• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்)

2020_jun_v31
இலக்கணம்ஜூன் 2020

கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்…

சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா?

சார்பு இணைப்புச் சொற்கள் [Sub-Ordinate Conjunctions]

[DEPENDENT SENTENCE],  [INDEPENDENT SENTENCE] ஆகிய இரண்டு வகைச் சொற்றொடர்களை இணைக்கும் சொற்கள்தான் சார்பு இணைப்புச்சொற்கள் [Sub-Ordinate Conjunctions]

DEPENDENT என்றால் சார்ந்திருப்பது… (சிறு வயதில் பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தை போல)

INDEPENDENT
என்றால் சாராமல் இருப்பது… (பெரியவர்களான பிறகு, பெற்றோரைச் சாராது இருப்போமல்லவா? அதைப்போல]

இவை இணைந்து புதிய சொற்றொடரை உருவாக்குகின்றன.

எடுத்துக்காட்டாக இரண்டு சொற்றொடர்களை எடுத்துக்கொள்வோம்.

1. “பூச்செடி நன்றாக வளர்ந்தது’’

“The flower plant grows up’’

2. “மகிழன் பூச்செடிக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றினான்’’

“Magizhan poured water to the flower plant daily’’

மேலே கண்ட இரண்டு சொற்றொடர்களில்..

முதல் சொற்றொடருக்குக் காரணம் [சார்பு] எதுவும் தேவையில்லை. [தனித்த சொற்றொடர் அதாவது INDEPENDENT SENTENCE].

இரண்டாவது சொற்றொடருக்கு காரணம் [சார்பு] தேவை. அதாவது, “காரணம் என்ன?’’ என்ற கேள்வியுடன், சார்ந்து பொருள் தரும் ஒரு சொற்றொடர் [DEPENDENT SENTENCE].

மேற்சொன்ன இரண்டு சொற்றொடரையும் எப்படி இணைப்பது? எந்த இணைப்புச்சொல் [Conjunction] போட்டால் சரிவரும்? “BECAUSE’’ அதாவது “காரணத்தால்’’ என்ற சார்பு இணைப்புச்சொல் [Sub-ordinate Conjunction] கொண்டு இணைக்கலாமல்லவா!

தமிழில்…

பெரும்பாலும், சார்ந்து இருக்கும் சொற்றொடரின் கடைசியில் தான் சார்பு இணைப்புச்சொல்[Sub-ordinate conjunctios] வரும். [விதி விலக்கும் உண்டு] ஆனால் பொருள் மாறாது. பாருங்கள்….

“மகிழன் பூச்செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றிய காரணத்தால்,

பூச்செடி நன்றாக வளர்ந்தது’’

ஆங்கிலத்தில்….

சார்ந்து இருக்கும் சொற்றொடரின் [DEPENDENT SENTENCE] முன்புறம்தான் சார்பு இணைப்புச்சொல் [Sub-ordinate Conjunction] வரும்.

Because Magizhan poured water to the flower plant daily, The flower plant grows up.

OR [அதையே மாற்றியும் எழுதலாம்]

The flower plant grows up because Magizhan poured water to the flower plant daily. என்றும் சொல்லலாம்.

சரி… எந்ததெந்த இணைப்புச் சொற்களை சார்பு இணைப்புச்சொற்கள் [Sub-ordinate Conjunctions] என்று சொல்லுவோம்? இங்கே…

“A WHITE BUS’’  என்று ஆங்கில சுருக்க முறையில்… நினைவில் வைத்துக்கொள்வோம்.

A WHITE BUS

A=ALTHOUGH, AS LONG AS

W=WHENEVER, WHILE, WHEN

H=HOWEVER, HENCE

I=IF, INSPITE OF,

T=THOUGH,

E=EVEN IF, EVEN THOUGH

B=BECAUSE,

U=UNLESS, UNTIL

S=SINCE

குறிப்பு: இவை தவிரவும் இன்னும் நிறைய சார்பு இணைப்புச்சொற்கள்[Sub-ordinate Conjunction]  உள்ளன. இப்போது சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

Although Anitha ha got more Marks in 12th standard, she could not become a Doctor.

அனிதா பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், அவரால் மருத்துவர் ஆக முடியவில்லை.

As long as Sundar, the Doctor is in our area, we need not to think about the illness.

எங்கள் பகுதியில் சுந்தர் மருத்துவராக இருக்கும் வரை. நாங்கள் எந்த நோயைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை.

Whenever Anitha got tired in reading, She thought about her family situation and studied well.

எப்போதெல்லாம் அனிதா படிக்கும்போது சோர்வடைகிறாரோ, (அப்போது) அவர் தன் குடும்ப நிலை உணர்ந்து படித்தார்.

When I was in Madurai, I went to see Thirumalai nayakker mahal.

நான் மதுரையிலிருந்தபோது, (நான்) திருமலை நாயக்கர் மகாலை பார்க்கப் போனேன்.

He is poor, however he is mindly rich.

அவர் ஏழையாக இருக்கிறார். எனினும் அவர் மனதளவில் பணக்காரராக இருக்கிறார்.

If you like to achieve your goal, you should believe yourself.

நீ சாதிக்க விரும்பினால் நீ உன்னை நம்ப வேண்டும்.

In spite of being small matter, you must take a note.

சிறிய விவரமாக இருந்த போதிலும், ஒரு குறிப்பெடுத்துக்கொள்.

Though he was a Police man, he apologised to me.

அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்த போதிலும், அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

Even if it is a big problem, Face the problem with fear.

அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட, அந்தப் பிரச்சினையைப் பயத்துடனேயே எதிர்கொள்ளுங்கள்.

He could become a singer, because he practiced well.

அவர் ஒரு மிகப்பெரிய பாடகர் ஆக முடிந்தது. காரணம் அவர் தகுந்த பயிற்சியை மேற்கொண்டான்.

Unless you leave the bad friendship, you cannot succeed.

கெட்ட நண்பர்களை விட்டு விலகாவிடில், நீ வெற்றி பெற முடியாது.

Until you get up earlier, you can plan a full day.

காலையில் சீக்கிரம் எழும் வரை, உன்னால் ஒரு முழு நாளைத் திட்டமிட முடியும்.

Since he is sincere, he can read 7 books in one week.

அவர் மிகவும் கருத்தூன்றி இருக்கிறபடியால், ஏழு புத்தகங்களை ஏழு நாள்களில் படித்து முடிக்க முடிகிறது.

(மீண்டும் இணைவோம்)

27
உலக நாடுகள் : எரித்திரியா (Eritrea)உலக நாடுகள் : எரித்திரியா (Eritrea)4th June 2020
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!4th June 2020எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2021_feb_v10
இலக்கணம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் : DEGREES OF COMPARISION (ஒப்பீட்டு நிலைகள்) பகுதி – 21

Read More
இலக்கணம்ஜூன் 2022
31st May 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2020_jul_v11
இலக்கணம்ஜூலை 2020
30th July 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) – 15

Read More
2020_dec_v28
இலக்கணம்டிசம்பர் 2020
31st December 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON – 19 (ஓப்பீட்டு நிலைகள்)

Read More
2021_apr_v10
இலக்கணம்ஏப்ரல் 2021
29th March 2021 by ஆசிரியர்

நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech

Read More
2020_jun_v8
கதைகதை கேளு கதை கேளுஜூன் 2020
4th June 2020 by விழியன்

பசிக்குமில்ல

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • மூளையிலிருந்து நேரடியாக
    18th November 2025
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p