• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வைரலான பெரியார் பிஞ்சு!

2020_jun_v25
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்

உடுமலை

‘என்பார்வையில் பெரியார்!’ என்ற தலைப்பில் 5 வயது பெரியார் பிஞ்சு சித்தார்த்தன் பேசிய காணொலி, அதன் கருத்துக்காகவும், அப்பிஞ்சின் உடல்மொழிக்காவும் வைரலாகி வருகிறது.

இந்தக் காணொலி உருவானதே ஒரு சுவையான நிகழ்வு. திருவெறும்பூர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டமும், பாரத மிகுமின் நிறுவனத் தோழர்களும் இணைந்து, 2 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “என் பார்வையில் பெரியார்” என்ற தலைப்பிலும், 6 லிருந்து 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “பெரியார் பேணிய மனிதநேயம்” தலைப்பிலும் பேச்சுப் போட்டியை அறிவித்தனர். 170 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் சித்தர்த்தனும் ஒருவர். ஆனால், அவன் இந்த இரண்டு பிரிவுகளிலுமே கலந்துகொள்ள முடியாது. காரணம், இனிமேல்தான் சித்தார்த்தன் முதல் வகுப்பே செல்லப்போகிறார். அவனுடைய அம்மா நாத்திகா, “சும்மா ஒரு அனுபவத்திற்காகவாவது பேசட்டும்” என்று வேண்டுகோள் வைக்க, ஒருங்கிணைப்-பாளர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பயிற்சி எடுக்க அவர் பேசிப் பார்த்த பேச்சுதான், இன்று உலக அளவில்  வைரலாகி வருகிறது.

சித்தார்த்தனுக்கு தமிழ்மொழியில் பேசவும், படிக்கவும் மிகவும் பிடிக்கும். இதற்காகவே அவரை தற்போது படித்துவரும் விமானப்படைப் பள்ளியிலிருந்து விலகி, தஞ்சை யாகப்பா பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். காரணம், முதலில் படித்த விமானப் படைப் பள்ளியில் ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டும்தான். இந்த 5 வயதுப் பிஞ்சு “தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளியில், தமிழ் ஏன் இல்லை?” என்று வகுப்பாசிரியரிடமே கேட்டாராம்! வகுப்பாசிரியர் என்ன சொல்லமுடியும்! வேறு வழி? பிள்ளையின் ஆர்வத்தை மதித்த பெற்றோர், பள்ளிக்கூடத்தையே  மாற்றிவிட்டனர். பழைய பள்ளியில் நடக்கும் போட்டிகளில் கலந்து-கொள்ளும் போது, ஆங்கிலத்தில் பேசிவிட்டாலும், அம்மா, இதையே தமிழில் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாகப் பேசியிருப்பேன்” என்பாராம். அப்படியும் ஏராளாமான பரிசுகளை வென்றிருக்கிறார்.

பெரியார் பெருந்தொண்டர் லால்குடி இ.ச.இராவணன் (தேவசகாயம்) குடும்பத்தாரின் 4 ஆம் தலைமுறையும், இலால்குடி மாவட்ட திராவிடர்கழகத் தலைவர் வால்டேர் அவர்களின் பெயரனும் ஆவார் நம் சித்தார்த்தன். பெற்றோர் அமிர்தகணேஷ், நாத்திகா ஆவர். அர்மெடா இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேசன் நிறுவனத்தை நடத்திவரும் அமிர்த கணேஷ் 600-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். சித்தார்த்தனும் எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர் ஆகவேண்டும் என்கிறார்.

சித்தார்த்தனின் பேச்சு பெரியார் வலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட, நம் ஆசிரியர் வீரமணி தாத்தா, அச் சிறுவனின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டிப் பேசியுள்ளார். அமெரிக்க மருத்துவர் சோம.இளங்கோவன், சித்தார்த்தனைப் பாராட்டி ரூ.1000 பரிசு வழங்கினார்.

என் பார்வையில் பெரியார்! என்ற தலைப்பில் சித்தர்த்தன் பேசியிருந்தாலும், அந்தக் காணொலியைப் பார்க்கிறவர்களுக்கு, ‘ஒரு குழந்தையின் பார்வையில் பெரியார்!’ என்ற தலைப்புதான் சரியானது என்று தோன்றும். <

29
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு4th June 2020
உலக நாடுகள் : எரித்திரியா (Eritrea)4th June 2020உலக நாடுகள் : எரித்திரியா (Eritrea)

மற்ற படைப்புகள்

2022_sep_7
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th September 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள்

Read More
கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
21st July 2022 by சந்தோஷ்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (Philippines)

Read More
2022_dec_5
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்

Read More
2022_jan_v45
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
6th January 2022 by ஆசிரியர்

WOMEN EMPOWERMENT

Read More
11
கதைஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?

Read More
2022_August_9
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p