• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?

2020_aug_v34
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்

சிகரம்

மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மடமைகளில் பலி கொடுத்தல் என்பது முதன்மையானது. ஆடு, மாடு, கோழிகளைப் பலிகொடுப்பதோடு நில்லாமல் மனிதர்களையே பலிகொடுக்கும் கொடூரம் அவ்வப்போது நிகழ்கிறது.

அண்மையில், புதையல் கிடைக்கும் என்ற ஆசையில், தான் பெற்ற குழந்தையையே பலி கொடுக்க முயன்ற ஒரு தந்தையைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பூனைக்குட்டியைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று மந்திரவாதி சொல்ல, பூனைக்குட்டியைப் பிடித்து வந்தனர். பலிகொடுக்க முயன்றபோது அப்பூனைக்குட்டி ஓடிவிட்டது.

உடனே மந்திரவாதி குழந்தையைப் பலிகொடுத்துவிடலாம் என்று கூற, தந்தையும் தன் பிள்ளையைப் பலி கொடுக்கச் சம்மதித்து குழந்தையைத் தூக்கி வருகின்றான். இதையறிந்த தாய் அழுது ஊரைக் கூட்ட, ஊரார் வந்து குழந்தையைக் காப்பாற்றினர். தந்தையையும், மந்திரவாதியையும் கைது செய்தனர்.

இவ்வளவு அறிவியல் வளர்ந்து, பகுத்தறிவு பரப்பப்பட்ட நிலையிலும் இப்படிப்பட்ட அறியாமை, மூடநம்பிக்கை இருப்பது நாமெல்லாம் வெட்கப்படவேண்டிய ஒன்றாகும்.

புதையல் என்பது, தானே பூமியிலிருந்து வருவது இல்லை. யாரோ, ஒரு காலத்தில் பூமியில் புதைத்து வைத்தது தான், நாம் தற்செயலாய்த் தோண்டும்போது கிடைக்கிறது.

உண்மை இப்படியிருக்க பிள்ளையைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று நம்பி, பிள்ளையைப் பலி கொடுக்க முயன்றது எவ்வளவு மோசமான மூடத்தனம்! பலி கொடுத்தலில் பூமிக்குப் புதையல் எப்படி வரும்?

சிலர் வியாபாரம் சிறப்பாக நடக்க, காரியம் நிறைவேறப் பலி கொடுக்கின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகளைப் பலி கொடுக்கின்றனர். பலி கொடுப்பதால் கடவுள் மகிழ்ந்து இவர்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புகின்றனர். இது மூடத்தனம் மட்டுமல்ல, இவர்கள் நம்பும் கடவுளை இவர்களே கேவலப்படுத்தும் செயலாகும்.

அன்பே வடிவமானது கடவுள்; கருணையின் உருவமே கடவுள் என்று சொல்லிவிட்டு, கடவுள் குழந்தைகளைப் பலி கேட்கிறது என்பது கடவுளைக் கொச்சைப்படுத்தும் செயல் அல்லவா?

இதுவரை பலிகொடுத்தவர்களுக்கு ஏதாவது பயன் கிடைத்ததா என்று பார்த்தால் எந்தப் பயனும் கிடைத்ததில்லை. மாறாக, பலி கொடுத்தவர்கள் காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு வாழ்நாள் முழுக்கத் தண்டனை பெற்றதே உண்மை! எனவே பலிகொடுப்பது பக்தியல்ல; அது ஒரு கொலைக் குற்றம்! அத்தகைய சூழல்களில் சிக்காமல் குழந்தைகளும் எச்சரிக்கையாக இருக்க நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடவுளுக்குப் பாலாபிஷேகம் செய்தால் கொரோனா விலகிவிடுமா?

கொரோனாவுக்குப் பயந்து கடவுள் சிலைக்கே முகக்கவசம் அணிவித்து, கோயில்களையே சாத்தியுள்ள நிலையில், மந்திரம் சொன்னால் கொரோனா நீங்கிவிடும் என்று சிலர் சொல்வதும்; கடவுளுக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்வதும் அறியாமையின் உச்சம் அல்லவா?

மூடநம்பிக்கைக்கு ஓர் அளவு வேண்டாமா? கடவுள் இல்லை என்று கொரோனா கூறி பல மாதங்கள் ஆகிவிட்டன. அப்படியிருக்க, கடவுள் கொரோனாவைத் தடுக்கும், விரட்டும் என்பது மூளைக்கு ஒவ்வாத சிந்தனையல்லவா?

கடவுள் தடுக்கும், மந்திரம் தடுக்கும் என்றால் கொரோனா வந்தால் மருத்துவமனைக்கு ஏன் செல்ல வேண்டும்? கோயில் அர்ச்சகருக்கே கொரோனா வந்தால் மருத்துவமனைக்குத்தானே செல்கிறார்.

ஆக, அறிவுக்கு அறவே பொருந்தாத நம்பிக்கைகளுடன், கண்மூடித்தனமாய் கடவுளுக்குப் பாலாபிஷேகம் செய்வதை விட்டுவிட்டு, அந்தப்பாலை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுப்பதே சரியானது ஆகும்.<

25
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு1st September 2020
கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா?1st September 2020கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா?

மற்ற படைப்புகள்

2020_aug_v3
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

உயிர்மை!

Read More
2021_feb_v27
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_may_m30
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

எண்களுக்கு ஏற்ப வண்ணந் தீட்டுக!

Read More
2022_feb_v9
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_oct_6
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

Read More
2020_jul_v39
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p