• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தைக்காத சட்டை!

2020_aug_v41
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்

நெய்யும் எந்தத் துணியும் இல்லா

நேர்த்தி யான சட்டை!

மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே

மிளிர்வ தான சட்டை!

பொய்யும் இல்லை புழுதி மண்ணும்

புரண்டி டாத சட்டை!

அய்யம் இல்லை சலவை செய்தும்

அணிந்தி டாத சட்டை!

வெய்யில் தன்னில் புழுங்கி வெந்தும்

வியர்க்க விடாச் சட்டை!

பெய்யும் வன்மைப் பனியில் நொந்தும்

பிணிக்க விடாச் சட்டை!

தொய்வும் இல்லை இறுக்கம் உள்ள

தோலில் ஆன சட்டை!

உய்யும் வண்ணம் இயற்கை தந்த

ஊழிக் காலச் சட்டை!

தையல் கலைஞர் தம்மிடம் சென்றும்

தைத்தி டாத சட்டை!

மையக் கொள்ளை மழையும் வந்து

நனைந்தி டாத சட்டை!

பையும் இல்லை எளிதில் எங்கும்

பார்த்தி டாத சட்டை!

கையும் இல்லை மறைவில் என்றும்

கழற்றும் பாம்புச் சட்டை!

– தளவை இளங்குமரன், இலஞ்சி

27
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : வைரஸ்கள் வாழ்கின்றனவா?அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : வைரஸ்கள் வாழ்கின்றனவா?1st September 2020
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 161st September 2020தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16

மற்ற படைப்புகள்

36
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அ.யாழினிபர்வதம்

2025 வருக… வருகவே…

Read More
2022_July_n5
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
2nd July 2022 by ஆசிரியர்

படக்கதை: மாற்றம்தான் மாறாதது

Read More
2021_nov_v12
நவம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
27th October 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2023_mar_31
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
4th March 2023 by ஆசிரியர்

உலக நாடுகள் வரிசை : லாவோஸ்

Read More
2022_jan_v24
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
4th January 2022 by ஆசிரியர்

சாதனை : இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்துப் பெற்ற பல்துறைச் சாதனைச் சிறுமி

Read More
37
ஏப்ரல் 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
5th April 2025 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p