• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவோம்: தடுப்புசி-360

2020_aug_v37
ஆகஸ்ட் 2020

ஹய்யா லீவ்! என்பது போய் அய்யய்யோ லீவ் என்ற நிலைக்கு வந்துட்டோம். எல்லாத்துக்கும் காரணம் கொரோனா. ஒவ்வொரு கொள்ளை நோய்க்கும் தடுப்பூசி இருக்கு. அப்போ, கொரோனாவுக்கு??? அதனால்தான் இந்த கோவிட் – 19 எனப்படும் கொரோனா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பந்தயத்தில் உலக நாடுகள் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வாங்க கொஞ்சம் தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்வோம்.

தடுப்பூசின்னா வெறும் ஊசியில்லை. அதில் வைரஸ் இருக்கும். அட ஆமாப்பா. ஆனால் செயல் இழக்கச்செய்யப்பட்ட வைரஸ் அல்லது தீங்கு விளைவிக்காத வைரஸின் குணாதிசயங்களைக் கொண்ட ஸ்டார்ச் போன்றவை இருக்கும். நம்ம உடலில் நம்மைக் காக்க ஒரு தனி இராணுவமே இருக்கு. ஏதாச்சும் கெடுதல் விளைவிக்கும் கிருமி உடலில் புகுந்தால் இராணுவ வீரர்கள் அதான் வெள்ளை அணுக்கள் -சில ஆண்டிபாடிகளை வெளியிட்டு அந்த கிருமியை அழித்துவிடும். ஒவ்வொரு கிருமிக்கும் ஒவ்வொரு ஆன்டிபாடியை வெளியிடும். எந்த கிருமிக்கு எந்த ஆன்டிபாடியை வெளியிட்டோம் என்பதை நமது மூளை நினைவில் வைத்துக்கொள்ளும். மறுபடியும் அந்த கிருமி உடலுக்குள் புகுந்தால் முன்பு வெளியிட்ட ஆன்டிபாடியை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் வெளியிடும்.

தடுப்பூசிகளில் டாக்ஸாய்டு (ஜிஷீஜ்ஷீவீபீ) போன்று பல வகைகள் உண்டு.

கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றால்

5 சோதனைகளை தாண்டவேண்டும். முதலில் ஆய்வகத்தில் மிருகங்களிடம் தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்தப்படும். மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையில் மொத்த மூன்று கட்டங்கள். முதல் கட்டத்தில் ஒரு சிறிய குழுவிற்குத் தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்த தடுப்பூசி அனைவருக்கும் உகந்ததா என்று பரிசோதிக்கப்படுகிறது. இந்த

4 சோதனைகளின் முடிவுகளை மருந்துவக்குழு ஒன்று ஆராய்ந்து அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் தரும்.

கோவிட் – 19 நோய்க்கு இதுவரை 165 தடுப்பூசிகளுக்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 27 தடுப்பூசிகள் 2,3 ஆம் கட்ட ஆய்வில் இருக்கின்றன. அமெரிக்காவின் மாடர்னா (Moderna) எனப்படும் கோவிட் – 19க்கான தடுப்பூசிதான் முதன்முதலில் 2 ஆம் கட்ட சோதனைக்குட்பட்டது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கோவிட் – 19க்கு AZO1222 எனும் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக உயர்த்துகிறது. உலகளவில் இந்தத் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவிலும் கோவிட் – 19 நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 3 ஆம் கட்ட ஆய்வில் உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு கோவாக்சின் (Covaxin) என்று பெயரிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வெற்றிகரமாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துவிட்டார். இருந்தாலும் அதை இன்னும் சோதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து, பரிசோதனைகளைத் தாண்டி. மக்களின் பயன்பாட்டுக்கு வர சுமார் 2-4 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த கோவிட் – 19க்கு அடுத்த ஆண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அதுவே அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.

தடுப்பூசி நிச்சயம் கண்டுபிடிக்கப்படும். ஆனால், அதுவரை? வெளியே செல்லாமல் இருப்போம். கட்டாயமாக செல்ல வேண்டும் என்ற நிலை வந்தால், முகக்கவசம் அணிவது அவசியம். தனி மனித இடைவெளியைக் கடைபிடித்துக் கொண்டு அடிக்கடிக் கையை சோப் போட்டுக் கழுவுவோம். வீட்டிலிருப்போம்.  விலகியிருப்போம். கொரோனாவை வெல்வோம்.

24
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!1st September 2020
அறிவியல்: செயற்கைக் கோளின் வெளிப்புறத்தில் தங்கமா? நமது குரலைக் கேட்கும் வேற்றுலக உயிரினங்கள்1st September 2020அறிவியல்: செயற்கைக் கோளின் வெளிப்புறத்தில் தங்கமா? நமது குரலைக் கேட்கும் வேற்றுலக உயிரினங்கள்

மற்ற படைப்புகள்

2020_aug_v34
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?

Read More
2020_aug_v16
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2020_aug_v42
ஆகஸ்ட் 2020இலக்கணம்
1st September 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] – 16

Read More
2020_aug_v30
ஆகஸ்ட் 2020சுடோகு
1st September 2020 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2020_aug_v13
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_aug_v4
ஆகஸ்ட் 2020பாசத்திற்குரிய பேத்தி
31st August 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: தாத்தாவின் சீட்டா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p