,

“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு”

“கடவுளை மற மனிதனை நினை” போன்றவற்றை தாங்கள் சொல்லும்போது கேட்டதாகும்.

பெரியார் தாத்தாவை பார்த்திராத எங்கள் பெற்றோரும், நாங்களும் மனிதனை மனிதனாக வாழச் செய்யும் பெரியார் கொள்கைகளை ஏற்று, நடப் பது மற்றும் பரப்புவதற்கு காரணம் பெரியாரை எங்களிடம் சேர்த்திட்ட நீங்கள்தான் தாத்தா.

எங்களுக்கும் உங்களைப்போல் உலகம் அறிந்த மனிதராக வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்குக் காரணமான வழிகளை நாங்கள் உங்களை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, உங்களின் வெற் றிக்கான காரணமாக நாங்கள் கண்டது “தந்தை பெரியார் கொள்கையை முழுமையாக, உண்மையாகப் பின்பற்றுவது” ஆகும்.

ஆகவே எதிர்காலத்தில் நாங்களும் கல்வி அறிவுடன் மனிதனாக வாழ தந்தை பெரியார் கொள்கையையும் ஏற்று நடப்பதே என்று முடிவு செய்து பயணிக்கிறோம் தாத்தா. அந்த வகையில் கிடைத்துள்ள விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, நம்முடைய இதழான விடுதலை எங்கள் ஊருக்கு காலை 7 மணிக்கு வந்துவிடும். ஒருவர் ஒருவராக தங்களின் அறிக்கை, தலையங்கம், வாழ்வியல் சிந்தனைகள் ஆகியவற்றை சத்தமாக படித்து மற்றவர்கள் கேட்டறிவது. காலை உண விற்கு பிறகு வீட்டுக்குள்ளேயே சில விளையாட்டுகளை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது பணிகள், மதிய உணவிற்கு பிறகு மாலை நாங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவது.  போட்டி தேர்வு களில் பெரியார் 1000 (ஒரு நாளைக்கு 50 வினாக்கள்) கணித அடிப்படைச் செயல்கள், பொது அறிவு, ஓவியம் வரைதல், தமிழ் ஆங்கிலம் சொற்றொடர்கள் எழுது வது, தமிழ் ஆங்கிலம் இலக்கணம் அறிதல் ஆகியவை அடங்கும். மாலை 5 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள இடத்தில் இறகுப்பந்து, கபடி, கைப்பந்து போன்றவற்றை விளையாடுவோம்.

மாலை 6 மணி அளவில் youtube-இல் பார்த்து சிற்றுண்டி செய்து அனைவருக்கும் கொடுத்து நாங்க ளும் சாப்பிடுவோம் தாத்தா. இரவு 7 மணிக்கு போட்டித் தேர்வுகளை எழுதி, நடுவர்களாக உள்ளவர்களால் திருத்தப்பட்டு முதல் பரிசு வரை அனைவரும் பெறு வோம் தாத்தா.

போட்டித் தேர்வுக்கு நாங்கள் தயார் ஆகும் போது உங்களுடைய தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழி யான, “நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்பது எங்களைத் தயார்படுத்தும் என்பது மிகை யல்ல தாத்தா. இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு உறங்கச் செல்வோம் தாத்தா. தந்தை பெரியாரை எங்களிடம் சேர்த்த உங்களுக்கு நன்றி தாத்தா. வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கையை ஏற்று உறுதியுடன் வாழ்வோம்.

தங்கள் உண்மையுள்ள பேரக்குழந்தைகள் ஜெ.ஜெ.கவின், 12ஆம் வகுப்பு

செ.சி.காவியன், 10ஆம் வகுப்பு

ஜெ.ஜெ.காவியா, 9ஆம் வகுப்பு

க.செ.கபிலன், 9ஆம் வகுப்பு

க.செ.கவுசல்யா,  7ஆம் வகுப்பு,

செ.சி.கண்மணி, 7ஆம் வகுப்பு

அ.வெ.கயல், கண்ணந்தங்குடி கீழையூர்,

ஒரத்தநாடு ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்

“நீங்கள் ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்?” என்று சுவைபட எழுதுங்கள் –  பெரியார் பிஞ்சுக்கு அனுப்புங்கள்!

24
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்9th May 2020
உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை9th May 2020உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை

மற்ற படைப்புகள்

2022_sep_17
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
7th September 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2023_June_26
ஜூன் 2023பிஞ்சுகள் பக்கம்
10th June 2023 by ஆசிரியர்

“பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்” உங்கள் ஊரில்?

Read More
2021_jul_v34
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_sep_3a
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th September 2022 by ஆசிரியர்

சமூகநீதி நாள் உறுதிமொழி

Read More
13
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

எந்தக் கடவுள்?

Read More
2022_dec_36
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

மருத்துவக் குறிப்பா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p